வெளியிடப்பட்ட நேரம்: 21:07 (16/07/2018)

கடைசி தொடர்பு:15:55 (01/08/2018)

கீதா சுரேஷ் தம்பதியின் வேண்டுதல் நிறைவேறுமா? -  Sponsored content 

பசியில் பாலுக்காக அழும் குழந்தையைக் கண்டாலே தாயின் மனம் துடித்துப்போகும், பால் கொடுக்க பறந்து ஓடுவாள்; ஆனால் மூச்சு விட சிரமப்பட்டு கண் முன்னாலேயே தன் பிஞ்சுக் குழந்தை கதறும்போது எந்தத் தாயால் அதைத் தாங்கமுடியும்? கீதாவின் குழந்தை பிறந்து சில நிமிடங்களில் நிறம் மாறி அதன் பிஞ்சு உடல் முழுக்க நீலம் பாரிக்கிறது, மூச்சு விடத் துடிக்கிறது. டாக்டர்கள் பரபரப்பாக செயல்பட்டு குழந்தையை அவசர சிகிச்சை பிரிவுக்குக் கொண்டுசெல்கின்றனர், இப்போது ஒவ்வொரு நொடியும் தாய் கீதா மற்றும் தந்தை சுரேஷுக்கு பாரமான கணங்களாக ஆகிப்போகின்றன!

 

இந்தியாவில் நூற்றில் ஒரு குழந்தை பிறப்பில் ஏற்படும் இருதயக் கோளாறு (Congenital Heart Disease) காரணமாக பாதிக்கப்படுகிறது. உலகளவில் பிரசவத்தின் போது சிசுக்களை காவு வாங்கும் முக்கிய காரணமாக இருப்பதும் இதே இருதயக் கோளாறுதான்! பரிசோதனையில் இப்பிரச்னை கீதா-சுரேஷ் குழந்தைக்கும் இருப்பது தெரியவர, குழந்தையின் நிலை மோசமாகிக்கொண்டிருப்பதால் கொஞ்சமும் தாமதிக்காமல், சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி டாக்டர்கள் பரிந்துரைத்தனர்.

சுரேஷ், பாண்டிச்சேரியில் மீன் பிடி தொழில் செய்துவருகிறார். இரண்டாவது குழந்தை பிறக்கப்போகும் மகிழ்ச்சியில் கணவனும் மனைவியும் இருக்க, பாண்டிச்சேரி ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அழகான ஆண் குழந்தை பிறக்கிறது. ஆனால் அதன்பிறகு நடந்தவை, பெற்றோரின் சந்தோசத்தைக் கண்ணிமைக்கும் நேரத்தில் கரைத்துவிட்டது. இப்போது, சென்னை மருத்துவமனையில் குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளது. 

"அவனுக்கு, பிறப்பில் ஏற்படும் இருதயக் கோளாறு உள்ளதாம், இதைக்கேட்டதும் தலையில் பேரிடி விழுந்தது போல் ஆனது எங்களுக்கு. ஐ.சி.யு. வென்டிலேட்டர் டியூப்கள் சொருகி படுக்கையில் கிடத்தியிருக்கும் குட்டிக் குழந்தையைப் பார்த்துப் பார்த்துக் கண்ணீர் வடிக்கும் என் மனைவி, அம்மா ஏன் சதா அழுதுகொண்டே இருக்கிறாள் எனத் தெரியாது வாடும், 4 வயதான என் முதல் குழந்தை," என மனம் நொந்து பேசுகிறார் சுரேஷ், "என் மாத வருமானோமோ நான்காயிரம் ரூபாய்தான். அன்றாடக்காய்ச்சியான எங்களுக்கு இங்கு ஒவ்வொரு முறை வந்துபோவதற்கே அவ்வளவு பணம் தேவைப்படுகிறது. ஏற்கனவே 2 லட்ச ரூபாய் பணத்தை எப்படியோ கடனாக புரட்டி சிகிச்சையை ஆரம்பித்துவிட்டோம். ஆனால், குழந்தை உயிர் பிழைக்க முக்கியமான ஆபரேஷனை உடனே செய்யவேண்டியுள்ளது, இதற்குத் தேவைப்படும் தொகை ரூபாய் 7 லட்சம்."

சிகிச்சையைத் தொடர இவர்கள் ஏறாத வசலில்லை, அழைக்காத நபர்களில்லை, தெரிந்தவர்களும் இப்போது  பண உதவி செய்ய மறுக்கின்றனர், காரணம் கீதா-சுரேஷ் தம்பதியினரின் ஏழ்மை நிலை. இவர்களின் குழந்தையின் உயிரைக் காப்பாற்றிட நம் உதவி தேவைப்படுகிறது. ​இந்த லிங்கிற்குச் சென்று -  https://www.impactguru.com/fundraiser/support-little-baby-of-geeta?utm_source=Vikatan&utm_medium=Tamil&utm_campaign=Geeta_1   நம்மால் முடிந்த பண உதவியைச் செய்யலாம். முடிந்தவரை இச்செய்தியை பேஸ்புக் மற்றும் வாட்சாப்பில் பகிர்ந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். பிஞ்சு இதயம் காக்க, கொஞ்சம் இதயம் இரங்கலாமே!​

https://www.impactguru.com/fundraiser/support-little-baby-of-geeta?utm_source=Vikatan&utm_medium=Tamil&utm_campaign=Geeta_3

பொறுப்புத் துறப்பு:மேற்கண்ட கட்டுரை  Impactguru- வின் விளம்பரதாரர் பகுதி. இதில் கூறப்பட்டுள்ள உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் விகடன் நிர்வாகம் பொறுப்பல்ல. மேலும் வாசகர்கள் இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம். நன்கொடை செய்வதற்கு முன்னர் வாசகர்கள் உண்மைத்தன்மையை சுயாதீனமாக சரிபார்த்துக் கொள்ளவும்.​ 

நீங்க எப்படி பீல் பண்றீங்க