வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (06/09/2018)

கடைசி தொடர்பு:16:02 (28/09/2018)

மகன் உயிரைக் காப்பற்றத் துடிக்கும் பெற்றோர்! Sponsored Content.

உயிரை விலை பேசமுடியாது, உயிருக்கு விலை மதிப்பு கிடையாது, பொக்கிஷம் போன்றது, போனால் வராதது. நம் உடலில் இருப்பது மட்டும் அல்ல நம் உயிர், நாம் நேசிப்பவரின் உயிரும் நம் உயிர்தான்.

"அப்பா, சீக்கிரம் ஆபரேஷன் முடிச்சிட்டா, உடனே ஸ்கூலுக்கு போகலாமா?", சாய் ராஜேஷின் இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வார் அப்பா ரமணா? தன் ஒரே மகனை சாவின் விளிம்பிலிருந்து மீட்டுக் கொண்டுவரும் போராட்டத்தில் நிதம் நிதம் இறந்துகொண்டிருக்கும் ரமணா-கிருஷ்ணவேணி தம்பதிக்கு கடந்த 5 மாதங்கள் அவர்கள் வாழ்வில் எதிர்பார்த்திராத வலி மிகுந்த இருண்ட நாட்கள்...

5 மாதங்களுக்கு முன்பு...

சாய் ராஜேஷ், 9ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் சிறுவன். சாய் என்றால் நண்பர்களுக்கும் வீட்டினருக்கும் ரொம்ப இஷ்டம். தங்களின் ஒரே செல்ல மகனின் அன்பான சுபாவம் குறித்து தந்தை ரமணாவுக்கு பெருமிதம். நன்றாக படிக்கும் மகன் நிச்சயம் வாழ்வில் சாதித்து பெரிய இடத்துக்குச் செல்வான் என மகிழ்ச்சியாக இருந்தனர் பெற்றோர்.

எப்போதும் துறுதுறுவென இருக்கும் சாயின் நடவடிக்கைகள் திடீரென குறைய ஆரம்பித்தன. உடலில் சோர்வும் தன் வயதை ஒத்த பிற குழந்தைகளைப் போல ஓடியாடி விளையாட முடியாதவாறும் களைப்பும் அதிகமாகிக் கொண்டே  வர, ஒரு குறிப்பிட்ட நாள் ஸ்கூலில் இருந்து வரும்போது சாயின் உடல்நிலை மிகவும் மோசமாக, உடனே பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். சாய்-ஐ பரிசோதித்து செய்து 2 மாதங்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. இரண்டு, மாதங்கள் முடிந்தது, மருந்து மாத்திரைகள் முடிந்தன, ஆனால் சாயின் நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை... தன் பிள்ளைக்கு வந்திருக்கும் நோயின் இயற்கை அறியாது திண்டாடிப் போன பெற்றோர் சென்னையில் மருத்துவம் பார்க்க மகனை அழைத்துக்கொண்டு வந்தனர்.

அங்கு சாய்-ஐ பரிசோதித்த டாக்டர்கள் கூறியது ரமணா - இதயத்தையே உறையவைத்தது. ஆம், சாய்க்கு இதயத்தில்தான் பிரச்னை. அவனுக்கு வந்திருப்பது Dilated Cardiomyopathy எனப்படும் இருதயக் கோளாறு. சாய் அபாயகரமான கட்டத்தில்தான் இப்போது இருக்கிறான், தன் உயிரைக் காப்பாற்றக்கூடிய இருதய மாற்று அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையின் படுக்கையில் வாழவேண்டிய ஒவ்வொரு நாளையும், நிமிடத்தையும், நொடியையும் இழந்து காத்துக்கொண்டிருக்கிறான்.

இவ்வருடம் 10ஆம் வகுப்புக்குச் செல்லவேண்டிய சாய்க்கு அரசு வேலையில் சேர்ந்து மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்பதே லட்சியம். இப்போது மகனின் படிப்பெல்லாம் ஒரு பொருட்டல்ல, சாய் உயிரோடு இருந்தாலே போதும் எனும் நிலையில் தங்களின் சந்தோஷத்தையெல்லாம் தொலைத்துவிட்டு நடைப்பிணமாக இருக்கின்றனர் அவனின் பெற்றோர். மாதம் மூன்று பேருக்கு மட்டுமே போதக்கூடிய மிகச் சொற்பமான வருவாய் ஈட்டிவந்த குடும்பத்தின் கற்பனைக்கும் எட்டாத தொகையாக ரூபாய் 30 லட்சம் ரூபாய் சாயின் இருதய மாற்று அறுவை சிகிச்சைக்குத் தேவைப்படுகிறது. இதுவரை மருத்துவத்துக்கு ஆன செலவுக்கே கடன் வாங்கித்தான் நிலைமையை சமாளித்துவந்துள்ள  பெற்றோர் அறுவை சிகிச்சைக்கு பணம் புரட்ட செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

ஆபரேஷனுக்கு பிறரின் உதவியை நாடிவரும் சாயின் குடும்பத்துக்கு உதவ நிதிதிரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது Imapactguru.com. எங்கள் மகன் உயிரோடு மீண்டு வந்தாலே போதும், ஆபரேஷனுக்கு உதவிசெய்யும் நல்ல உள்ளங்களுக்கு காலம் உள்ளவரை எங்கள் உயிரைக் கொடுத்தேனும் விசுவாசமாக இருப்போம் எனக் கலங்கிய கண்களுடனும் கனத்த இதயத்தோடும் மன்றாடிக் கேட்டுக்கொள்கின்றனர் ரமணா-கிருஷ்ணவேணி.

சாய் ராஜேஷின் உயிரைக் காப்பாற்ற நம்மால் ஆன உதவியை இந்த லிங்கிற்குச் சென்று செய்யலாம். இதயம் இரங்குவோம், இதயம் துடிக்கட்டும்...

பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரை  Impact Guru- வின் விளம்பரதாரர் பகுதி. இதில் கூறப்பட்டுள்ள உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் விகடன் நிர்வாகம் பொறுப்பல்ல. மேலும் வாசகர்கள் இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம். நன்கொடை செய்வதற்கு முன்னர் வாசகர்கள் உண்மைத்தன்மையை சுயாதீனமாக சரிபார்த்துக்கொள்ளவும்.   
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க