தலைக்கு குளிக்கும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்!

தலைக்கு குளிக்கும்போது என்ன என்ன விஷயங்களைக் கவனிக்கலாம் என்பதைக் கூறும் கட்டுரை

காலையில் எழுந்ததும் தலைக்கு நீரை விடாமல் சிலருக்கு குளிக்கவே முடியாது. உண்மையில் தலைக்கு குளிப்பது நல்லதுதான். ஆனால், தொடர்ந்து தலைக்கு குளிப்பதால் தலைவலி, தலை பாரம், முடி உதிர்வு இப்படி பாதிப்புகள் உண்டாகலாம். இப்படியான பாதிப்புகளை எப்படி தவிர்க்கலாம், தலைக்கு குளிக்கும்போது என்ன என்ன விஷயங்களைக் கவனிக்கலாம் என்பதைக் காண்போம்.

முடி உதிர்வு

தலைக்கு குளிக்கப் போகும் முன்னர் உங்கள் தலைமுடியை மெதுவாக சீவிக்கொள்ளுங்கள். இதனால் முடி வேரில் ரத்த ஓட்டம் அதிகரித்து வலுவாகும். இதனால் குளிக்கும்போது முடி உதிராது. நீரை வேகமாக தலையில் ஊற்றிக்கொள்ளாமல் முதலில் லேசாக அலசி ஈரப்படுத்த வேண்டும். இதனால் வெப்ப நிலை சமமாகி தலைவலி, தலை பாரம்  வராமல் இருக்கும். ஷேம்புவை நேரடியாக ஊற்றி பரபரவென தேய்க்காமல், ஷாம்புவை கிண்ணத்தில் ஊற்றி கலக்கி அதை மெதுவாக தலையில்விட்டு மென்மையாக தேய்க்க வேண்டும். இதனால் ஷாம்புவில் உள்ள கெமிக்கல் அதிகம் பாதிக்காது.  நீர் அதிகம் இல்லாதபோதே தலையில் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும்.

கண்டிஷனரை முடி வேரில் தடவக்கூடாது. சுடுநீரில் குளித்தாலும் இறுதியில் குளிர்ந்த நீரில் தலையை அலசுவது நல்லது. தினமும் ஷாம்புவை பயன்படுத்த வேண்டாம். ஏன் என்றால் தலைமுடியில் உள்ள இயற்கையான எண்ணெய்ப்பசை நீங்கி பளபளப்பு போய்விடும். எனவே, வாரம் 2 - 3 தடவை ஷாம்பு பயன்படுத்தினால் போதும். குளித்து முடித்ததும் டவல் கொண்டு அழுத்தி தலையை துடைக்காதீர்கள். இதனால் முடி பாழாகும். மெல்ல துடைத்து முடியை நன்கு உலரவிடுங்கள். இப்படி கவனமாகக் குளித்து உங்கள் முடியை, தலை ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!