அக்வாதெரபி... பச்சிளம் குழந்தைகளுக்கு நல்லது..! ஏன், எங்கே, எப்படி? #AquaTherapy

பச்சிளம் குழந்தைகளின் பசியின்மை, சோர்வு போக்கும் 'அக்குவாதெரபி'!

அக்வாதெரபி... பச்சிளம் குழந்தைகளுக்கு நல்லது..! ஏன், எங்கே, எப்படி? #AquaTherapy

குழந்தைகளுக்கு தண்ணீரில் விளையாட ரொம்பவே பிடிக்கும். நாம் எவ்வளவு தடுத்தாலும், நமக்குத் தெரியாமல் தண்ணீரில் ஆட்டம் போடுவார்கள். விளையாட்டாகச் செய்யும் அந்தச் செயலில் ஒரு மருத்துவ உண்மை ஒளிந்திருக்கிறது. 'தண்ணீரில் நீந்திக் குளிப்பது மிகச் சிறந்த தெரபி' என்கிறது மருத்துவம். அதன் அடிப்படையில்,  பச்சிளம் குழந்தைகளை நீச்சல் குளத்தில் நீந்தவிட்டு மசாஜ் செய்யும் வித்தியாசமான பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இத்தகைய சிகிச்சையை  'அக்வாதெரபி'  என்கிறார்கள். இந்தப் பயிற்சி குழந்தைகளுக்கு புத்துணர்ச்சி தரக்கூடியதாக இருக்கும் என்கிறார்கள் பிசியோதெரபிஸ்டுகள். 

அதென்ன... அக்வா தெரபி..?

"பிசியோதெரபி வகைகளில் இது ஒரு பயிற்சி. பச்சிளம் குழந்தைகளின் கழுத்தில் காற்று நிரப்பிய பலூன்களை பொறுத்தி நீச்சல்குளத்தில் நீந்தவிட்டு மசாஜ் செய்யும் இந்தப் பயிற்சிக்கு  'அக்வா தெரபி' (Aqua Therapy) என்று பெயர். இதை `அக்வாடிக் தெரபி' (Pediatric Aquatic பிசியோதெரபிஸ்ட் ஆதிTherapy) என்றும் `ஹைட்ரோ தெரபி' (Hydrotherapy) என்றும்கூடச் சொல்வார்கள்" என்கிறார் பச்சிளம் குழந்தைகளுக்கு `அக்வாதெரபி' சிகிச்சை அளிக்கும் தெரபிஸ்ட் ஆதி. `அக்வாதெரபி' பயிற்சி அளிக்கப்படும் விதம், அதனால் என்னென்ன பலன்கள் என்பது பற்றியும் அவர் விளக்கினார். 

"பச்சிளம் குழந்தைகள் படுத்துக்கொண்டிருக்கும்போது கைகால்களை அங்குமிங்கும் அசைத்துக்கொண்டே இருப்பார்கள். அதனால் குழந்தைகளை நீச்சல்குளத்தில் பழக்குவது மிகவும் எளிதான விஷயம்.  குழந்தைகளின் கழுத்தில் காற்று நிரப்பிய பலூன்களை பொறுத்தி நீச்சல்குளத்தில் விட்டதும் குதூகலமாகிவிடுவார்கள். படுக்கையில் எப்படி கை, கால்களை அசைப்பார்களோ அதைவிட அதிகமாகவே நீச்சல்குளத்தில் சுற்றிச் சுழல்வார்கள். குழந்தைகள் தாயின் கருப்பையில் இருக்கும்போது, பனிக்குடத் தண்ணீரில்தான் இருப்பார்கள். அதே வெப்பநிலை, அக்வா தெரபி அளிக்கும் நீச்சல்குளத்திலும் பராமரிக்கப்படுவதால் அவர்களுக்கு அது இன்னும் நெருக்கமாக இருக்கிறது.

முதலில் குழந்தைகளின் உடல்தகுதி மதிப்பிடப்படும். எடை, உயரம்,  உடல் வெப்பநிலை உள்ளிட்ட பரிசோதனைகளைச் செய்வோம். குழந்தைகளுக்கு முறைப்படி தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். இருமல், சளி உள்ளிட்ட உடல்நலப் பிரச்னைகள்  இல்லாமலிருப்பதும் அவசியம். பரிசோதனைகள் முடிந்ததும் குழந்தைகளுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க, பிரத்யேகமான டயாப்பர் அணிவிப்போம். காற்று நிரப்பிய பலூன்களை குழந்தைகளின் கழுத்துப் பகுதியில் பொருத்துவோம்.  அது, குழந்தைகள் தண்ணீரில் மூழ்கிவிடாமல் தடுக்கும் பாதுகாப்புக் கவசமாக இருந்து,  தன்னிச்சையாக நீந்த உதவும். கழுத்து நிற்காத பச்சிளம் குழந்தைகளுக்கென சிறப்பு பலூன்களைப் பயன்படுத்துகிறோம். 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை பராமரிக்கும் வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நீச்சல் குளத்தில் குழந்தைகளை நீந்தவிடுவோம். 

நீந்தும் குழந்தை

குழந்தைகளுக்கு தொற்று எதுவும் பாதிக்காத வண்ணம், தண்ணீரைச் சுகாதாரமாகப் பராமரிப்போம். தொடக்கத்தில் சில குழந்தைகள்  அழத்தொடங்கும் என்பதால், பெற்றோரையும் அனுமதிப்போம். நீச்சல் பயிற்சி முடிந்து குழந்தைகளை வெளியே அழைத்துவரும்போது அவர்களுக்குக் குளிரக்கூடாது என்பதற்காக, ஓவனில் மிதமான சூட்டில் வைக்கப்பட்ட 'வார்ம் டவல்' (Warm Towel) பயன்படுத்துவோம். அந்த டவல்களால் அவர்களது உடலைச் சுற்றி எடுத்துவந்து மசாஜ் செய்வோம். ஆக, ஒரே நேரத்தில் நீச்சல், நீர் சிகிச்சை, மசாஜ் ஆகிய மூன்று பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பிறந்து ஒரு மாதம் முதல் மூன்றரை வயது வரையுள்ள பச்சிளம் குழந்தைகளுக்கு இந்த தெரபி அளிக்கிறோம். 

நன்மைகள்

உடல் முழுமைக்கும் பலனளிக்கக்கூடிய ஒரே பயிற்சி நீச்சல். கடினமில்லாத எந்த ஓர் உடற்பயிற்சியும் குழந்தைகளுக்குப் புத்துணர்வு தரும். இன்றைய வாழ்க்கைமுறையில் விளையாட்டு என்பது வீட்டளவில் சுருங்கிவிட்டது. சிறுவயதிலேயே அவர்களை இப்படி விளையாட்டில் ஈடுபடுத்தாமல்விட்டால், அது எதிர்காலத்தில் வேறு சில பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.  

மசாஜ்

சில குழந்தைகள், சரிவர தூங்காமல், சாப்பிடாமல், சோர்வாகவே இருக்கும். அந்தக் குழந்தைகளுக்கு இந்த நீச்சல்  - மசாஜ் பயிற்சி நல்ல பலனைக் கொடுக்கும். சிறு வயதிலிருந்தே நீச்சல் பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு உடல் தசைகள் வலுவாக இருக்கும். நல்ல உடல் ஆரோக்கியம் கிடைக்கும். நீச்சல் பயிற்சி மூளை வளர்ச்சியை மேம்படுத்தும். முழு உடல் எடையையும் தண்ணீர் தாங்குவதால் அவர்களால் எளிதாகக் கால்களை அசைக்க முடியும். இதனால் சீக்கிரமாகவே அவர்கள் நடக்கத் தொடங்கிவிடுவர். ஆட்டிசம் போன்ற மன வளர்ச்சி பாதிப்புள்ள சிறப்புக் குழந்தைகளுக்கு நீச்சல் நல்ல பலன் தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அக்வா தெரபியின் பூர்வீகம் அமெரிக்கா. தற்போது உலகின் பல நாடுகளுக்கும் இந்த சிகிச்சை முறை பரவி இருக்கிறது. இந்தியாவில் மும்பையில்தான் 2016-ம் ஆண்டு முதன்முதலாக இந்த சிகிச்சை தொடங்கப்பட்டது. தற்போது தமிழகத்திலும் பரவி வருகிறது. உரிய கண்காணிப்புடன், முறையான பயிற்சியாளரின் உதவியுடன் பயிற்சியளித்தால் இது ஆரோக்கியமானதாக பயிற்சியே!" என்கிறார் ஆதி.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!