Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கை கழுவுதல் அவசியத்தைக் குழந்தைகளிடம் இப்படிச் சொல்லுங்கள்!

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை நோய்த் தொற்று என்பது ஏற்படக்கூடிய ஒன்றே. ஆனால், குழந்தைகளைப் பொறுத்தவரை நோய்த்தொற்று என்பது மிக எளிதாகத் தாக்கக்கூடியது. காரணம் அவர்களின் விளையாட்டு குணத்தால். சுத்தம், சுகாதாரம்... இந்த இரண்டும் சரிவர இருந்தாலே நோய்த்தொற்றிலிருந்து நாம் நம்மைக் காத்துக்கொள்ளலாம்.வெளியில் சென்று வீட்டுக்குத் திரும்பும்போது கைகளை நன்றாகக் கழுவினாலே நோய்த் தொற்று ஏற்படாது என்கிறார் சென்னையைச் சேர்ந்த குழந்தை நல மருத்துவர் பிரேம்குமார்.டாக்டர் .பிரேம் குமார்

``அன்றாடம் பல் துலக்குதல், குளித்தல், சாப்பிடுதல் போன்றுதான்... கைகழுவுதலும் மிக அவசியமான ஒன்று. சில நடவடிக்கைகளுக்கு முன்பும், சில நடவடிக்கைகளுக்குப் பின்பும் கையைக் கழுவிவிட வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல், வாந்தி பேதி போன்ற பெரும்பாலான நோய்கள் தொற்றுகள் கை மூலமே ஏற்படுகிறது. சரி அப்படி முக்கிய பங்கு வகிக்கும் கை கழுவுதலை எப்போதெல்லாம் செய்ய வேண்டும்?  

 * காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் கைகளை நன்கு சுத்தமாகக் கழுவ வேண்டும். பிறகுதான் பல் துலக்க வேண்டும்.

* சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் கைகளை அவசியம் கழுவ வேண்டும்.

* உங்கள் வீட்டில் வளர்ப்புப் பிராணிகள் இருக்கும்பட்சத்தில், அதைத் தொட்ட பிறகு கைகளை கழுவ வேண்டும். இல்லையெனில் நிச்சயம் நோய்த்தொற்று ஏற்படும்.

* வீட்டிலுள்ள பெரிய குழந்தைகள்... இரண்டு வயதுக்குட்பட்ட சிறு குழந்தைகளைத் தொடுவதற்கு முன்பு நிச்சயம் கைகழுவ வேண்டும்.

 * ஒவ்வொரு முறை கழிப்பறை சென்று வந்ததும் கை கழுவ வேண்டும் என்பதைச் சிறு வயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுப்பது அவசியம்.

* உங்கள் வீட்டில் யாரேனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்கள் எனில், அவர்களைத் குழந்தைகள் கைகளைக் கழுவாமல் தொடக் கூடாது. அப்படித் தொடும்பட்சத்தில் குழந்தைகளின் கையில் உள்ள கிருமிகளால் நோய்பட்டு இருப்பவர்கள் இன்னும் பாதிக்கப்படுவார்கள். அதே போன்று நோயால் பாதிக்கப்பட்டவரைத் தொட்ட பின்பும் கைகளை கழுவச் செல்வது அவசியம். இல்லையேனில் நோயாளிகளின் மூலம் இவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.

* அதேபோல் இருமல், சளி பிடித்திருந்தால் வீட்டில் உள்ள பொருளையோ, மற்றவர்களையோ தொடும் முன், தொட்ட பிறகு கை கழுவுதல் அவசியம். 

கை கழுவும் முறைகள் :

* கைகளை அவசர அவசரமாக 2-3 விநாடிகளில் கழுவக் கூடாது. குறைந்தது 40 விநாடிகளிலிருந்து ஒரு நிமிடம் வரை கை கழுவ வேண்டும்.· 

* அதிக ரசாயனம் கலந்த சோப்புகள், கிரீம்களைப் பயன்படுத்தக் கூடாது. அதற்குப் பதில் குழாய்த் தண்ணீரில் கைகளை நீட்டிக் கழுவ வேண்டும். அல்லது ஆன்டி செப்டிக் லிக்வைட் சோப்பைப்  பயன்படுத்தலாம். அப்படிப்  பயன்படுத்தும் பட்சத்தில் அதில் 60% ஆல்ஹகால் இருப்பது அவசியம்.

 * இரு உள்ளங்கைகளையும் நன்றாகத் தேய்க்க வேண்டும். நக இடுக்குகளில் தண்ணீர் விட்டுக்  கழுவ வேண்டும். 

கை கழுவுதல்

* இப்போது விரல்களை மடக்கி, இடது உள்ளங்கையின் மேல் வலது கை விரல்களை வைத்து அடிப்புறத்தில் தேய்க்க வேண்டும். அதேபோல வலது உள்ளங்கையின் மேல் இடது கை விரல்களை மடக்கி வைத்து அடிப்புறத்தில் தேய்க்க வேண்டும்.

கை கழுவுதல்

 * இடது கை கட்டை விரல் நுனியை, வலது உள்ளங்கையால் பிடித்து சுழற்றித் தேய்க்கவும். அதேபோல வலது கை கட்டை விரல் நுனியை, இடது உள்ளங்கையால் பிடித்து சுழற்றித் தேய்க்க வேண்டும்கை கழுவுதல்

 * இப்போது வலது உள்ளங்கையால் இடது புறங்கையைத் தேய்க்கவும்; அதேபோல இடது உள்ளங்கையால் வலது புறங்கையைத் தேய்க்க வேண்டும்.

கை கழுவுதல்

 * இரு உள்ளங்கைகளையும் சேர்த்து, விரல்களைக் கோர்த்து, விரல் இடுக்குகளைத் தேய்க்க வேண்டும்.

 வலது கை விரல்களால் இடது உள்ளங்கையிலும், இடது கை விரல்களால் வலது உள்ளங்கையிலும் சுழற்றிச் சுழற்றித் தேய்க்க வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலமே குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் வாந்தி,பேதி,சளி ,இருமல் ,காய்ச்சல் போன்ற நோய்களுக்கு டாட்டா சொல்லிவிடலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement