`வெகு விரைவில் நூறாவது ஓட்டம்' - மலைக்கவைக்கும் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. | Saidapet mla ma subramaniyan reveals his fitness secrets

வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (19/09/2018)

கடைசி தொடர்பு:15:34 (19/09/2018)

`வெகு விரைவில் நூறாவது ஓட்டம்' - மலைக்கவைக்கும் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ.

``துவரை 87 முடிஞ்சிருக்கு, இன்னும் மூணு மாசத்துக்குள்ள 13 போட்டியில ஓடி 100-ஐத் தொட்டுடுவேன்`` என நம்பிக்கையோடு பேசுகிறார் சென்னை சைதாப்பேட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயருமான மா.சுப்பிரமணியன்.

மா.சுப்பிரமணியன் 

தி.மு.க-வின் சென்னை தெற்கு மாவட்டச் செயலாளரான மா.சுப்பிரமணியன், கடுமையான விபத்தொன்றில் சிக்கி இனி நடக்கவே முடியாது என மருத்துவர்களால் கைவிடப்பட்டவர். தன் சுய முயற்சியால் நடக்க ஆரம்பித்து, கொஞ்சம், கொஞ்சமாக ஓட ஆரம்பித்து இதுவரை 87 மாரத்தான் போட்டிகளில் ஓடி முடித்திருக்கிறார். 20 வருடங்களாகச் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும், மாரத்தான் போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு சாதனைகளைப் புரிந்துவருகிறார்.

மைசூர் போட்டி

`` கடைசியா மைசூர்ல ஓடினேன். இந்த வாரம் சிங்கப்பூர், அதற்கடுத்த வாரம் கோயம்புத்தூர், 90-வது போட்டி சென்னையில ஓட இருக்கேன். அதற்கடுத்து மூணு போட்டிகள். ஜப்பான், நியூஸிலாந்து போன்ற வெளிநாடுகள்ல ஓடலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். ஜனவரிக்குள்ள 100 போட்டிகள்ல ஓடி முடிச்சுடுவேன். `ஓடலாம் வாங்க’ன்னு (Come let us run) தமிழ்லயும் ஆங்கிலத்துலயும்  நான் எழுதிட்டு இருக்கும் புத்தகத்தையும் 100-வது போட்டி ஓடி முடிச்சதும் வெளியிடலாம்னு இருக்கேன்`` என்கிறார் மாரத்தான் நாயகன் மா.சுப்பிரமணியன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close