வெளியிடப்பட்ட நேரம்: 19:05 (26/07/2018)

கடைசி தொடர்பு:19:05 (26/07/2018)

`நோய்களை மட்டுமல்ல, இனி ரத்தப் பரிசோதனையில் ஆயுளையும் கண்டுபிடிக்கலாம்!’ - புதிய ஆய்வு

ஒருவரின் ஆயுள் காலம் எவ்வளவு என்பதை ரத்தப் பரிசோதனையில் கணக்கிடலாம்! - அசரவைக்கும் ஆய்வு முடிவு

`நோய்களை மட்டுமல்ல, இனி ரத்தப் பரிசோதனையில் ஆயுளையும் கண்டுபிடிக்கலாம்!’ - புதிய ஆய்வு

னைவருக்கும் பிறந்த தேதி தெரிவதைப்போல, இறக்கும் தேதியும் தெரிந்துவிட்டால் என்ன ஆகும்? `அதெல்லாம் சாத்தியமில்லை’ என்பவர்களை வாயடைக்கவைத்திருக்கிறது அண்மைய ஆய்வு ஒன்று! `ஒருவர் எத்தனை ஆண்டுகள் உயிரோடு வாழ்வார் என்பதை ரத்தப் பரிசோதனை மூலமே கண்டறிந்துவிடலாம்’ என்கிறது அந்த ஆய்வு. 

ரத்தப் பரிசோதனை

அமெரிக்காவின் கனெக்டிகட் (Connecticut) பகுதியிலிருக்கும் யேல் (Yale) பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள்தாம் இந்த ஆய்வை மேற்கொண்டார்கள். இந்தப் பரிசோதனைக்காக, இரண்டு காலகட்டங்களில் மேற்கொண்ட ஆய்வுகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் ஆய்வாளர்கள். ஒன்று, 1988-ம் ஆண்டு முதல் 1994-ம் ஆண்டுவரை 10,000 பேரிடம் நடத்தப்பட்டது; மற்றொன்று, 1999-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டுவரை 11,000 பேரிடம் மேற்கொள்ளப்பட்டது. இந்த இரண்டு ஆய்வுகளும், அமெரிக்காவின், நேஷனல் ஹெல்த் அண்டு நியூட்ரிஷன் எக்ஸாமினேஷன் சர்வே (National Health and Nutrition Examination Survey - NHANES) சார்பாக நடத்தப்பட்டவை. ஒருவரின் உயிரியல் வயதுதான் (Biological Age) இந்த ஆராய்ச்சிக்கு அடிப்படை. அதைக் கண்டறிய உதவுவது ரத்தத்திலிருக்கும் பயாமார்க்கர்ஸ் (BioMarkers). 

யேல் பல்கலைக்கழகத்தின் நோயியல் நிபுணர் மோர்கன் லிவைன் (Morgan Levine) இந்த ஆராய்ச்சி குறித்து விவரிக்கும்போது, `ரத்தப் பரிசோதனை மூலம் பயாலாஜிக்கல் வயது கணக்கிடப்படும். இந்த வயது, ஒருவர் விரைவாக முதுமையை நோக்கி நகர்கிறாரா, இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள உதவும். ஒருவரின் உறுப்புகளின் வளர்ச்சி, அவற்றின் செயல்பாடுகளைப் பொறுத்துதான் பயாலாஜிக்கல் வயது அமையும். பொதுவாக, உடலும் மனதும் இயல்புக்கு மீறி முதிர்ச்சியடைந்தால், பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் எளிதில் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அவர்களுக்கு, மரணமும் முன்கூட்டியே நிகழலாம். பிறந்த ஆண்டின் அடிப்படையில் கணக்கிடப்படும் வயதுக்கும், இந்த பயாலாஜிக்கல் வயதுக்கும் இருக்கும் வித்தியாசத்தைப் பொறுத்து முடிவுகள் சொல்லப்படும்' என்று குறிப்பிட்டிருக்கிறார். `இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்பவர்களில், யார் ஆரோக்கியமாக இருக்கிறார்கள், யார் ஆரோக்கியமில்லாமல் நாள்களை நகர்த்துகிறார்கள் என்பதையும் சொல்ல முடியும்’ என்கிறார்கள் ஆய்வாளர்கள். `ஆரோக்கியமில்லாமல் விரைவாக முதுமையை அடைபவர்களின் உடலில் என்னென்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பதைக் கண்டறிந்துவிட்டால் அவற்றைச் சரிசெய்துவிட முடியும்’ என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த ஆராய்ச்சியால் கிடைக்கும் முக்கியமான நன்மையாகவும் இதைத்தான் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ரத்தப் பரிசோதனை

பயாலாஜிக்கல் வயது, `பினோடைபிக் வயது’ (Phenotypic age) என்றும் குறிப்பிடப்படுகிறது. பிறந்த ஆண்டிலிருந்து கணக்கிடப்படும் வயது, `குரோனோலாஜிக்கல் வயது’ (Chronological age) எனக் குறிப்பிடப்படுகிறது. 1999-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை நிகழ்த்தப்பட்ட ஆய்வின் முடிவில், ஆண்களைவிட பெண்களுக்கு பினோடைபிக் வயது குறைவாக இருப்பது தெரியவந்திருக்கிறது. அதாவது, பெண்கள் மெதுவாகத்தான் முதுமையை அடைகிறார்களாம்.

குரோனோலாஜிக்கல் வயதைவிட, பயாலாஜிக்கல் வயது அதிகமாக இருந்தால், சம்பந்தப்பட்டவர் ஆரோக்கியமின்மையுடன் முதுமையை அடைகிறார் என்றும், குறைவாக இருந்தால் ஆரோக்கியமாக முதுமையை அடைகிறார் என்றும் அர்த்தம். 

குரோனோலாஜிக்கல் வயதைவிட பினோடோபிக் வயது அதிகமானால்...

20 முதல் 39 வயதுடையவர்கள் - 14 சதவிதம் இறப்பு சீக்கிரமாக ஏற்படும்.

40 முதல் 64 வயதுடையவர்கள் - 10 சதவிதம் இறப்பு சீக்கிரமாக ஏற்படும்.

65 முதல் 84 வயதுடையவர்கள் - 8 சதவிதம் இறப்பு சீக்கிரமாக ஏற்படும்.

விரைவாக முதுமை ஏற்படுவதற்கான காரணங்கள்...

தொடர் மன அழுத்தம், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, புகைபிடிப்பது, உடல் பருமன்.

ரத்த மாதிரி

ரத்தச்சோகை தொடங்கி புற்றுநோய், எய்ட்ஸ் வரை எல்லா வகை நோய்களையும், ரத்தப் பரிசோதனை மூலமாகத்தான் மருத்துவர்கள் வயது நிர்ணய நிர்வாக நிபுணர் கௌசல்யா நாதன்உறுதிசெய்வார்கள். இனி, ஆயுட் காலத்தையும் அதன் மூலமே அறிந்துவிடலாம் என்கிற இந்த ஆய்வு மிக முக்கியமான ஒன்று. இது குறித்து வயது நிர்ணய நிர்வாக நிபுணர் கௌசல்யா நாதனிடம் கேட்டோம்... ``இந்த ஆய்வில் கவனிக்கவேண்டிய இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று, ஆண்களைவிட பெண்கள்தாம் மெதுவாக முதுமையை அடைவதாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அது உண்மைதான். பெண்களுக்கு இருக்கும் ஈஸ்ட்ரோஜென் என்ற சுரப்பி, ஆண்களுக்குக் கிடையாது. அந்த ஈஸ்ட்ரோஜென்தான் பெண்களை முதுமையிலிருந்து காக்கிறது. மற்றொரு முக்கியமான கருத்து, முதுமை விரைவாக ஏற்படுவதற்கு ஆய்வாளர்கள் குறிப்பிட்டிருக்கும் காரணங்கள். அதாவது, பல ஆண்டுகளாக ஆரோக்கியமற்ற வாழ்க்கை வாழ்வதை முதுமைக்கான காரணங்களாக மருத்துவர்கள் சொல்பவை. வாழ்வியல் முறைகளை நெறிபடுத்திக்கொண்டால், ஒருவர் ஆரோக்கியமாக, பல ஆண்டுகள் வாழலாம் என்பதைச் சொல்வதால், இந்த ஆய்வு ஏற்புடையதுதான். சொல்லப்போனால் இன்றையச் சூழலில் வாழ்வியல் மாற்றங்களைவிட, நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டியது உணவுகளுக்குத்தான். கலப்படமில்லாத சுத்தமான உணவே, நம்மைப் பல்வேறு நோய் பாதிப்புகளிலிருந்து காப்பாற்றிவிடும்’’ என்கிறார் கௌசல்யா நாதன்.

இது குறித்து சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை ரத்தவியல் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் சுபாஷிடம் சுபாஷ், ரத்தவியல் துறைத்தலைவர்பேசினோம்... ``இதில் கணக்கிடப்படும் பினோடைபிக் வயது, பல்வேறு உயிரியல் பண்புகளை (Biological Factors) பொறுத்து கணக்கிடப்படுவது. ஆய்வில், உயிரியல் பண்புகளின் ஏதாவதொன்றின் மூலமாக, ஒருவரின் ஜீன் மேப்பிங்கை கண்டறிந்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள். ஜீன் மேப்பிங் மூலம், ஒரு மரபணுவின் இருப்பிடத்தையும், மரபணுக்களுக்கு இடையே உள்ள இடைவெளியைக் கண்டறியவும் கணக்கிடவும் முடியும். ஜீன் மேப்பிங், ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்து மாறுபடும். ஜீன் மேப்பிங்கைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்டவரின் ஹெச்.எல்.ஏ.வைத் (HLA) தெரிந்துகொண்டு, அதன் மூலம் பினோடைபிக் வயது கணக்கிடப்பட்டிருக்கிறது. ஹெச்.எல்.ஏ என்பது, மனித உடலிலுள்ள ஒருவகைப் புரதம். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை ஒழுங்குப்படுத்துவதுதான் இதனுடைய வேலை. இந்த ஆராய்ச்சிக்காக, மக்கள் பல வருடங்களாகத் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுபோல மக்களைப் பின்தொடர்ந்து செய்யும் ஆராய்ச்சிகளை, நான் - ஸ்பெசிஃபிக் ஃபேக்டர்ஸ் (Non-Specific Factors) எனக் குறிப்பிடுவார்கள். முழுக்க முழுக்க கண்காணிப்பு ஆய்வான (Observational Study) இது, பொது மக்களின் பயன்பாட்டுக்கு வருவது சிரமம். காரணம், அதன் துல்லியத் தன்மை (Accuracy). கண்காணிப்பு முறை மூலம் செய்யப்படும் ஆய்வுகளை எப்போதும் உறுதியாக ஏற்றுக்கொள்ள முடியாது’’ என்கிறார் சுரேஷ்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்