வெளியிடப்பட்ட நேரம்: 15:19 (29/11/2017)

கடைசி தொடர்பு:11:27 (30/11/2017)

இதனால்தான் பல்நோக்கு மருத்துவமனைகள் பெரிதும் விரும்பப்படுகின்றன! (Sponsored Content)

ஆரோக்கியமே சிறந்த செல்வமாகும். அப்படிப்பட்ட ஆரோக்கியம் குறையும்போது இன்றைய காலகட்டத்தில் சாதாரண மனிதன் ஒருவனுக்கு எழும் மிகப்பெரும் கேள்வியே, எங்கு சென்று மருத்துவம் பார்ப்பது என்பதுதான். வந்திருக்கும் நோய் பற்றிய சரியான புரிதலை நமக்களித்து, நம் பயத்தைப் போக்கி, நம்மைச் சிரத்தையுடன் நடத்தும், நியாயமான கட்டணத்தைப் பெரும் மருத்துவமனைகளுக்குச் செல்வது சிறப்பு என முடிவு செய்கிறோம். பல மருத்துவமனைகள் இருப்பினும் முதியோர்கள், நடுத்தர வயதினர், இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் என வீட்டில் உள்ள அனைவருக்குமான உடல்ரீதியான பாதிப்புகளுக்கு, ஒரே இடத்திலேயே சிகிச்சை வழங்கும் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல்கள் எனப்படும் பல்நோக்கு மருத்துவமனைகள் ஒருபடி மேலே விளங்குகின்றன.

முன்பெல்லாம் மருத்துவர் நோயாளிகளிடையே நல்ல உறவும், டாக்டர்களின் மேல் மக்களுக்குப் பெரும் நம்பிக்கையும் மரியாதையும் இருந்து வந்தன. ஆனால், எப்போது மருத்துவம் கார்ப்பரேட்களின் கைகளில் சென்றதோ அன்றிலிருந்தே மக்களுக்குப் பெரிய மருத்துவமனைகள்மீது ஒருவித அவநம்பிக்கை கலந்த பயம் வந்துவிட்டது. இந்தத் தேவையற்ற பயத்தைக் களைந்து, மீண்டும் நம்பிக்கையைச் சாமானியர்களுக்குத் திருப்பி வரச்செய்வது பெரும் மருத்துவமனைகளின் கடமையாகும்.

இதனாலேயே, சேவை என்ற ஒரே கொள்கையைக்கொண்டு சென்னை அண்ணாநகரில் இயங்கி வருகிறது “வீஹா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை”. பொது மருத்துவம், அனைத்து வகை எலும்பு சிகிச்சை, மகப்பேறு மற்றும் மகளிர்நல மருத்துவம், நரம்பியல், பொது மற்றும் லேப்ரோஸ்கோபிக் அறுவைசிகிச்சை, சிறுநீரகவியல் (நெப்ராலாஜி, யூராலாஜி), காது, மூக்கு, தொண்டை, உட்சுரப்பியல், சைக்காட்ரி, புற்றுநோயியல், கண் சிகிச்சை, முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்புப் பிரிவு எனப் பல பிரிவுகளைக் கொண்டுள்ளது வீஹா. 24 மணி நேர சேவை, வெளி நோயாளிகளுக்கான ஆலோசனை மையம், 24 x 7 மருந்தகம், தீவிர சிகிச்சைப் பிரிவு, பரிசோதனை மையங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் சேவை என அவசிய மருத்துவ வசதிகளும் இங்குண்டு.

நோயாளிகளுக்கு முக்கியம் சிறப்பு கவனிப்பு:

சில வகையான உடல் பிரச்னைகளுக்குப் பிரத்யேக கவனிப்பு அவசியமாகிறது. மருத்துவமனையில் தங்கி, சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது பணியாளர்கள் நோயாளிகளுக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்வார்கள். வீஹா மருத்துவமனையின் சிறப்பு என்னவென்றால், நோயுற்றவருக்கு கனிவான மருத்துவத்தை வழங்குவதோடு, நோயாளி மற்றும் நோயாளியைக் கவனித்துக்கொள்ளும் அவரின் உற்றாருக்கும் இனி நோய் அண்டாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டுமென்ற பயிற்சியும் செயல்முறை விளக்கமும் வழங்கப்படுகிறது. இதனால் பிற்காலத்தில் நோய்வருவது தடுக்கப்படுகிறது. நோயைப் போக்குவதோடு மட்டுமல்லாமல், இனிவரும் காலங்களிலும் உடலில் நோய் வரமால் “வருமுன் காப்போம்” எனச் சிந்தித்துச் செயல்படுதல் பாராட்டுதலுக்குரியது.

உடல் ஆரோக்கியத்தில் சூழலின் பங்கு:

உடலின் ஆரோக்கியத்தில் மனம் பெரும் பங்கு வகிக்கிறது. உண்மையில் மனதைக் கட்டுக்கோப்பாகவும் உற்சாகத்துடனும் வைத்துக்கொண்டால் உடலை வியாதிகள் அண்டுவது பெரும்பாலும் தவிர்க்கப்படும். இனிமையான சூழல் மற்றும் வேலை செய்யும் மருத்துவர் மற்றும் செவிலியர்களின் கனிவான சேவை மனதுக்குத் தெம்பைக் கொடுத்து, பல நாள்கள் வாட்டி வதைத்த வியாதியை சில நாள்களிலேயே குணப்படுத்திவிடுகிறது. பிரத்யேகமாக ஒவ்வொரு நோயாளிக்கும் தேவையான அக்கறையான கவனிப்பு இங்கு வழங்கப்படுவதால், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு இது சிறந்த இடமாக விளங்குகிறது. இங்கு வழங்கப்படும் யோகப்பயிற்சிகள் கர்ப்பிணிகளுக்குச் சிக்கலற்ற பிரசவம் ஏற்பட பெரிதும் உதவுகிறது.

தொழில்நுட்ப மேம்பாடு:

எந்தவித உடல் சார்ந்த கோளாறாக இருந்தாலும், அனுபவம் வாய்ந்த கைதேர்ந்த டாக்டர்கள், பணியாளர்கள் மற்றும் உலகத்தரத்திலான புதிய நவீன மருத்துவ உபகரணங்களைக்கொண்டு அதை சரிசெய்யும் வசதியைப் பெற்றுள்ளது வீஹா. இதுமட்டுமல்லாது, சர்வதேச அளவில் மருத்துவத்தில் ஏற்படும் புரட்சிகளையும் புதிய கண்டுபிடிப்புகளையும் உன்னிப்பாகக் கவனித்து அதற்கு ஏற்ற முறையில் தன்னை மேம்படுத்திக்கொள்வது மற்றுமொரு தனி சிறப்பு. முன்பெல்லாம், வியாதிகளைத் தரம்பிரித்து, ஆய்ந்து அதற்குத் தகுந்த மருந்துகளை வழங்குவதில் தொழில்நுட்ப வசதியின்மையால் ஒரு பின்னடைவு மருத்துவத் துறையில் இருந்துவந்தது. இது இந்நாளில் பெருமளவில் குறைந்துள்ளது. காரணம், அறிவியல் முன்னேற்றம். சிறு உதாரணமாக, இங்கு DRX 9000 எனும் நவீன சாதனம் மூலமாக, முதுகுத்தண்டில் பிரச்னை உள்ளவர்களுக்கு அறுவை சிகிச்சை இல்லாமலேயே, பயிற்சிகளை எளிமையாக வழங்கி குணப்படுத்த முடிகிறது.

ஆறு முக்கிய அம்சங்கள்:

மருத்துவமனைகள் சிறப்பாகச் செயலாற்ற ஆறு அம்சங்கள் மிக அவசியம் - தேவை, சேவை, கட்டமைப்பு, ஒத்துழைப்பு, பணியாட்கள் மற்றும் சூழல். தனியாரோ, பொது மருத்துவமனைகளோ இந்த அம்சங்களை அடிப்படையாகக்கொண்டு செயல்படும்பட்சத்தில், சிறந்த மருத்துவச் சேவையை மக்களுக்கு வழங்க முடியும்.

இதுபோன்ற தனிச்சிறப்புகள்தான் பல்நோக்கு மருத்துவமனைகள் மக்களின் ஆதரவைப் பெற காரணங்களாக உள்ளன. கோயில்களைவிட மருத்துவமனைகளில்தான் நேர்மையாகப் பிரார்த்தனைகள் செய்யப்படுகின்றன. இப்படி பல உண்மையான பிரார்த்தனைகளை நிறைவேற்றி, மனித உயிர்களுக்கு உதவிவருகிறது வீஹா மருத்துவமனை.

விவரங்களுக்கு: vihaahospital.com

நீங்க எப்படி பீல் பண்றீங்க