வெள்ளைப்படுதலுக்கு வெயிலும் சிறந்த தீர்வு!

வெள்ளைப்படுதலுக்கு வெயிலும் சிறந்த தீர்வு!

‘’வெயில் காலத்தில் பெண்களை  அசெளகரியப்படுத்துகிற முக்கியமான பிரச்னைகளுள் ஒன்று வெள்ளைப்படுதல். வெயில் காலத்தில் உடம்பில் நீர்ச்சத்தும் எனர்ஜியும் குறைந்திருக்கும்போது , உடலின் எதிர்ப்பு சக்தியும் குறைந்துபோகும். எதிர்ப்பு சக்தி குறையும்போது, உடலுக்குள் எதாவது இன்ஃபெக்‌ஷன் வந்தால், அதற்குக்  காரணமான கிருமிகளை வெளியேற்றுவதற்காக வெள்ளைப்படுதல் ஏற்படும். இதுதான் நம் உடலின் இயக்கம். வெள்ளைப்படுதலானது நீர்போல தெளிவாக, துர்நாற்றம் இல்லாததாக இருக்கும். அதுவும் சில சொட்டுக்கள் மட்டுமே வெளியேறும். இதுவே நாள்கணக்கில், அதிகமாக வெளியேறுகிறது என்றால், அதை உடனே கவனிக்க வேண்டும் ‘’ என்கிற இயற்கை மருத்துவர் தீபா,  வெளளைப்படுதலுக்கு தீர்வுகளையும் நமக்குத் தெரிவித்தார்.

வெயில் - வெள்ளைப்படுதல்

* வெந்தயத்தை ஊற வைத்து, அந்தத் தண்ணீரை குடித்துவிட்டு, வெந்தயத்தை நன்கு மென்று சாப்பிட வேண்டும். சிலர் வெந்தயக் கசப்புக்கு பயந்துகொண்டு , அதை அரைகுறையாக மென்று விழுங்கி விடுவார்கள் . இப்படிச்  செய்தால் பலன் கிடைக்காது . 

தீபா* தண்டுக்கீரையின் தண்டுகளை மட்டும் சூப் வைத்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்து வந்தால், வெள்ளைப்படுதல் படிப்படியாக குணமாவதோடு , இனப்பெருக்க உறுப்புகளும் பலமடையும். 

*  இந்தப் பிரச்னைக்குச் சிறந்த தீர்வு வெள்ளைப்பூசணிச் சாறுதான். வெயில் காலங்களில் மதிய வேளையில் தினமும் ஒரு கப்  வெள்ளைப்பூசணிச்சாறை குடித்து வாருங்கள் . 

* வெண்டைக்காயில் ஒரு கீறல் போட்டுக் கொள்ளவும். வெள்ளைப்பூசணித் துருவல்,  பச்சை வேர்க்கடலை, தேங்காய், மிளகு, சீரகம், உப்பு ஆகியவற்றை ஒன்றும் பாதியுமாக அரைக்கவும் . இதை வெண்டைக்காயில் ஸ்டஃப்ஃபிங்காக வைத்து , பத்து நிமிடங்கள் இட்லிப் பாத்திரத்தில் வேக வைத்துச்  சாப்பிட்டு வாருங்கள் . இதுவும் வெள்ளைப்படுதலைக் கட்டுப்படுத்தும். 

* சோற்றுக் கற்றாழையின் ஜெல்லை  நீரில் நன்கு அலசி மோருடன் அரைத்துக் குடித்தால், உடம்பின் சூடு தணிந்து, வெள்ளைப்படுதல் ஒரே நாளில் கட்டுக்குள் வரும். கூடவே, சோற்றுக்கற்றாழை ஜெல்லை நீருடன் சேர்த்து அரைத்து, அந்தரங்க பகுதியில் பேக் போட்டுவந்தால் உடற்சூடு கட்டுக்குள் வரும்.

வெயில் - சூட்டை தணிக்கும் ஜெல்

* வேப்ப மரப்பட்டை மற்றும் சீரகத்தை காய வைத்து அரைத்து வைத்துக்கொள்ளவும். வெள்ளைப்படுதல் பிரச்னை  வரும்போதெல்லாம், இந்தப் பொடியில் தேவையான அளவு எடுத்து குளிர்ந்த நீரில் குழைத்து, அந்தரங்க பகுதியில் பேக் போட்டு கால் மணி நேரம் கழித்து தண்ணீரால் அலசி விடுங்கள் . அந்த இடத்தில் கிருமிகள் இருந்தால் அழிந்து விடும் . 

* நாகப்பழத்துக்கு வெள்ளைப்படுதலை சரி செய்கிற குணம் உண்டு . பழத்தைச்  சாப்பிட்டுவிட்டு அரிசி ஊற வைத்தத் தண்ணீரில் இதன் விதைகளைப் போட்டு அடுப்பில் நன்கு கொதிக்கவிடவும். பிறகு, ஆற வைத்த நீரால் அந்தரங்க பகுதியை சுத்தம் செய்துவிடவும்.

வேப்பிலை

* மாங்கொட்டை மற்றும் மாம்பட்டை இரண்டையும் பேஸ்ட்  போல அரைத்து ,  அந்தரங்க பகுதியில் பேக் போடவும். சிறிது நேரம் கழித்து தண்ணீரால் அலசி வந்தால் அங்கிருக்கும் கிருமிகள் அழிந்து வெள்ளைப்படுதல் குணமாகும்.

சூரிய ஒளிக்குத்  துணிகளில் இருக்கிற கிருமிகளை அழிக்கிற தன்மை உண்டு . ஆனால் உள்ளாடைகளை வெயிலில் போடுவதை அவமானமாக நினைக்கிறார்கள் இன்றைய பெண்கள். அதை ரகசியம்போல் காக்கிறார்கள். அதற்கெல்லாம் அவசியமேயில்லை. அப்படி செய்துவந்தால் நம் உடல்தான் கெடும். உள்ளாடைகளை நன்கு வெயிலில் காயவைத்து எடுத்தாலே அதில் இருக்கும் கிருமிகள் இறந்து வெள்ளைப்படுதல் போன்ற பிரச்னைகள் வராது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!