உணவுமுறை மாற்றம், யோகாவால் தைராய்டை குணமாக்கலாம்!

அயோடின் குறைபாட்டால் கழுத்துப் பகுதியில் உள்ள எண்டோகிரைன் சுரப்பிகள் பாதிக்கப்பட்டு அழற்சியை ஏற்படுவதையே 'தைராய்டு' என்கிறோம்.

உணவுமுறை மாற்றம், யோகாவால் தைராய்டை குணமாக்கலாம்!

லக மக்கள்தொகையில் 3 சதவிகிதம் பேருக்கு `தைராய்டு குறைபாடு காணப்படுகிறது. மாறிவரும் வாழ்க்கைமுறையும் உணவுப்பழக்கமுமே தைராய்டு வரக் காரணமாகின்றன. இது, பெண்களை மட்டுமே பாதிக்கும் என்று கருதவேண்டாம். இருபாலாரையும் எந்தவித பேதமுமின்றி பாதிக்கும் குறைபாடு இது. பெண்களைக் கொஞ்சம் அதிகமாகவே பாதிக்கிறது' என்கிறார் மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் தமிழ்ச்செல்வி.

தைராய்டு


பெண்கள் மத்தியில் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தும் இந்தப் பாதிப்பு குறித்து அவர் விரிவாகப் பேசினார்.
``தைராய்டு என்பது ஒரு நோய் அல்ல.  அயோடின் குறைபாட்டால் கழுத்துப் பகுதியில் உள்ள எண்டோகிரைன் சுரப்பிகள் பாதிக்கப்பட்டு அழற்சியை ஏற்படுவதையே 'தைராய்டு' என்கிறோம். இது ஹைப்பர் தைராய்டிசம், ஹைப்போ தைராய்டிசம்  என இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது. 

ஹைப்பர் தைராய்டிசம் உள்ளவர்களுக்குச் சுரப்பியின் செயல்பாடு அதிகரிப்பதால் ஹார்மோன் உற்பத்தி அதிகமாக இருக்கும். அதிக பசி உண்டாகும். ஆனாலும் உடல் மெலிந்து காணப்படுவார்கள். இதயத்துடிப்பு அதிகரிக்கும். ஆண்களுக்கு மார்பு வளர்ச்சி, தசை தளர்ச்சி, கைகால் நடுக்கம் ஏற்படும். பெண்களுக்கு மாதவிடாய்க் குறைபாடு, அதிக வியர்வை மற்றும் வயிற்றுப்பிரச்னைகள் உண்டாகும். இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு இதய நோய், எலும்புத் தேய்மானம், பார்வைக் குறைபாடு போன்றவை ஏற்படும். இவர்களால் அதிக வெப்பத்தைத் தாங்கிக்கொள்ள முடியாது.

ஹைப்போ தைராய்டு என்பது தைராய்டு சுரப்பியின் செயல்பாடு குறைவதைக் குறிக்கும். இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு ஹார்மோன் குறைவாக சுரக்கும். உடல் எடை அதிகரிக்கும்.  பெரும்பாலும் இதய நோய், வலிப்பு நோய் மற்றும் புற்றுநோய்க்காக எடுத்துக் கொள்ளப்படும் மாத்திரைகளால் ஏற்படும் பக்கவிளைவுகளே இத்தகைய நிலையை உருவாக்கும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் இந்தக்குறைபாடு பாதிப்பு மூளையில் உள்ள `ஹைப்போதாலமஸ்' தைராய்டைக் கட்டுப்படுத்தத் தவறுவதால் ஹார்மோன் உற்பத்தி குறைந்தும் இந்தக் குறைபாடு ஏற்படலாம். ஹைப்போ தைராய்டு உள்ளவர்களால் குளிரைத் தாங்கிக்கொள்ள முடியாது. தோலில் வறட்சி, அடிக்கடி சளி பிடித்தல், உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமை போன்ற பிரச்னைகள் இருக்கும். 

தைராய்டு

தைராய்டு ஏற்பட முக்கியக் காரணம் உணவு முறையே. பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும் பொருள்கள்தான் தைராய்டு சுரப்பியை சிதறடிக்கச் செய்துவிடுகிறது. இதனால் சத்துக் குறைபாடு உண்டாகிறது. இத்தகைய சூழலில் குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் தள்ளிப்போவது, கருச்சிதைவு, கருமுட்டையில் கட்டி போன்றவை உண்டாகின்றன. இதனால்தான் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

என்னிடம் சிகிச்சைக்காக வந்த ஒரு பெண்ணுக்கு வயது 20. சிகிச்சைக்கு வருவதற்கு மூன்று மாதத்துக்கு முன் அவருக்கு மாதவிடாய் வந்துள்ளது. அதன்பிறகு வரவில்லை. மேலும் 70 கிலோவுக்கு மேல் அவரது உடல் எடை இருந்தது. பொதுவாக இன்றைய பெண்கள் ஒரே இடத்தில் மணிக்கணக்கில் உட்கார்ந்து வேலைபார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலானோர் மூளைக்கு மட்டுமே  வேலை கொடுக்கிறார்கள். இதனாலும் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. 

ஹைப்போ தைராய்டு பிரச்னையுடன் வந்த அவருக்கு மருந்து, மாத்திரைகள் கொடுத்ததுடன் உடற்பயிற்சிகள் மற்றும் யோகா செய்யுமாறு அறிவுறுத்தினேன்.  ஒரு வருட சிகிச்சை மற்றும் யோகா பயிற்சிகளால் அவரது எடை 20 கிலோ குறைந்திருக்கிறது. மூச்சு வாங்குதல், அதிக வியர்வை, இதயத் துடிப்பு போன்றவை சமநிலைக்கு வந்துள்ளன. இப்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது'' என்கிறார் தமிழ்ச்செல்வி.

தைராய்டு

தைராய்டு குறைபாடுகளைப் போக்குவதில் ஆசனங்களின் பங்கு மிகவும் முக்கியமானது. இதுகுறித்து இயற்கை மற்றும் யோகா மருத்துவர் ஒய்.தீபாவிடம் கேட்டோம். அவர் விரிவாகப் பேசினார்.

`` தைராய்டு சுரப்பி குறைவாகவோ அல்லது அதிகமாகவோ வேலை செய்வதைக் கட்டுப்பாட்டில் வைக்க மத்ஸ்யாசனம், உத்தானபாதாசனம், சர்வாங்காசனம் போன்ற ஆசனங்கள் உதவும். அத்துடன் பிட்யூட்டரி சுரப்பியின் செயல்பாடுகளை அதிகரிக்கவும் இந்த ஆசனங்கள் உதவும்.

விபரீதகரணி என்ற ஆசனம் செய்வதால் கழுத்துப் பகுதியில் ரத்த ஓட்டம் சரியாகும். இதனால் தைராய்டு சுரப்பிகள் நன்றாக வேலை செய்யும். ஹாலாசனம் செய்வதால் தலைக்குப் பின் பகுதியிலுள்ள பிட்யூட்டரி சுரப்பி நன்றாக வேலை செய்யும். அத்துடன் தைராய்டு, பாரா தைராய்டு ஆகிய சுரப்பிகள் நன்றாக சுரக்கத் தொடங்கும். ஆக, உடல்நலத்துக்குத் தேவையான ஹார்மோன்கள் அனைத்தும் சீராகச் சுரக்கும். 

தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் முட்டைக்கோஸ், காலிஃபிளவர் போன்றவற்றைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தேங்காய், வெள்ளைப்பூண்டு, வெங்காயம், பசலைக்கீரை, சிவப்பரிசி போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் இஞ்சி, மஞ்சள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதால் தைராய்டு சுரப்பிக்கு நல்ல பாதுகாப்புக் கிடைக்கும்'' என்கிறார் தீபா.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!