தேசிய மருத்துவ ஆணையம்’ வரவேற்கத் தகுந்ததுதானா? - மருத்துவர்களின் கருத்து என்ன? #NationalMedicalCommission

டந்த வாரம் நாடாளுமன்றத்தில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவால் தாக்கல்செய்யப்பட்ட ஒரு மசோதா, நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களை வீதிக்கு வந்து போராடவைத்தது. இந்திய மருத்துவக் கவுன்சிலைக் கலைத்துவிட்டு தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்காக தாக்கல் செய்யப்பட்ட மசோதாதான் அது. 'மக்கள் நலனுக்கு எதிரான இந்த மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்' என்ற கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தத்தைத் தொடங்கினார்கள் மருத்துவர்கள். இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் தொடங்கப்பட்ட இந்த வேலை நிறுத்தம், நாடாளுமன்ற தேர்வுக்குழுவின் பரிந்துரைக்கு மசோதா அனுப்பப்படும் என்ற அறிவிப்பு வந்த பின்னர்தான் கைவிடப்பட்டது. எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள், மருத்துவச் செயற்பாட்டாளர்கள்... எனப் பல தரப்பிலிருந்தும் இந்த மசோதாவுக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

தேசிய மருத்துவ ஆணையம்

எம்.பி.பி.எஸ் முடித்த மாணவர்கள், ஓராண்டுப் பயிற்சி மருத்துவர்களாக வேலை செய்த பின்னர் மத்திய அரசின் சார்பில் நடத்தப்படும் தேர்வில் வெற்றி பெற்றால்தான் மருத்துவராகப் பதிவுசெய்ய முடியும். எம்.பி.பி.எஸ் மட்டுமில்லாமல், பி.டி.எஸ் முடித்த பல் மருத்துவர்களும், `ஆயுஷ்’ என்று சொல்லப்படும் ஆயுர்வேதா, யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி போன்ற மருத்துவப் படிப்புகளை முடித்தவர்களும்கூட ஆறு மாத காலம் பிரிட்ஜ் கோர்ஸ் முடித்தால் நவீன மருத்துவம் செய்யலாம், மேற்கண்ட இரு அம்சங்களும்தாம் மருத்துவர்கள் போராடுவதற்கு முக்கியக் காரணமாக அமைந்தன.

`சித்தா, ஆயுர்வேதா போன்ற பாரம்பர்ய மருத்துவம் பயின்றவர்கள் நவீன அலோபதி சிகிச்சை மேற்கொண்டால் பக்கவிளைவுகள் ஏற்படலாம்’ என்று அலோபதி மருத்துவர்கள் சொல்கிறார்கள். `ஆங்கில மருத்துவம் படிப்பவர்களுக்கும் சித்தா, ஹோமியோபதி படிப்பவர்களுக்கும் வகுப்புகள், பயிற்சிகள் எல்லாம் ஒரே மாதிரியாகத்தான் நடைபெறும். அலோபதி மருத்துவம் செய்யும் தகுதி இருந்தும், சட்டத்தில் இடம் இருந்தும் எங்களை சிகிச்சையளிக்கவிடாமல் தடுக்கிறார்கள்’ என்று ஆயுஷ் மருத்துவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

மேலும், `இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் சட்டம் - 1970, பிரிவு - 17 மத்திய ஹோமியோபதி கவுன்சில் சட்டம் - 1973 பிரிவு - 15, மாநில அரசின் சட்டங்களான தமிழ்நாடு ஒருங்கிணைந்த மருத்துவச் சட்டம் - 1956, தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவச் சட்டம் - 1971, தமிழ்நாடு சித்த மருத்துவச் சட்டம் -1997 ஆகிய ஐந்து சட்டங்களின்படி சித்தா, ஹோமியோபதி, யுனானி, யோகா, ஆயுர்வேதா போன்ற படிப்புகளை முறையாக ஐந்து வருடங்கள் படித்தவர்கள் ஆங்கில மருத்துவமும் செய்யலாம்’ என்று ஆயுஷ் மருத்துவர்கள் கூறுகிறார்கள் .

இந்திய மருத்துவக் கவுன்சில்

இந்தநிலையில் தமிழ்நாடு அலோபதி மருத்துவர்களின் சங்கமான, இந்திய மெடிக்கல் அசோசியேஷனின் தலைவர் மருத்துவர் ஜெயபாலிடம் பேசினோம்.

``போதிய மருத்துவர்கள் இல்லை. அதனால்தான் இந்த ஏற்பாடு என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இது போலியாக உருவாக்கப்படும் டாக்டர் ஜெயபால்ஒரு பிம்பம். ஒட்டுமொத்த இந்தியாவில் பத்து லட்சம் மருத்துவர்கள், தமிழ்நாட்டில் மட்டும் 1,18, 000 மருத்துவர்கள் பதிவுசெய்து வைத்தியம் செய்துவருகிறார்கள். மருத்துவர்கள் பற்றாக்குறை என்பது தமிழ்நாட்டில் சுத்தமாக இல்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பத்தாயிரம் காலிப் பணியிடங்கள் இருக்கும் வேலைக்கு இருபதாயிரம் மருத்துவர்கள் விண்ணப்பிக்கிறார்கள்.

ஒட்டுமொத்த இந்தியாவில் சில இடங்களில் அலோபதி மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கலாம். ஆனால், நகரங்களில் பற்றாக்குறை இருக்க வாய்ப்பில்லை. ஒரு சில கிராமங்களில் வேண்டுமானால் இருக்கலாம். அந்த இடங்களில் அலோபதி மருத்துவர்களைப் பணியமர்த்தவேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. ஆனால் அதைக் காரணம் காட்டி மாற்று மருத்துவம் பயின்றவர்களும் ஆறு மாதகால பயிற்சி முடித்தால் நவீன மருத்துவம் பார்க்கலாம் என்பது அடிப்படையிலேயே தவறான, ஆபத்தான ஒரு முடிவு. இதனால் பல விளைவுகள் உண்டாகும்.

ஆய்வகப் (Lab) பயிற்சிகள், பரிசோதனைகள் போன்றவற்றில் இரண்டு மருத்துவர்களும் ஒரே மாதிரியாகத்தான் படித்து வெளியில் வருகிறார்கள். அந்த வசதிகள் மாற்று மருத்துவத்தில் இல்லை. அதனால் அலோபதி மருத்துவத்தையும் படிக்கிறார்கள்.. ஆனால், நோய்க்குக் கொடுக்கப்படும் மருந்துகள் வேறு வேறானவை.

உடலின் ஒவ்வொரு பாகத்துக்கும் தனித்தனி சிறப்பு மருத்துவப் படிப்புகள் உள்ளன. அதைப் பற்றி படித்தவர்கள்தாம் அதற்கு சிகிச்சையளிக்க முடியும். அலோபதி மருத்துவத்துக்குள்ளேயே இப்படி இருக்கும்போது, மாற்று மருத்துவம் பயின்றவர்கள் எப்படிச் சிகிச்சயளிக்க முடியும்?

மருத்துவ மாணவிகள்

சட்டத்தில் இடம் உள்ளது என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் அவை அனைத்திலும் `எமெர்ஜென்சிக்கு...’ என்று ஒரு வார்த்தை உள்ளது. அதை லாகவமாக மறைத்துவிடுகிறார்கள்.

சித்தா, ஆயுர்வேதா போன்ற மாற்று மருத்துவத்தின் மீதோ, அந்த மருத்துவர்கள் மீதோ எங்களுக்கு எந்த வெறுப்பும் இல்லை. பாரம்பர்ய மருத்துவமும் நன்றாக வளர வேண்டும். அதற்கு, அந்த மருத்துவர்களை அதிகமாகத் தேர்வுசெய்து பணியில் அமர்த்தினால் அது நடக்கும். ஆனால் `அவர்களும் அலோபதி மருத்துவம் பார்க்கலாம்’ என்றால் அலோபதி மருத்துவம்தான் வளர்ச்சியடையும்.

இந்த ஆணையம் உருவாக்கப்படுவதற்குப் பின்னால் பல அரசியல் காரணங்கள் உள்ளன.. அலோபதி மருத்துவம் மட்டும் இல்லாமல் மருத்துவர் தமிழ்ராஜன்பாரம்பர்ய மருத்துவத்தையும் கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கத்தான் இந்த ஏற்பாடு. இந்த ஆணையத்தை நாங்கள் முழுமையாக எதிர்க்கிறோம்’’ என்கிறார் மருத்துவர் ஜெயபால்.

இது தொடர்பாக தமிழ்நாடு ஆயுஷ் மருத்துவ சங்கத்தின் செயலாளர் தமிழ் ராஜனிடம் பேசினோம்... ``மத்திய அரசால் கொண்டுவரப்படவுள்ள தேசிய மருத்துவ ஆணையத்தை நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம். கண்டிப்பாக அதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் பாஸ் ஆக வேண்டும். சித்தமருத்துவத்துக்கு, அலோபதி மருத்துவத்துக்கு என்று தனித்தனியாக கவுன்சில்கள் தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளன. அனைத்து கவுன்சில்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் முயற்சியே இது. `பாரம்பர்ய மருத்துவம் பயின்றவர்கள் அலோபதி மருத்துவம் பார்க்கலாம்’ என்று 1970 சட்ட விதியில் (Central Council of Indian Medicine) கூறப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் போராட்டம்

ஐந்தரை வருடங்கள் பயின்ற எங்களுக்கு இந்த ஆறுமாத பிரிட்ஜ் கோர்ஸ் என்பதே தேவையில்லை. அது இல்லாமலேயே எங்களால் சிகிச்சையளிக்க முடியும். கிராமங்களில் வேலை செய்வதற்கு இது ஒரு பயிற்சியாக இருக்கும் என்பதால் மட்டுமே அது தேவைப்படுகிறது. கிராமப்புறங்களில் அலோபதி மருத்துவர்கள் யாரும் பணிபுரிய விரும்புவதில்லை. எங்களையும் பணிபுரிய அனுமதிக்க மறுக்கிறார்கள்’’ என்கிறார் தமிழ்ராஜன்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!