வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (27/03/2018)

கடைசி தொடர்பு:14:40 (27/03/2018)

ஹேர்ஸ்டைல் முதல் ஹீல்ஸ் வரை... வெயிலுக்கு இதமான ஆடை அணிகலன்கள்!

கோடைக்காலம் வந்தாச்சு. அடிக்கும் வெயிலுக்கு என்ன அக்ஸசரிஸ் பயன்படுத்தினாலும் செட் ஆகாமல், வியர்த்துக் கொட்டும். வியர்வை பட்டு உடம்பில் அணிகலன்கள் இருக்கும் இடங்கள் கறுத்துப் போகும் எனப் பயந்து, அக்ஸசரிஸ்களை வெறுக்கும் பெண்கள் உண்டு. அவர்களுக்கான எளிமையான டிரஸ்ஸிங் மற்றும் அணிகலன்கள் தேர்வு பற்றிச் சொல்கிறார், ஸ்டைலிஸ்ட் அருள்மொழி. 

கோடைக்காலத்திற்கேற்ற ஆடைகள் 

 

பொதுவாக, சம்மரில் நம்மை எளிமையான தோற்றத்தில் வைத்துக்கொள்வது நேர்த்தியான லுக்கை தரும். நிறையப் பெண்கள், ட்ரண்டியாக இருக்கிறோம் என்கிற பெயரில், தங்கள் நிறம் மற்றும் உடல்வாகுக்குப் பொருந்தாத அணிகலன்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். இதனால், பல பின்விளைவுகளைச் சந்திக்கின்றனர். ஃபேஷன் தொடர்பான பொருளை வாங்குவதற்கு முன்பு ஒன்றுக்குப் பலமுறை சிந்திக்க வேண்டும். அதிலும், வெயில் காலத்தில் அதிகப்படியான சருமப் பிரச்னைகள் வரும். எனவே, ஆடை முதல் அக்ஸசரிஸ் வரை எல்லாவற்றிலும் கவனமாக இருக்க வேண்டும். 

ஆபரணங்கள்: 

கோடைக்காலத்துக்கு நீண்ட, லைட் வெயிட் காதணிகளைப் பயன்படுத்தலாம். இதனால், மற்ற அணிகலன்களை அணியாவிட்டாலும், உங்கள் முகத்தை அழகாகக் காட்டும். நீங்கள் சிறிய வகை காதணியில் விருப்பம்கொண்டவர் எனில், கண்களில் நேர்த்தியாக மையிட்டு, மைல்டு சார்ட் செயின் ஒன்றைக் கழுத்தில் அணியுங்கள். இது, உங்களுக்கு ஸ்டைலிஸ் லுக்கை அளிக்கும். 

கோடைக்காலம்

ஹேண்ட்பேக்: 

குட்டையான ஹேண்ட்பேக்குகளே சம்மருக்கு ஏற்றது. அன்றாடம் பயன்படுத்தும் பொருள் என்பதால், லைட் வெயிட் ஹேண்ட்பேக் வாங்குங்கள். தோள் பகுதியில் வரும் ஸ்ட்ராப், பட்டையாக இருந்தால், அதிக அழுத்தம் தராது. ஹேண்ட்பேக்கை ஒரே பக்கமாகத் தூக்கிச்சென்று தோளில் வலி மற்றும் தழும்பு ஏற்படாமல் இருக்க இரண்டு தோள்களிலும் மாட்டிக்கொள்ளும்படியான பின்பக்க பேக்கைப் பயன்படுத்துங்கள். ஷோல்டர் பேக்குகள் பயன்படுத்தும்போது, வலது இடது என அடிக்கடி மாற்றி அணியுங்கள். 

ஹேண்ட் பேக்

சன் கிளாஸ்: 

உங்களுக்கு பெர்பெக்ட் லுக் கொடுக்க, சன் கிளாஸ் மட்டும் போதுமானது. வட்டம், நீளம், சதுரம் என எந்த வடிவ கண்ணாடிகளை அணிவதாக இருந்தாலும், உங்கள் முகத்துக்கு ஏற்றதாகத் தேர்ந்தெடுங்கள். சன் கிளாஸை வாங்கும்போது, உங்கள் சருமத்தின் நிறத்துக்குப் பொருத்தமானதாகப் பார்த்து வாங்குங்கள். 

மேக்கப்: 

கோடைக்காலத்தில் மேக்கப் அதிகம் போடுவதை தவிர்க்கவும். வியர்வையில் மேக்கப் கலைந்து உங்கள் தோற்றத்தையே கெடுத்துவிடும். வெளியில் கிளம்புவதற்கு முன்னர், சன்ஸ்கிரீன் போடுவது அவசியம். வெளியே செல்ல வேண்டுமானால் மட்டும் லைட் மேக்கப் போடலாம். லிப்ஸ்ட்டிக்கை அடர் நிறங்களில் பயன்படுத்தலாம். வாட்டர் ப்ரூப் ஐ -லைனர், காஜல் பயன்படுத்துவது நல்லது. 

டிரஸ்ஸஸ்

ஆடை: 

வெயில் காலத்தில் ஜீன்ஸ் அணிவதைத் தவிர்த்து, மெலிதான காட்டன் குர்தாக்கள், சல்வார்கள், ஷார்ட் டாப்ஸ், ஷார்ட் பேன்ட் போன்றவற்றைத் தேர்வுசெய்யலாம். கறுப்பு நிற ஆடைகளைத் தவிர்த்து, வெளிர் நிற ஆடைகளை அணியுங்கள். நீட் லுக் தருவதோடு சரும பாதிப்புகளையும் தவிர்க்கலாம். பலாஸோ பேன்ட்கள் இப்போது குறைவான விலையில் கிடைக்கிறது. இது, கோடையில் உங்களை ஃப்ரீயாக வைத்திருக்க உதவும். ஸ்லீவ்லஸ் ஆடைகள் சம்மருக்கு பெஸ்ட் சாய்ஸ். எம்ராய்டரி, ஸ்டோன் வைத்த ஆடைகளைத் தவிர்க்கவும். 

மேக்கப்

காலணிகள்: 

ஃப்லிப் ஃப்ளாப்ஸ் காலணிகள் சம்மருக்கு ஏற்றவை. பிளாஸ்டிக், லெதர் போன்றவற்றால் தயாரிக்கப்படும் இந்தக் காலணிகள், சம்மருக்கு பெஸ்ட் சாய்ஸ். ஜீன்ஸ், சல்வார் போன்ற கேஷுவல் உடைகளுக்கும் சரியான ஜோடியாக இருக்கும். வெயில் காலத்தில் சற்று தளர்வான காலணிகளையே அணியவும்.

காலணிகள் 

ஹேர்ஸ்டைல்: 

ஹேர்ஸ்டைல்

ஃப்ரீ ஹேர் எரிச்சலைத் தரும். எனவே, ஹைபோனிட்டையில், பஃவ் ஹேர், ஹைபன் போன்றவை சம்மருக்கு ஏற்றவை. 

ஸ்டோல்: 

ஸ்டோல்

வெளியே கிளம்பும்போது, முகத்தைச் சுற்றி ஸ்டோல் இல்லாமல் பெண்கள் கிளம்புவது இல்லை. கோடையில் காட்டன் ஸ்டோல்களைப் பயன்படுத்துங்கள். முகம், தலையில் அதிகப்படியான வியர்வை ஏற்படுவதைத் தவிர்க்கலாம். சருமப் பிரச்னைகளும் வராது.

 


டிரெண்டிங் @ விகடன்