வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (01/08/2018)

கடைசி தொடர்பு:17:16 (01/08/2018)

புன்னகை நிரந்தரம்! இனி பல் செட் தேவையில்லை... Exclusive Deal

'நொறுங்கத் தின்றால் நூறு வயதுவரை வாழலாம்' என்பது சொல் வழக்கு, ஆனால் சிலருக்கு நூறு வயது ஆனாலும் உணவை நொறுக்கித் தின்பதே கதியாகிவிடுகிறது. பற்கள் இன்றி பல் செட் அணிந்தவர்களின் நிலைமைதான் இது! பற்களில் பிரச்னை இருக்கும்போது ஐஸ் க்ரீம், சாக்லேட் சாப்பிட முடியாதது நிச்சயம் பெரிய வருத்தம்தான் என்றாலும், உடலுக்குத் தேவையான உணவைக் கூட உண்ணமுடியாத இவர்களின் நிலை பரிதாபத்துக்குரியது. பல் செட் அணிவோருக்கு மென்று தின்பது சிரமம் என்பதால், சம்பிரதாயத்துக்கு உணவை மேலோட்டமாய் மென்று விழுங்குகின்றனர். உடலின் ஆரோக்கியம் உணவிலேயே இருக்கிறது, உணவு வயிற்றுக்கு பயணிக்கும் முன் நுழைவு 'வாய்'இல் அவற்றைப் பதப்படுத்தி அனுப்ப பற்களின் பங்கு முக்கியம், முறையாக மென்று உண்ணாத உணவு சீரணப் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது, இதனால் பக்க விளைவுகள் பல ஏற்பட்டு உடல் சிரமப்படுகிறது.

மன அழுத்தம், உஷார்!

பல் செட் வாய்க்குள் நிரந்தரப் பற்களைப் போல பொருந்துவதில்லை என்பதால், பல் செட் அணிந்தவர்கள் பேசுவதில் சிரமப்படுகின்றனர். அழகு என எடுத்துக்கொண்டால் நம் முகத்துக்கு சீரான அமைப்பை வழங்குவதே பற்கள்தான். புன்னகையைவிட வசீகரம் இருக்கமுடியுமா? வயதானவர்களுக்கு பற்கள் விழுந்துவிடும்போது, ஈர்கள் தேயத் தொடங்குகின்றன. இங்கு ஏற்படும் குழியில் கண்ணத் தசைகள் அழுந்தி, பொக்கை வாயாக காட்சியளிக்கிறது. பல் விழுந்த பின் சிரிப்பதற்கே தயங்கி, சமுதாய சந்திப்புகளில் இருந்து விலகிக்கொள்பவர்கள் ஏராளம். இதனால் மன ரீதியான பாதிப்புகள், தன்னம்பிக்கை குறைந்துபோதல், மன அழுத்தம் ஆகியவை ஏற்படுகின்றன.  எனவே, ஆரோக்கியம், அழகு, பேச்சு - இவையனைத்துக்கும் முக்கியத் தேவை பற்கள்தான் என்று கொஞ்சம் மிகைப்படுத்திக்கூடச் சொல்லலாம்!

Periodontal disease எனப்படும் ஈறு நோயால்தான் பல் விழும் அபாயம் அதிகமாகவுள்ளது. பொதுவாக 40 வயதுக்கு மேல் முடி நரைத்துப்போவது போல் பற்களுக்கும் வயசாகிறது என்பதை நாம் உணர வேண்டும். பல் ஈறு பிரச்னைகள் சிறிதளவு இருக்கும்போது,முதலில் ஈறுகள் வீங்கி வலியெடுக்கும், மேலும் ரத்தப்போக்கு, ஈறு கூச்சம், வாய் துர்நாற்றம், சுவை மாறுபாடு மற்றும் சீழ் கோப்பது என பிரச்னைகள் அதிகரித்து, ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்ட பற்கள் ஆடி விழுந்துவிடுகின்றன. இதற்கு தீர்வாகவும், மொத்த உடல்நலமும் பாதிக்காமல் இருக்கவும் பிற பற்களையும் பிடுங்கி, Dentures எனப்படும் செயற்கை பல் செட் பொருத்துவது வழக்கமான சிகிச்சையாக இருந்துவருகிறது.

பல் செட் வாழ்க்கை = நிம்மதியற்ற வாழ்க்கை!

முக லட்சணத்தைக் காக்கவும், பேச்சு மற்றும் உண்ணுவதில் உதவவும் பல் செட் போட்டுக்கொள்ளும்போது, ஏதோ புது வஸ்துவை வாய்க்குள் திணித்ததுபோல்தான் இருக்கும். பல் செட் அணிபவர்களுக்கு பேசுவதில் சிக்கலும், பிறரிடம் எதார்த்தமாக நடந்துகொள்ள முடியாத நிலையும் ஏற்படுகிறது!  இரவு நேரங்களில் வாயிலிருந்து பல் செட்டைக் கழற்றி பிரத்தியேக கரைசல் அல்லது நீரில் போட்டுவிடவேண்டும் என்பது இவர்கள் வாழ்நாள் முழுக்கச் செய்யவேண்டிய கடமையாகவே ஆகிவிடுகிறது. இரண்டு வருடத்துக்கு ஒருமுறை பல் செட்டையும் மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். 

பல் செட்டுக்கு மாற்றுகள்...

பல் செட் நிரந்தரமாக பழைய பற்கள் போல அமைந்தால் நன்றாக இருக்குமே என பல் செட் அணிபவர்கள் ஏங்குவது உண்டு. ஏக்கம் இனித் தேவையில்லை, நவீன சிகிச்சை இதைச் சாத்தியமாக்கிவிட்டது என்பதுதான் இவர்களுக்கான நற்செய்தி! ஆல் ஆன் 2 எனப்படும் செமி சப்போர்ட்டட் இம்பிளாண்ட் சிகிச்சையில் தாடை எலும்புகளில் 2 துளைகள் இடப்படுகிறது, அதன்மேல் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட பல் செட்டை வைத்து,  துளைகள் இருக்கும் இடத்தில் ஸ்க்ரூ (screw) வைத்து பொருத்தப்படுகிறது. இது கழட்டக்கூடிய பல் செட் போல்தான், ஆனால், பழைய பல் செட்கள் போல எதிர்பாராத நேரத்தில் கழண்டு போகாது, ஸ்திரமானதாக இருக்கும்!

ஆல் ஆன் 4 அமைப்பு சிகிச்சை

ஆல் ஆன் 4 (All on 4) சிகிச்சை இப்போது வந்துவிட்டதால், நிரந்தரமாக பல் செட்களை வாயில் பொருத்திக்கொள்ளமுடியும். தாடை எலும்புகளில் நான்கு துளைகள் இடப்பட்டு நிரந்தர பல் செட் பொருத்தப்படுகிறது! பாதுகாப்பான ஆல் ஆன் 4 சிகிச்சைக்குப் பின் கிட்டத்தட்ட நிரந்தரப் பற்களை பெற்றதுபோல்தான்! ஆண்டுக்கணக்கில் பல் செட்டோடு போரிட்டு அவஸ்தைப்பட்டவர்களுக்கு 3 மணிக்கும் குறைவான நேரத்தில் நிரந்தரப் பற்கள் கிடைத்துவிடுகின்றன. பிறகென்ன? முகவசீகரம் அதிகரிப்பதால் எல்லோரையும் போல தன்னம்பிக்கையோடு உலாவலாம், வாய்விட்டுச் சிரிக்கலாம், மணிக்கணக்கில் உரையாடலாம், நினைத்த நேரத்தில் விரும்பிய உணவுகளை உண்டு மகிழலாம். சுருக்கமாகச் சொன்னால் வாழ்க்கையையே மாற்றி புத்தம்புதுப் பொலிவைத் தந்துவிடுகிறது ஆல் ஆன் 4 சிகிச்சை முறை! 

கை தேர்ந்த பல் மருத்துவர்களின் துணையோடு, நவீன பல் சிகிச்சைகளை உயர்தரத்தில் சென்னையில் வழங்கிவருகிறது கோல்டு டென்டல் கேர் - Gold Dental Care நிறுவனம். ஆகஸ்ட் மாதம் Dental Implant Month என அறியப்படுகிறது. இம்மாதத்தில், கோல்டு டென்டல் கேர் தங்களது "Denture Free India" Campaign-ஐத் துவக்கியுள்ளது. பல் ஆரோக்கியத்துக்கு அனைவரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பிரசாரத்தின் மூலம் பல் குறித்த பல விழிப்பு உணர்வுகளை மக்களுக்கு ஏற்படுத்தவுள்ளது கோல்டு டென்டல் கேர். மேலும், பல் செட் போட்டு சிரமப்படுபவர்கள் இந்த சிகிச்சையை எடுத்துக்கொள்ள விரும்பினால் விகடன் வாசகர்களுக்கென 55% சதவிகிதம் வரை பிரத்யேக தள்ளுபடியையும் இந்நிறுவனம் வழங்குகிறது, மாதத் தவணை மூலமாகவும் இச்சிகிச்சையைப் பெறலாம். எலும்பு தேய்மானம் மோசமாக இருப்பினும், எலும்புகளை வளரவைத்து, அவற்றில் ஆல் ஆன் 4 போன்ற சிகிச்சைகள் மூலம் புது பற்களை பொருத்தமுடிவது நம்பிக்கையை அளிப்பதால், இனி பல் செட் அணியாத எதிர்கால இந்தியாவை நிச்சயம் எதிர்பார்க்கலாம்! 

கீழ்கண்ட படிவத்தை பூர்த்தி செய்க...

விவரங்களைப் பெற

நீங்க எப்படி பீல் பண்றீங்க