வெளியிடப்பட்ட நேரம்: 10:32 (06/07/2018)

கடைசி தொடர்பு:14:35 (07/07/2018)

`ஆக்ஸிஜன் விற்பனைக்கு!’ - ஆஸ்துமா சிரமத்துக்கு கையடக்க கேன் #PortableOxygenCan

`ஆக்ஸிஜன் விற்பனைக்கு!’ - ஆஸ்துமா சிரமத்துக்கு  கையடக்க கேன் #PortableOxygenCan

`க்சிஜன் விற்பனைக்கு..!’ இதைப் படித்ததும், வளிமண்டலத்தில் ஆக்சிஜன் தீர்ந்துவிட்டதோ என்று நினைத்துவிடாதீர்கள். இது ஆபத்துக்கு உதவுவது. பொதுவாக, மருத்துவமனைகளில்தாம் ஆக்சிஜன் சிலிண்டர்களைப் பயன்படுத்துவார்கள். இப்போது நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஆபத்து நேரத்தில் உதவுவதற்காகக் கையடக்க ஆக்சிஜன் கேன் (Portable Oxygen Can) அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

கையடக்க ஆக்ஸிஜன் கேன்

``இது அவ்வளவு அவசியமான ஒன்றுதானா... இதனால் என்னென்ன பயன்கள் இருக்கின்றன?’’ என்று கையடக்க ஆக்சிஜன் கேன் விற்பனை செய்யும் விநியோகஸ்தரிடம் கேட்டோம்... ``ஒருமுறை சபரிமலைக் கோயிலுக்குச் சென்றிருந்தேன். அது பனிக்காலம்.  மலைப்பகுதி என்பதால், அப்போது வயதானவர்களில் பலர்  மூச்சுவிட மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்தபோதுதான், `போர்டபுள் ஆக்சிஜன் கேனை இது போன்றவர்களுக்கு அறிமுகப்படுத்தலாமே!’ என்ற எண்ணம் தோன்றியது. கையடக்க ஆக்சிஜன் கேன்களை வெறும் வியாபார நோக்கில் நாங்கள் அறிமுகப்படுத்தி, விற்பனை செய்யவில்லை. இது குறித்த விழிப்பு உணர்வு பலருக்கும் ஏற்பட வேண்டும் என்பதற்காகப் பூங்காக்கள், உடற்பயிற்சி நிலையங்களில் இதைப் பார்வைக்காக வைத்திருக்கிறோம். இப்போதுதான் இந்த ஆக்சிஜன் கேன்களின் மேல் மக்கள் கொஞ்சம் ஆர்வம்காட்டி வருகிறார்கள். சிலர் `காற்றை விற்கிறார்கள்!’ என்று சிலர் கிண்டலும் செய்கிறார்கள். நாங்கள் அதையெல்லால் பொருட்படுத்துவதில்லை.

இது மருந்து அல்ல. மூச்சுத்திணறல் பிரச்னை இருப்பவர்களுக்கு இந்த கேன் முதலுதவி செய்வதற்காகப் பயன்படும். தினமும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்பவர்கள், நுரையீரல் பிரச்னை இருப்பவர்களுக்கு இது உதவும். மழை, பனிக் காலங்களில் மூச்சுத்திணறலைச் சமாளிக்க, இதைப் பயன்படுத்தலாம். பயன்படுத்துவதும் எளிது. பெரிய சிலிண்டர்களில் ஆக்சிஜன் நீர்ம நிலையில் இருக்கும். ஆனால், இந்தச் சின்ன கேன்களில் வாயுவாகவே இருக்கிறது. காற்றுக்கு அடர்த்தியில்லை என்பதால், ஆறு லிட்டர் ஆக்சிஜனை ஒரு சிறிய கேனில் அடைத்துவிடலாம். இந்த கேன்கள் பல அளவுகளில் கிடைக்கின்றன. ஆறு லிட்டர் கேனிலிருக்கும் ஆக்சிஜனை 150 முறை வரை சுவாசித்துக்கொள்ளலாம். இதை இரண்டு ஆண்டுகள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். நுரையீரல் பாதிப்பால் சுவாசப் பிரச்னை இருப்பவர்கள், முதியோர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதற்காகவே சென்னையில் இதை அறிமுகப்படுத்தியிருக்கிறோம்’’ என்றார்.

ஆக்ஸிஜன் சிலிண்டர்

இது குறித்து நுரையீரல் சிறப்பு மருத்துவர் ஸ்ரீதரிடம் பேசினோம். ``நாள்பட்ட நுரையீரல் பாதிப்பு இருப்பவர்கள், வீட்டிலோ, மருத்துவமனையிலோ சுவாசிப்பதற்காக ஆக்சிஜன் சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு இந்தக் கையடக்க கேன்கள் மிக உதவியாக மருத்துவர் ஸ்ரீதர்இருக்கும். எங்காவது வெளியே செல்லும்போது இதைப் பயன்படுத்தலாம். இந்தச் சிறிய அளவு கேன்களைக் குறைந்த நேரத்துக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். சிறியதாக எடை குறைவாக இருப்பதால் ஒரு சிறிய பையில் வைத்து எடுத்துச் செல்லலாம். பெரிய சிலிண்டர்களைப் பயணத்தில் வைத்துக்கொள்வது சிரமம். பொதுவாக ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் சுவாசிப்பவர்களின் எண்ணிக்கை குறைவு. அவர்கள் பெரும்பாலும் வீட்டிலேயேதான் இருப்பார்கள். அதனால் இதன் தேவையும், பயன்படுத்துபவர்களும் குறைவாகத்தான் இருக்கிறார்கள்.

ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்போதும் ஆக்சிஜன் சிலிண்டர் தேவைப்படாது. அவர்கள் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தால் மட்டுமே இதைப் பயன்படுத்துவார்கள். மிக மோசமான நுரையீரல் பாதிப்பு (Interstitial lung disease) நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே எப்போதும் ஆக்சிஜன் சிலிண்டர் தேவை. அவர்களுக்கு இந்தக் கையடக்க ஆக்சிஜன் கேன்கள் தேவைப்படும். இயற்கையான சுவாசத்தில் கிடைக்கும் ஆக்சிஜனை ஏற்றுக்கொள்ள முடியாதபடி நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்தால், ஆக்சிஜன் சிலிண்டர் அவசியம் தேவைப்படும். நுரையீரல் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறதோ, அதற்கு ஏற்றாற்போல ஆக்சிஜன் தேவைப்படும். ஆக்சிஜனின் அளவும் ஒவ்வொருவரின் உடல்நிலைக்கேற்ப மாறுபடும்’’ என்கிறார் ஸ்ரீதர்.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க