வலிப்பு வந்தால் கையில் சாவி தருவதுதான் தீர்வா? #PurpleDay | Awareness day special article about Epilepsy

வெளியிடப்பட்ட நேரம்: 17:31 (26/03/2018)

கடைசி தொடர்பு:17:38 (26/03/2018)

வலிப்பு வந்தால் கையில் சாவி தருவதுதான் தீர்வா? #PurpleDay

purple day

பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த காலைப்பொழுது, காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு அனைவரும் வேகமாய் ஓடிக்கொண்டிருந்தார்கள். சிறிதுநேரம் இப்படியே நகர்ந்துகொண்டிருந்த கூட்டத்தின் நடுவில் ஒருவர் பொத்தென்று கீழே விழுந்தார். அவரின் தசைகள் இறுக்கமாகி உடல் முழுவதும் உதற ஆரம்பித்து, வாயிலிருந்து நுரைத் ததும்பி வெளியே வந்தது. கீழே விழுந்தவர் சில நிமிட போராட்டத்திற்கு பிறகு நினைவுக்கு வந்தார். ஆம், அவருக்கு வலிப்பு வந்திருந்தது. 

இந்த நோயால் பாதிக்கப்பட்ட காசிடி மேகன் (Cassidy Megan) இது குறித்த விழிப்புஉணர்வு மக்களுக்கு வேண்டும் என நினைத்தார். எனவே காசிடி மேகனும், நோவா ஸ்காடியா - (The Epilepsy Association) இணைந்து வருடந்தோறும் மார்ச் 26 ம் நாளை வலிப்பு விழிப்புஉணர்வு நாளாகக் கடைப்பிடித்தனர். இந்த தினம்  ``ஊதா நாள் "(Purple day) என்றும் அறியப்படுகிறது. மக்கள் அனைவரும் ஊதா நிற ஆடையை அணிந்து வலிப்பு நோய் பற்றிய விழிப்புஉணர்வை ஏற்படுத்துகின்றனர். 

World Health Organization -  ஆய்வறிக்கையின்படி உலக அளவில் 50 மில்லியன் மக்கள் வலிப்புநோயினால் (Epilepsy) பாதிக்கப்படுகின்றனர்.   மூளைச் செல்கள் மற்றும் மூளை நரம்புச் செல்களில் ஏற்படும் பாதிப்பின் விளைவாகவே வலிப்பு  உண்டாகிறது. ஒரு மனிதனின் வாழ்நாளில் எப்பொழுது வேண்டுமானாலும் வலிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

காரணங்கள் :

சில நேரங்களில் இந்த நோய்க்கான காரணம் என்ன என்பதை  கண்டறியமுடிவதில்லை. இருந்தாலும், தலைப் பகுதியில் ஏற்படும் காயங்கள், நரம்பு மண்டலக் குறைபாடு, விபத்தினால் தலைப்பகுதியில் ஏற்படும் காயங்கள், மூளைக்கட்டிகள் போன்றவை வலிப்பு ஏற்பட காரணமாக அமைகிறது. 

முதலுதவி :

ஒருவருக்குத் திடீரென வலிப்பு வந்துவிட்டால் முதலில் வலிப்பு வந்தவரின் பக்கத்தில் கூரான பொருள்கள் எதுவும் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அமைதியாக அவரைத் தரையில் படுக்கவைத்து கீழே விழுவதிலிருந்து தவிர்க்கலாம். தலை வேகமாகத் தரையில் படுவதைத் தவிர்ப்பதற்கு, தலைக்கு மென்மையான பொருள்களை வைக்கலாம். இறுக்கமான ஆடையைத் தளர்த்தி விடலாம். வலிப்பு வந்தவரை ஒருபக்கமாகச் சாய்த்து வாயில் உள்ள உமிழ்நீர் முற்றிலும் வெளிவரும்படி செய்யலாம். இதன்மூலம் மூச்சுப்பாதையில் அடைப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளமுடியும். வலிப்பு எவ்வளவு நேரம் வருகிறது என்பதை கண்டறிவது அவசியம். பொதுவாக 5 நிமிடங்களுக்குள் வலிப்பானது சரியாகிவிடும். அப்படியில்லையெனில் மருத்துவமனையை உடனடியாக அணுகுவது சிறந்தது. வலிப்பு நின்றவுடன் நோயாளியை ஓய்வெடுக்க அல்லது தூங்க விட வேண்டும். 

பொதுவாக வலிப்பின் வகை மற்றும் அறிகுறியின் அடிப்படையில் நோயாளிக்குச் சிகிச்சை வழங்கப்படுகிறது.

வகைகள் : 
    * இடியோபதிக் ( ldiopathic).      
        இதில் நோய்க்கான காரணம் என்ன என்பது  தெரியாது.
   * க்ரிப்டோஜெனிக் (Cryptogrnic):
       நோய்க்கான காரணம் இருந்தாலும், மருத்துவரால் குறிப்பிட்டுக் கூற இயலாது. 
   * சிம்டோமேடிக் ( Symptomatic)  :
        நோய்க்கான காரணம் தெளிவாகத் தெரியும். 

வலிப்பு நோய்

சிகிச்சை :
 

வலிப்பு நோயின் வகை மற்றும் அறிகுறிகளுக்கு ஏற்றவகையில் மருத்துவர் சரியான சிகிச்சை அளிக்கும் போது வலிப்பு நோய் கட்டுப்படுத்தப்படும். மருத்துவரின் அறிவுரைப்படி பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை (Anti Epileptic drugs) உட்கொள்ள வேண்டும். வலிப்பு கட்டுப்படுத்தப்படாதவர்களுக்கு மூளை அறுவை சிகிச்சை மற்றும் கீட்டோஜெனிக் டயட் (அதிக கொழுப்பு சத்துள்ள உணவு)  பரிந்துரைக்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்