அல்சைமர் விழிப்புஉணர்வு தினம்! - பெசன்ட் நகர் பீச்சில் பிரமாண்ட வாக்கத்தான்! | Walkathon program for Alzheimer Patients in Chennai Anna nagar and Besant nagar Beach

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (21/09/2018)

கடைசி தொடர்பு:19:00 (21/09/2018)

அல்சைமர் விழிப்புஉணர்வு தினம்! - பெசன்ட் நகர் பீச்சில் பிரமாண்ட வாக்கத்தான்!

வேலைக்குச் செல்லும் பிள்ளைகளைக் கொண்ட 'அல்சைமர் நோயாளி' பெற்றோரை, காலை முதல் மாலை வரை அரவணைத்துக்கொள்கின்றன 'டே கேர்' சென்டர்கள்.

ன்று, உலக அல்சைமர் நோயாளிகளுக்கான தினம். அல்சைமர் என்பது, மறதி நோயில் ஒரு வகை. பெரும்பாலும், 60 வயதைத் தாண்டியவர்களே அல்சைமரால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, பெண்கள். அல்சைமர் ஏற்படுவதற்கான காரணங்கள், இதுவரை உறுதிசெய்யப்படவில்லை.

அல்சைமர் வாக்கத்தான்

கூட்டுக்குடும்பங்கள் சிதைந்துவரும் நிலையில், அல்சைமரால் பாதிக்கப்பட்ட வயது முதிர்ந்த பெரியவர்களின் நிலை ஒவ்வொரு நாளும் மோசமாகிக்கொண்டேபோகிறது. குறிப்பாக, வேலைக்குச் செல்லும் பிள்ளைகளைக் கொண்ட 'அல்சைமர் நோயாளி' பெற்றோரின் நிலை, இன்னும் மோசம். இப்படியான முதியவர்களை, காலையிலிருந்து மாலை வரை அரவணைத்துக்கொள்கின்றன 'டே கேர்' சென்டர்கள். தினமும் காலை ஒன்பது மணிக்கு கேர்-டேக்கர் உதவியுடன் வேன்மூலம் அல்சைமர் நோயாளிகளை அழைத்துவருவது, மதியம் மூன்று மணி வரை விளையாட்டு, கலரிங், எளிமையான தோட்ட வேலைகள் என ஏதாவது வேலையில் ஈடுபடுத்துவது, மூன்று மணிக்கு மேல் வேனில் கேர்-டேக்கர் உதவியோடு அனைவரையும் வீட்டில் கொண்டுபோய் சேர்ப்பது. இதுமாதிரியாக அட்டவணையோடு செயல்பட்டு வருகின்றன சென்டர்கள். பெரும்பாலான முதியோர் நல மருத்துவர்கள், இப்படியான டே-கேர் சென்டர்களை வரவேற்கின்றனர்!

வாக்கத்தான் நிகழ்ச்சி

அல்சைமர் தினத்தை முன்னிட்டு, இன்று காலை முதல் மதியம் வரை சென்னை அண்ணா நகரிலுள்ள 'டிக்னிட்டி ஃபவுண்டேஷன்' என்ற மறதி நோயாளிகளுக்கான டே-கேர் சென்டர் சார்பாக, வாக்கத்தான் நடைபெற்றுள்ளது. அண்ணா நகர் டவர் பார்க் மற்றும் பெசன்ட் நகர் பீச்சில், வயதானவர்கள் பலர் கலந்துகொண்டு, தலையில் மஞ்சள் நிற தொப்பி அணிந்தபடி வாக்கத்தானில் நடந்துள்ளனர்.

மறதி நோய்

நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் வாக்கத்தானைத் தொடர்ந்து, அப்பகுதியில் இருந்த பேருந்து மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், காவல் துறையைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் எனப் பலரிடமும் விழிப்புஉணர்வுப் பிரசாரங்களைச் செய்துள்ளனர். முதியவர்கள் மட்டுமின்றி தன்னார்வத்துடன் சில பொதுமக்களும் கலந்துகொண்டு, விழிப்புஉணர்வு ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close