Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மழைக்காலத்தில் சருமத்தை மிருதுவாகப் பராமரிக்க 10 டிப்ஸ்!

பியூட்டி  டிப்ஸ்

ழைக்காலம் வந்தாலே சருமம் வறண்டுவிடும். உதடுகளில் தோல் உரியும். பாதங்களில் வெடிப்பு வரும். சருமம் சொரசொரப்பாகி அழகு மற்றும் ஆரோக்கியத்தைக் கெடுத்துவிடும். இதிலிருந்து நம் சருமத்தை காக்க வழிகாட்டுகிறார், ஆயுர்வேத காஸ்மெட்டாலாஜிஸ்ட் ரேகா ராவ். 

1. குளிப்பதற்கு முன்பு, சுத்தமான வெர்ஜின் தேங்காய் எண்ணெய்யை உடல் முழுக்க தடவி, பரபரவென தேய்த்து, 10 நிமிடங்கள்rekha ஊறவிடுங்கள். சுத்தமான தேங்காய் எண்ணெய் கிடைக்காதவர்கள், தேங்காய்ப்பாலைக் காய்ச்சினால், பியூர் தேங்காய் எண்ணெய் கிடைக்கும். அதை அப்ளை செய்யலாம். பிறகு, சருமத்துக்கு நல்ல மாய்ஸ்ரைசர் சோப்பினால் குளியுங்கள். (கவனம்: அதிக நறுமணம்கொண்ட சோப்புகளைத் தவிர்க்கவும். இது, சருமத்தை உலரச் செய்துவிடும்) தேங்காய் எண்ணெய்யில் இருக்கும் ஆன்டி ஆக்சிடன்ட், மழைக்காலத்தில் சருமத்தில் உண்டாகும் பாக்டீரியல் இன்பெக்க்ஷன்களை தடுக்கும். வந்தாலும் சரிசெய்து, சருமத்தை மெத்தென்று வைத்திருக்கும். 

 

 

முகத்தைக் கழுவிவிடுங்கள்

2. மிதமான வெந்நீரில் கால் டீஸ்பூன் மஞ்சள் பொடி, அரை டீஸ்பூன் காயவைத்த வேப்பிலைப் பொடி போட்டு நன்றாகக் கலக்கவும். அந்தத் தண்ணீரில் குளித்தால், சருமம் வழுவழுப்பாக இருப்பதுடன், இன்பெக்க்ஷனும் நெருங்காது. 

3. வேப்பிலை 20 கிராம், அதிமதுரம் 10 கிராம், கிச்சிலிக்கிழங்கு 20 கிராம், காயவைத்த ரோஜாபவுடர் 20 கிராம், நெல்லிப்பொடி 20 கிராம், லோதீராப்பட்டை 10 கிராம் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) ஆகியவற்றைப் பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். இதில், சிறிதளவை தண்ணீரில் குழைத்து ஹெர்பல் பேஸ்ட்டாக எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு சொட்டு தேங்காய் எண்ணெய்யை முகம் முழுக்கத் தடவிவிட்டு, அதன்மீது ஹெர்பல் பேஸ்ட்டை அப்ளை செய்யுங்கள். 10 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவிவிடுங்கள். வாரம் ஒருமுறை அல்லது இருமுறை இப்படிச் செய்துவந்தால், உங்கள் முகம் ஈரப்பதத்துடன் மிளிரும். மழைக்காலத்தில் முகத்தில் தோன்றும் கறுப்பு படலமும் வராது. எண்ணெய் சருமம், வறண்ட மற்றும் நார்மல் என மூன்று வகை சருமங்களுக்கும் இந்த பேஸ்ட்டைப் பயன்படுத்தலாம் என்பது கூடுதல் சிறப்பு. 

கை

4. உதடுகளில் தோல் உரிந்தால்... பாலாடை, வெண்ணெய், தேங்காய் எண்ணெய் இவற்றில் ஏதாவது ஒன்றை, இரவு படுப்பதற்கு முன்பு உதட்டில் தடவுங்கள். ஏ.சி. அறையில் உறங்குபவர்கள் இதை அவசியம் செய்வது நல்லது. உதட்டில் தோல் உரியாமல் தடுக்கலாம். 

5. பாத்திரங்கள் தேய்ப்பதால் இந்த சீசனில் கைகளில் ஈரப்பதம் இல்லாமல் உலர்ந்து போய்விடும். எனவே, பாத்திரம் தேய்த்து முடித்ததும் கைகளில் சாதாரண தேங்காய் எண்ணெய்யைத் தேய்த்துவிட்டாலே கைகள் பட்டுபோல இருக்கும். மறந்தும் நல்லெண்ணெய் தேய்த்துவிடாதீர்கள். உடல் குளிர்ந்துவிடும். 

6. பாதங்களில் வெடிப்பு வருவதும் இந்த சீசனில் சகஜம். எனவே, வெளியே சென்றுவிட்டு வீட்டுக்குள் வந்ததும், பாதங்களை வெந்நீரில் சுத்தமாக கழுவி, துடைத்து, தரமான மாய்ச்சுரைஸர் அப்ளை செய்யுங்கள். 

பாதம்

7. மழைக்காலத்தில் முகத்துக்கு பப்பாளி பழ ஃபேஷியல் மட்டும் செய்யுங்கள். மற்ற பழங்களின் ஃபேஷியல்கள் உடலை குளிரச் செய்துவிடும். கனிந்த பப்பாளி பழத்தை மிக்ஸியில் அரைத்து, முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊறவிட்டு, கழுவிட்டல் போதும். 

8. மழை நேரத்தில் சிலருக்கு முகச் சருமம் தளர்ந்துவிடும். கடலைமாவை பேஸ்ட்டாக்கி முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் கழித்து கழுவினால், சருமம் இறுக்கமாகும். 

9. உங்களுடைய எந்த அழகுசாதனப் பொருட்களிலும் முல்தானிமிட்டி இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இது சருமத்தை இன்னும் உலரச் செய்துவிடும். 

10. மழைக்காலம் முடியும் வரை... தயிர், கீரை, கருவாடு போன்ற உணவுகளைத் தவிர்க்கவும். சருமத்தில் அரிப்பு மற்றும் இன்பெக்ஷன் வராமல் தடுக்கலாம். 

இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க... மழைக்காலத்தை அழகுடன் கொண்டாடுங்க! 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close