Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உறையாமல் கொட்டும் ரத்தம்... ஆண் குழந்தைகளை தாக்கும் ஹீமோஃபிலியா! #Hemophilia

மிழகத்தில் தற்போது சுமார் 2000 குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மதுரை வட்டாரத்தில் மட்டும் 160 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். பெற்றோர் மத்தியில் பெரும் பதைபதைப்பை உருவாக்கியிருக்கிறது இந்த நோய்.

ஹீமோஃபேலியா

அதென்ன ஹீமோஃபிலியா?

இந்தப் பாதிப்பு குறித்து குழந்தைகள் நலச் சிறப்பு மருத்துவர் கார்த்தியிடம் கேட்டோம், அவர், ``ஹீமோஃபிலியா என்பது ரத்தம் சம்பந்தப்பட்ட ஒரு நோய். இது தொற்றுநோய் அல்ல, மரபணு மூலம் கடத்தப்படுவது. குழந்தை பிறந்ததிலிருந்தே இந்தப் பாதிப்பு இருக்கும். குறிப்பாக `எக்ஸ் மரபணு’ (X - Chromosome) மூலமே பெற்றோர்களிடமிருந்து இந்தப் பாதிப்பு குழந்தைகளுக்கு வருகிறது. 

காயம் ஏற்பட்டால் ரத்தம் கொட்டிக்கொண்டே இருக்கும். ரத்தம் உறையும் தன்மையை இழந்துவிடும். இந்தக் கொடுமையான பாதிப்பு, பிறந்து உயிருடன் இருக்கும் 10 ஆயிரம் ஆண் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு ஏற்படும். இதற்கு நிரந்தர மருத்துவத் தீர்வு இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. பெரும்பாலும் ஆண் குழந்தைகளுக்கே இந்தப் பாதிப்பு ஏற்படும். அப்பா அம்மா இருவருக்குமே இந்தப் பாதிப்பு இருந்தால் மட்டும் பெண் குழந்தைகளுக்கு வரும். 

பொதுவாக காயம்பட்டால், ரத்தம் சிறிது நேரம் கசியும், பிறகு நின்றுவிடும். ஆனால், இந்தப் பாதிப்பு உள்ளவர்களுக்குக் காயம் ஏற்பட்டால், ரத்தக்கசிவு தொடர்ந்து இருக்கும். ரத்தம் உறையாது. 

தலையில் லேசாக அடிபட்டால் கொஞ்சம் வீங்கும், பிறகு இரண்டு நாள்களில் சரியாகிவிடும். ஆனால், இந்தப் பாதிப்பு உள்ளவர்களுக்கு உள்காயங்கள் ஏற்பட்டால் தொடர்ந்து ரத்தம் கசிந்து, ரத்தச் சோகை ஏற்படவும் வாய்ப்புண்டு.

ஹீமோஃபிலியா

`ஹீமோஃபிலியாவில் ஏ, பி, சி என முன்று வகைகள் இருந்தாலும், ஏ வகைதான் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. மற்றவை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. உடலில் உள்காயமோ, வெளிக்காயமோ ஏற்பட்டு ரத்தக் கசிவு தொடர்ந்து இருந்தால் மட்டுமே இந்தப் பாதிப்பைக் கண்டறிய முடியும். மற்றபடி, இதற்கு அறிகுறிகள் எதுவும் இருக்காது. இதனால் உடலில் வேறு பாதிப்புகளோ, டாக்டர் கார்த்திக் சூரியாபக்கவிளைவுகளோ ஏற்படாது. இந்தப் பாதிப்புக்கு நிரந்தரத் தீர்வோ, முற்றிலும் குணப்படுத்தக்கூடிய மருந்தோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தப் பாதிப்பு உள்ளவர்களுக்குக் காயம்பட்டாலோ, அறுவைசிகிச்சை செய்தாலோ, `ஃபேக்டர் - 8’ (Factor - 8) என்ற புரதச்சத்து மருந்தை ஊசி மூலம் செலுத்துவார்கள். இந்த மருந்து, தற்காலிகமாக ரத்தக்கசிவை தடுத்து நிறுத்தும். ரத்தத்தை உறைய வைக்கும் ' ஃபேக்டர் - 8'  புரதச்சத்து செயற்கையான முறையில் உற்பத்தி செய்யப்பட்டு மருத்துவமனைகள், மருந்தகங்களில் எளிதாகக் கிடைகிறது. ஆனால், விலை கொஞ்சம் அதிகம்...’’ என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் கார்த்திக் சூரியா.  

``ஹீமோஃபிலியவால் தமிழகத்தில் மட்டும் 2000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய அளவில் 21 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். `பிறந்து உயிருடன் இருக்கும் ஆண் குழந்தைகளில் (Live Male Birth)’, 10 ஆயிரத்தில் ஒரு குழந்தைக்கு இந்தப் பாதிப்பு ஏற்படும். தமிழ்நாட்டில் உள்ள 19 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், 15 மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் இந்தப் பாதிப்புக்கான மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது.  இந்த 15 மருத்துவமனைகளிலும் மகப்பேறு மற்றும் குழந்தைகள்நல சிகிச்சைப் பிரிவில், ஹீமோஃபிலியாவுக்காகத் தனிப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ஹீமோஃபிலியாவுக்குத் தனிப் பிரிவு தொடங்கியுள்ளனர். மதுரையில் மட்டும் 160 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்’’ என்கிறார் வி.ஹெச்.எஸ் (The Voluntary Health Services) தொண்டு நிறுவன ஹீமோஃபீலியா பிரிவின் சென்னை மண்டலச் செயலாளர் சத்யநாராயணன். 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement