வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (17/09/2018)

கடைசி தொடர்பு:15:30 (17/09/2018)

ஜி.வி.பிரகாஷின் எனர்ஜிக்கு காரணம் என்ன தெரியுமா? 

தற்போதைய தமிழ் சினிமாவின் 'மோஸ்ட் வாண்டட்' ஹீரோ ஜி.வி.யின் எனர்ஜிக்கு காரணம் என்ன தெரியுமா?

இயக்குநர் வசந்தபாலனின் 'வெயில்' திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்குமார். பரபரவென அடுத்தடுத்து துள்ளல் நடிகராக தன் இருப்பை உறுதி செய்துகொண்டுவிட்டார். தற்போதைய தமிழ் சினிமாவின் 'மோஸ்ட் வாண்டட்' ஹீரோ மெட்டீரியல். 'அடங்காதே', '100% காதல்' 'ஜெயில்' என அடுத்தடுத்து ரிலிஸூக்காக காத்திருக்கின்றன இவரின் படங்கள். 

ஜி வி பிரகாஷ்குமார்

இசை, நடிப்பு என ஓய்வின்றி இயங்கும் ஜி.வி.க்கு எங்கிருந்து வருகிறது எனர்ஜி? 

``கொஞ்சம் திட்டமிட்டா போதும்மா... எனர்ஜி தானா உடம்புல ஊறும்" என்று சிரிக்கிறார் சாக்லெட் பாய்." எவ்வளவு பிஸியா இருந்தாலும், தினமும் ஒன்றரை மணி நேரம் ஜிம்முக்குப் போய் வொர்க் அவுட் பண்ணிடுவேன். தொடர்ந்து ஷூட்டிங் இருந்து, எக்ஸர்சைஸ் செய்யமுடியாத சூழல் இருந்தாலும் குறைந்தபட்சம் 'ட்ரெட் மில்' மட்டுமாவது செஞ்சுடுவேன். இல்லைன்னா அந்த நாள் முழுமையடையாத ஃபீல் இருக்கும்" என்கிறார் ஜி.வி. 

ஜி.வி.பிரகாஷ்குமார் உடற்பயிற்சி

``அரிசி சாதம் ஆகவே ஆகாது... நிறைய காய்கறிகள் சாப்பிடுவேன். உடற்பயிற்சிக்கு டைம்டேபிள் வச்சிருக்கேன். ஏழு நாளும், ஏழு பயிற்சிகள்... க்ளஸ்டர், பைசெப்ஸ், ட்ரைசெப்ஸ், அப்டெமன்... இதெல்லாம் தான் நம்ம ஸ்பீடுக்குக் காரணம்..." என்று சிரிக்கிறார் ஜி.வி. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க