அடிக்கடி விக்கல் வருகிறதா? உடனே கவனியுங்கள்...

இயல்பாக சுவாசம் நடைபெறும்போது விக்கல் உண்டாவதில்லை. சில சமயம் இரைப்பையில் இருக்கும் அமிலத்தால் தாக்கமடைந்து செல்லும் காற்று நுரையீரலை அடையும்போது, விக்கல் உண்டாகிறது. உணவில் அதிக அமிலம் சேரும்போதும் விக்கல் உண்டாகும். வேகமாக சாப்பிடுவது, சூடாக உண்பது, போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, ஒத்துக்கொள்ளாத மருந்துகளை எடுத்துக்கொள்வது போன்ற பல வகைகளில் விக்கல் உண்டாகிறது. அடிக்கடி விக்கல் வந்தால், உணவில் அதிக காரம், மசாலாப் பொருள்களைத் தவிர்ப்பது நல்லது. 

 

விக்கல்இதைத் தவிர, விக்கல் தொடர்ந்து வருகிறது என்றால் அது நோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம். கல்லீரல் கோளாறு, சிறுநீரகக் கோளாறு, இரைப்பைப் புண், மூளைக் காய்ச்சல், நுரையீரல் நோய்த்தொற்று, குடல் அடைப்பு, கணைய அழற்சி போன்ற நோய்கள் இருப்பவர்களுக்கும் அடிக்கடி விக்கல் வரும். விக்கல் சில நிமிடங்களில் நின்று போனால் கவலை இல்லை. தொடர்ந்து வந்தால், உடனடியாக மருத்துவரை ஆலோசித்து சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம். 

 

குளிர்ந்த நீர் குடிப்பது, ஆழ்ந்து சுவாசிப்பது, தும்முவது, பிளாஸ்டிக் கவரில் முகத்தை வைத்து சுவாசிப்பது போன்ற செயல்களால் விக்கலை நிறுத்திவிடலாம். அப்படியும் நிற்காவிட்டால், உடனடியாக  மருத்துவமனைக்குச் சென்றுவிடுங்கள். அதுவே பாதுகாப்பானது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!