`20 நிமிஷம் இரவு வாக்கிங்; `2000 ஸ்கிப்பிங்'! - வில்லன் ஆர்.கே.சுரேஷின் ஹீரோ அவதாரம் | Fitness secret of RK Suresh

வெளியிடப்பட்ட நேரம்: 14:05 (14/09/2018)

கடைசி தொடர்பு:14:05 (14/09/2018)

`20 நிமிஷம் இரவு வாக்கிங்; `2000 ஸ்கிப்பிங்'! - வில்லன் ஆர்.கே.சுரேஷின் ஹீரோ அவதாரம்

'தாரை தப்பட்டை' 'கருப்பையா', 'மருது' 'ரோலக்ஸ் பாண்டியன்'  எனத் தமிழ் சினிமாவில் 'மிரட்டல் வில்ல'னாகத் தடம் பதித்தவர் பிரபல தயாரிப்பாளரும்  நடிகருமான ஆர்.கே.சுரேஷ். விரைவில் வெளியாக இருக்கும் 'பில்லா பாண்டி' படத்தில் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.

ஆர்.கே.சுரேஷ்

தமிழ் சினிமாவில், கதாபாத்திரங்களுக்காக உடலை மாற்றும் திறன்கொண்ட நடிகர்களில் ஒருவராக உருவாகியிருக்கும் ஆர்.கே.சுரேஷ், ஒரு ஸ்கிப்பிங் பிரியர். அதிகாலை, மதியம், மாலை, இரவு என ஒரு நாளைக்கு நான்கு முறை தலா 500 தடவை சளைக்காமல் ஸ்கிப்பிங் செய்கிறார். 

ஓர்க் அவுட் செய்யும் ஆர் கே சுரேஷ்

"ஒருநாளைக்கு, சராசரியா  இரண்டு மணி நேர வொர்க் அவுட் நிச்சயம் இருக்கும். நேரம் கிடைக்கும்போது, ஸ்விம்மிங், சைக்கிளிங் மிஸ் பண்ண மாட்டேன்.  எண்ணெய்  சேர்த்த  உணவுகளைக் குறைவாகத்தான் சாப்பிடுவேன். இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை பிளாக் டீ அல்லது கிரீன் டீ குடிப்பது வழக்கம். காலையில் இரண்டு இட்லி, மதியம் சாப்பாட்டோட கிரில்டு சிக்கன்தான் என் பேவரைட் டிஷ். இட்லி, தோசை, சப்பாத்தினு  டின்னர் எப்போதும் லைட்டாதான் இருக்கும். நைட்  சாப்பாட்டுக்கு அப்புறம், ஒரு 20 நிமிஷம் வாக்கிங் போயிட்டு வந்துதான் தூங்குவேன்" என்கிறார் ஆர்.கே.சுரேஷ்

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க