மெனோபாஸ் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியவை, சாப்பிட வேண்டியவை!

ல்லாப் பெண்களும் வாழ்க்கையில் சந்தித்தே ஆகவேண்டிய ஒரு விஷயம் மெனோபாஸ். மெனோபாஸின்போது ரத்தப்போக்கு எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக்கூடாது, மெனோபாஸ் வருவதற்கு முன்பு கவனமாக இருக்கவேண்டிய விஷயங்கள், வந்தபிறகு சாப்பிடவேண்டிய மற்றும் செய்யவேண்டிய உடற்பயிற்சிகள் பற்றிச் சொல்கிறார், மகப்பேறு மருத்துவர் ஸ்ரீகலா பிரசாத். 

மெனோபாஸ்

மெனோபாஸ் சமயத்தில் ரத்தப்போக்கு எப்படி இருக்க வேண்டும்? 

''சில பெண்களுக்கு மாதம்தோறும் தவறாமல் வந்துகொண்டிருந்த பீரியட்ஸ் திடீரென்று நின்றுவிடும். சிலருக்கு மூன்று நாள் வந்துகொண்டிருந்த பீரியட்ஸ், இரண்டு நாள், ஒரு நாள் என்று படிப்படியாகக் குறைந்து நின்றுவிடும். இன்னும் சிலருக்கோ, இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வந்து, அப்படியே நின்றுவிடும். 

இந்த மூன்று வகைகளிலுமே ரத்தப்போக்கு வழக்கம்போல சாதாரணமாகவே இருந்துவிட்டால், உங்கள் மெனோபாஸ் காலகட்டத்தை, 'இதுவும் கடந்துபோகும்' என்று என்ஜாய் செய்யுங்கள். ஆனால், ரத்தப்போக்கு அதிகமாக இருந்தால், உடனடியாக மருத்துவரைப் பார்க்கவும். ரத்தப்போக்கு அதிகமாக வருவதற்குக் காரணம், கருப்பையின் உள்வரிச் சவ்வு தடிமனாக இருப்பதே. இந்தப் பிரச்னை, பின்னாளில் கருப்பை புற்றுநோயாக மாறவும் வாய்ப்புள்ளது''. 

மெனோபாஸ்

மெனோபாஸ் வருவதற்கு முன்பு கவனமாக இருக்கவேண்டிய விஷயங்கள்

''உடற்பருமனே எல்லாப் பிரச்னைகளுக்கும் மூலகாரணம். எனவே, முப்பதுகளிலேயே உங்கள் உடல்பருமனை விரட்டுங்கள். இதுதான் நீங்கள் கவனமாக இருக்கவேண்டிய முதல் விஷயம். நீரிழிவோ அல்லது ரத்தக்கொதிப்பு இருந்தாலோ அதை முதலில் கட்டுக்குள் கொண்டு வாருங்கள்.  

இந்த மூன்று விஷயங்களிலும் ஃபிட்டாக இருந்துவிட்டால், மெனோபாஸுக்குப் பிறகான காலத்தையும், எந்தவித மன உளைச்சலும் உடல் உபாதையும் இல்லாமல் சந்தோஷமாக கழிக்கலாம். 

சாப்பிடவேண்டியவை மற்றும் செய்யவேண்டியவை... 

  மெனோபாஸ்

* மெனோபாஸ் சமயத்தில், கால்சியம் சத்து உடம்பில் அதிகளவு குறையும். அதனால், பால், கேழ்வரகு இரண்டையும் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். 

* இரும்புச்சத்தும் குறையும் என்பதால், கீரைகளை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். 

*  முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் தினமும் சாப்பிடுங்கள். 

* காய்கறிகள் நிறையச் சாப்பிடுங்கள். 

* நீரிழிவு இல்லையென்றால் எல்லாப் பழங்களையும் சாப்பிடலாம். நீரிழிவு இருந்தால், கொய்யா, வெள்ளரிக்காய் மட்டும் போதும். 

* மற்றபடி தினமும் 40 நிமிட நடைப்பயிற்சி அவசியம். உடற்பயிற்சியைப் பொறுத்தவரை, உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி செய்யுங்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!