அக்னி நட்சத்திர அனலை கர்ப்பிணிகள் சமாளிக்க 10 டிப்ஸ்!

பழைய சாதத்தின் தண்ணீரில் கல் உப்பு அல்லது இந்துப்பு சேர்த்து குடிக்கலாம். உடலுக்குத் தேவையான தாது உப்புகள் கிடைப்பதுடன், உடலின் உள்ளுறுப்புகள் குளிர்ச்சியாகவும் இருக்கும்.

ரம்பித்துவிட்டது அக்னி நட்சத்திரம். சமூக வலைதள மீம்கள் கலாய்ப்பதுபோல சொல்ல வேண்டுமென்றால்... இத்தனை நாளாக நம் மீது மசாலாவை தடவிக் கொண்டிருந்த வெயில்... இன்றிலிருந்து நம்மை வறுத்தெடுக்கப் போகிறது. ஆம், இன்றிலிருந்து (4.5.18) தொடர்ந்து 28-ம் தேதி வரை அக்னி நட்சத்திர வெயிலின் கொடுமையை நாம் அனுபவிக்க வேண்டும். இதில் மிக முக்கியமாகக் கர்ப்பிணிகள் நிலையைப் பற்றி கேட்கவே வேண்டாம். அக்னி நட்சத்திரத்தை அவர்கள் கூலாக கடந்து செல்ல டிப்ஸ் தருகிறார் ஆயுர்வேத மருத்துவர் மஹேஸ்வர ராவ்.

கர்ப்பிணிகள்

''காடுகள் அடர்த்தியாக இருந்தபோதும், நம்மைச் சுற்றி நிறைய மரங்கள் இருந்தபோதும் அக்னி நட்சத்திரம் அதனுடைய  காலகட்டமான 21 நாள்கள் மட்டுமே நம்மையெல்லாம் சுட்டெரிக்கும். காடுகள், மரங்கள் எல்லாம் அழிக்கப்பட்ட இந்தக் காலத்தில், அக்னி நட்சத்திரம் ஆரம்பிப்பதற்கு முன்னால் ஒரு 15 நாள்கள், முடிந்த பிறகு ஒரு 15 நாள்கள் என்று கிட்டத்தட்ட ஒண்ணேமுக்கால் மாதத்துக்கும் மேல் நாம் வெயிலின் கொடுமையை அனுபவிக்க வேண்டியிருக்கிறது.

மஹேஸ்வரராவ்* கர்ப்பிணிகளைப் பொறுத்தவரை, தினமும் மூன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இதனுடன் நீங்கள் குடிக்கிற மோர், ஜூஸ், இளநீர் இவற்றையெல்லாம் கணக்கில் சேர்த்துக்கொள்ளாதீர்கள். நீர் ஆகாரங்கள் எடுப்பதோடு, தனியாகத் தண்ணீரையும் நிறையக் குடிக்க வேண்டும். 

* முடிந்தவர்கள் தினமும் இளநீர் குடிக்கலாம். முடியாத நாள்களில் பழைய சாதத்தின் தண்ணீரில் கல் உப்பு அல்லது இந்துப்பு சேர்த்து குடிக்கலாம். உடலுக்குத் தேவையான தாது உப்புகள் கிடைப்பதுடன், உடலின் உள்ளுறுப்புகள் குளிர்ச்சியாகவும் இருக்கும்.

* முற்பகல் 11 மணிவாக்கில் தர்பூசணி, முலாம் பழம், கிர்ணிப்பழம், வெள்ளரி பச்சடி என்று நீர்ச்சத்து நிரம்பிய பழங்கள் அல்லது காய்கறிகளை சாப்பிடுங்கள். 'நீங்கள் சொல்லியிருப்பவை எதுவும் தற்போது வீட்டில் இல்லை. என்னால் உடனே கடைக்குப் போய்வாங்கி வரவும் முடியாது' என்பவர்கள், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, தயிருடன் கலந்து பச்சடியாகச் சாப்பிட்டு விடுங்கள். உடல் ஜில்லென்றாகிவிடும்.

* வெயில் காலத்தில் கர்ப்பிணிகளுக்கு சாப்பிடப் பிடிக்காது. அதனால், வெள்ளைப் பூசணி, சுரைக்காய், தோசைக்காய் மாதிரியான நீர்க்காய்களை பாசிப்பருப்புடன் வேக வைத்துச் சாப்பிடுங்கள். வயிறு நிறைவதோடு, வியர்வையினால் உடல் இழந்த தாது உப்புகளையும்  மீட்டு விடலாம். 

வெள்ளரி

* சிலருக்கு இயல்பிலேயே அதிகம் வியர்க்கும். இவர்கள் வெயிலில் சென்று வந்த பிறகு உடலில் உப்பு படிந்து காணப்படும். இது இப்படியே தொடர்ந்தால் 5 அல்லது 6 வருடங்களில் அந்தப் பெண்களுக்கு நரம்புகள் பலவீனமாகி விடும். அதனால், உப்புப் படிகிற அளவுக்கு வியர்க்கிற உடல்வாகு கொண்ட கர்ப்பிணிப் பெண்களும் சரி, நார்மல் பெண்களும் சரி, சாத்துக்குடியை ஜூஸ் போட்டு தினமும் குடித்து வர வேண்டும். சாத்துக்குடியைப் பழமாக சாப்பிட்டால் நார்ச்சத்து அதிகம் கிடைக்கும். ஆனால், ஜூஸாக குடித்தால்தான் அதில் இருக்கிற தாது உப்புகள் உடனடியாக ரத்தத்தில் கலக்கும். அதனால், தினமும் சாத்துக்குடி ஜூஸை வீட்டிலேயேப் போட்டு குடித்து வாருங்கள். முடியாத நாள்களில் எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம். 'வியர்த்துக் கொட்டுகிறது, சாத்துக்குடியும் இல்லை, எலுமிச்சையும் இல்லை' என்கிற கர்ப்பிணிகள் குளூக்கோஸையாவது அவசியம் குடிக்க வேண்டும். 

* வெயில் தணிந்திருக்கும் மாலை நேரத்தில் வாக்கிங் செல்லுங்கள். அந்த நேரத்திலும் அதிகமாக வியர்த்துப் படபடப்பாக வந்தால், ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு சிட்டிகை கல் உப்பு சேர்த்துக் குடியுங்கள். சற்று  ரிலாக்ஸாக உணர்வீர்கள். 

இளநீர்

* மூலம் போன்ற பிரச்னை இருக்கிற கர்ப்பிணிகள், இளநீரில் பனங்கற்கண்டு போட்டு ஊற வைத்து குடிக்க, பிரச்னை தணியும்.

* தேங்காய்ப்பால்கூட வயிற்றின் சூட்டை தணிக்கிற ஒரு திரவம்தான்.

* வெயில் காலத்தில் ஐஸ் வாட்டர் குடித்தால் இதமாகத்தான் இருக்கும். ஆனால், உடம்பு சூடாகி விடும் கவனம்.''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!