வெளியிடப்பட்ட நேரம்: 11:28 (11/05/2018)

கடைசி தொடர்பு:11:28 (11/05/2018)

`இனி மருந்து, மாத்திரைகளில் பிராண்ட் பெயர் சிறியது, ஜெனரிக் பெயர் பெரியது’ - நன்மை தருமா அரசு அறிவிப்பு?

பிரிஸ்கிரிப்ஷன் இல்லாமல் மருந்து வாங்குவதைத் தடுக்குமா அரசின் புதிய அறிவிப்பு?

`இனி மருந்து, மாத்திரைகளில் பிராண்ட் பெயர் சிறியது, ஜெனரிக் பெயர் பெரியது’ - நன்மை தருமா அரசு அறிவிப்பு?

`ருந்து மாத்திரைகளில், அதன் பிராண்டட் பெயர்களைவிட ஜெனரிக் பெயர்கள் நன்றாகத் தெரியும்படி இருக்க வேண்டும்’ - இதுதான் மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருள்கள் சட்டம் 1940-லும், அதன் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட விதி 1945-லும் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், யதார்த்தத்தில் அப்படி இல்லை. பெரும்பாலான மருந்துகளில் பிராண்டட் பெயர்கள்தான் பெரிதாக இருக்கின்றன. ஜெனரிக் பெயர்கள் ஏதோ ஒரு மூலையில் மிகச் சிறியதாக அச்சிடப்பட்டிருக்கின்றன. இனிமேல் அப்படி பிரின்ட் செய்ய முடியாது. `பிராண்டட் பெயர்களைவிட ஜெனரிக் பெயர்கள் இரண்டு அளவு பெரிய எழுத்தில் (Font) இருக்க வேண்டும்’ என்று இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இதன் மூலம், ஜெனரிக் மருந்துகளைப் பற்றி மக்களிடையே விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே அரசின் நோக்கம். அதுபோல ஒவ்வொரு மருந்தின் மீதும் அதில் என்ன வகை மருந்து என்று அச்சிடப்படுவதிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. வரும் நவம்பர் ஒன்று முதல் இது நடைமுறைக்கு வருகிறது.

ஜெனரிக்

 

முதலில் ஜெனரிக் மருந்துகள் என்றால் என்னவென்று பார்ப்போம்...

ஒரு மருந்தை அதிலுள்ள மூலப்பொருள்களின் வேதியியல் பெயரால் அழைப்பது ஜெனரிக். அந்த மருந்தைத் தயாரிக்கும் நிறுவனங்களின் பெயரைக் குறிப்பது பிராண்டட். உதாரணமாக `பாராசிட்டமால்’ என்பது அதன் ஜெனரிக் பெயர். அதைப் பல மருந்து நிறுவனங்கள் வெவ்வேறு பெயர்களில் தயாரித்து விற்பனை செய்கிறார்கள்.

பெரும்பாலும் மக்கள் அனைவரும் அதன் பிராண்டட் பெயர்களைத்தான் தெரிந்துவைத்திருக்கிறார்கள். மருத்துவர்கள் எழுதித்தரும் பிராண்டட் பெயர்களை மருந்துக்கடைகளில் கொடுத்து மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடுகிறார்கள். அதே மருந்தை வேறொரு நிறுவனம் குறைந்த விலையில் விற்பனை செய்வார்கள். அந்த மருந்தை மருந்துக் கடைக்காரர்கள் கொடுத்தால் வாங்கிக்கொள்ள மாட்டார்கள். இதனால் மக்களுக்குத்தான் தேவையற்ற பொருளிழப்பு ஏற்படும். வேறொரு நிறுவனமும், அதே மருந்தைத்தான் தயாரித்து விற்பனை செய்கிறார்கள் என்பது தெரியாமல் இருப்பதால்தான் அவர்களுக்குத் தேவையில்லாத அச்சம் ஏற்படுகிறது. ஜெனரிக் பெயர்களைப் பற்றியப் புரிதல் மக்களுக்கு இருந்தால் இந்தத் தேவையற்ற பொருளிழப்பு ஏற்படாது.

``இது ஏற்கெனவே இருந்த விதிதான். ஆனால், பிராண்டட் பெயர்களைவிட ஜெனரிக் பெயர்கள் எந்தளவுக்கு சேதுராமன்பெரியதாக இருக்க வேண்டும் என்று இப்போது சொல்லியிருக்கிறார்கள். இதனால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. இதனால் எங்களுக்குத்தான் ஏகப்பட்ட நெருக்கடிகள். ரோலர் மாற்ற வேண்டும். டபுள் கலரில் அச்சிடச் சொல்கிறார்கள். அதனால் பிரின்டிங் செலவும் இனி அதிகமாகும். அதோடு, ஷெட்யூல் ஹெச், ஹெச்1 மட்டும்தான் பிரிஸ்கிரிப்ஷன் டிரக்ஸ். ஷெட்யூல் ஜி நான் பிரிஸ்கிரிப்டட்தான். ஆனால், அதையும் `பிரிஸ்கிரிப்ஷன்’ என்று குறிப்பிடச் சொல்கிறார்கள். மக்கள் இதையெல்லாம் பார்த்து மருந்து வாங்கிச் சாப்பிடுவதில்லை. மருத்துவர் சொல்வதைத்தான் வாங்கிச் சாப்பிடுவார்கள். ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக செய்துகொண்டிருக்கிறார்கள். மக்களுக்குப் பயன்படும் என்றாலும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வோம். இதனால், மக்களுக்கும் எந்தப் பயனும் இல்லை. எங்களுக்குத் தேவையில்லாத நஷ்டம்" என்கிறார் தமிழ்நாடு மருந்து உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சேதுராமன்.

மருந்தகம்

சிவராமக் கண்ணன்``பல மருந்துகளில் பிராண்ட் பெயர்தான் மிகப்பெரிய அளவில் இருக்கிறது. அதன் கெமிக்கல் பெயர் சிறியதாக இருக்கும். மக்களுக்கு மருந்துகளின் பிராண்டட் பெயர்கள் மட்டும்தான் தெரியும். அதனால் இது வரவேற்கக்கூடிய அறிவிப்புதான் . அதுபோல மயக்க மருந்து, தூக்க மருந்து, புற்றுநோய்க்கான மருந்துகள் நேரடியாக மருந்துக் கடைகளில் விற்பனை செய்யக் கூடாது. மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். ஆனால், நேரடியாக பழைய சீட்டுக்களை வைத்து பலர் மருந்து வாங்குகிறார்கள் அது தடுக்கப்படவேண்டிய ஒன்று. அதனால் அனைத்து மருந்துகளையும் பிரிஸ்கிரிப்ஷனுக்குள் கொண்டு வருவது, லேபிள் செய்வது நல்லதுதான்’’ என்கிறார் பொதுநல மருத்துவர் சிவராமக் கண்ணன்.

``முன்பு `ஷெட்யூல் ஹெச்’, `ஹெச் 1’ என்று மட்டும்தான் மருந்துகளில் குறிப்பிடப்பட்டிருக்கும். தற்போதுஆனந்தன் அதனுடன் `Rx’ என்று குறிப்பிடச் சொல்கிறார்கள். தற்போது பல மருந்துகளை நார்காடிக் மருந்துகளுக்குள் (மயக்கம் தொடர்பான) கொண்டு வந்திருக்கிறார்கள். நார்காடிக் மருந்துகளை `Nrx’ என்றும், மருந்து தயாரிக்கும்போதே அச்சிடச் சொல்கிறார்கள். அடுத்ததாக, பிராண்ட் பெயரைவிட ஜெனரிக் பெயர்களைப் பெரியதாக அச்சிடச் சொல்லியிருக்கிறார்கள். இதனால் மக்களுக்கு ஓரளவு விழிப்பு உணர்வு ஏற்படும். ஆனால், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளைத்தான் நாங்கள் கொடுப்போம். மக்களும் மருத்துவர்கள் பரிந்துரைப்பதைத்தான் சிவபாலன்வாங்குவார்கள்’’ என்கிறார் தமிழ்நாடு வேதியியலாளர்கள் மற்றும் மருந்தகங்கள் சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் ஆனந்தன்.

``லேபிளிங்கில் சில மாற்றங்கள் செய்திருக்கிறார்கள். ஷெட்யூல் ஹெச், ஹெச்1, ஜி ஆகிய அனைத்துமே இப்போது மருத்துவர்களின் பரிந்துரைகள் இருந்தால்தான் பெற முடியும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. மக்கள் தாங்களே கடைகளுக்குச் சென்று மருந்து வாங்கும் முறை இதனால் தடுக்கப்படும். ஜெனரிக் பெயர்கள் பிராண்டட் பெயர்களைவிட பெரிதாக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் மக்களுக்கு ஜெனரிக் பெயர்களைப் பற்றிய விழிப்பு உணர்வு ஏற்படும். மருத்துவர்களின் பரிந்துரையோடு, ஜெனரிக் பெயர்களைச் சொல்லி மக்கள் மருந்துகள் வாங்கும் முறை உருவாகும். இந்த அறிவிப்பால் மருந்து தயாரிப்பவர்களுக்குச் சில சிரமங்கள் இருக்கலாம். ஆனால், அதைவிட மக்கள் நலனே முக்கியம்’’ என்கிறார் தமிழ்நாடு மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை இயக்குநர் சிவபாலன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்