வெளியிடப்பட்ட நேரம்: 14:35 (24/09/2018)

கடைசி தொடர்பு:14:35 (24/09/2018)

மனசையும் உடம்பையும் ஃபிட்டா வச்சுக்க குத்துவரிசை கத்துக்கிறேன்! - முனிஸ்காந்த் 

மிழ் சினிமாவில் `ஈசா’ படத்தின் மூலம் அறிமுகமாயிருந்தாலும் `முண்டாசுப்பட்டி’ படம்தான்  முனிஸ்காந்துக்கு வெளிச்சம் தந்தது.  `ஜிகர்தண்டா’, `இன்று நேற்று நாளை’, `மாப்பிளை சிங்கம்’, `மாநகரம்’, `மரகதநாணயம்’, `வேலைக்காரன்’ என அதன்பின் அவரின் வெற்றிப்பயணம் தொடர்கிறது.  தற்போது `சண்டக்கோழி 2’, `விஸ்வாசம்’ படத்தில் நடித்து வருகிறார். 

நடிகர் முனிஸ்காந்த்

முனிஸ்காந்த்  டயட் மற்றும் ஃபிட்னெஸ் விஷயத்தில் எப்படி?

``சினிமாவுல நடிக்கிறதுக்காக ஆரம்பத்துல நிறைய கம்பெனிகளைத் தேடிப்போனேன். குறிப்பிட்ட நேரத்துல சாப்பிட முடியாது. அதனால என்ன கிடைக்குதோ அதைச் சாப்பிடுவேன். வெஜ்ஜோ, நான்வெஜ்ஜோ விருப்பம்போல வயிறு நிறைய சாப்பிடுற பழக்கம் எனக்கு உண்டு. டயட்டுங்கிற விஷயமெல்லாம் எனக்கு ஒத்துவராது. ஏன்னா, நான் நல்லா சாப்பிடுற ஆள். என்னைப் பார்த்தாலே உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன். எல்லா வகையான உணவுகளையும் சாப்பிடப் பிடிக்கும். குறிப்பா, தலைக்கறியும், மட்டன் பிரியாணியும் என்னோட ஃபேவரைட். அவுட்டோர் ஷூட்டிங் போனா மட்டும் நான்வெஜ் கிடைக்காம கொஞ்சம் சிரமப்படுவேன். கிராமப்புறங்களில் ஷூட்டிங் வைச்சிருந்தாங்கன்னா... அந்த ஏரியாவுல இருக்கிற ஏதாவது ஒரு வீட்டுல காசு கொடுத்து, சமைக்கச் சொல்லி சாப்பிடுவேன். அப்படி கம்மங்கூழும் கருவாட்டுக் குழம்பும் சாப்பிட்டிருக்கேன். 

கல்யாணத்துக்கு முன்னாடியெல்லாம் விருப்பம்போல சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன். இப்போ, வீட்டம்மா வந்துட்டாங்க. விதவிதமா ருசியா சமைக்கிறாங்க. அதனால நாக்கை கண்ட்ரோல் பண்ண முடியல. அவங்க எது சமைச்சாலும் ஃபுல்லா கட்டுவேன். சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி மலேசியாவுல இரண்டு வருஷம் வேலை பார்த்தேன். அங்கே `நாசிலிமா’ ன்னு ஒரு உணவு உண்டு. பச்சரிசியை தேங்காய்ப்பால்ல வேகவச்சுத் தருவாங்க. சைடிஷ், சென்னாங்குண்ணி கருவாடு. 

உடம்பை ஃபிட்டா வைச்சுக்கணும்னு ஆசையிருக்கு. அதனால, கடந்த ரெண்டு மாசமா கவனம் செலுத்திக்கிட்டு வர்றேன். நம்முடைய கலாசாரத்துல `குத்துவரிசை’ங்கிற கலை கொஞ்சம் கொஞ்சமாக அழிஞ்சுக்கிட்டு வருது. இந்தக் கலையை முழுசா தெரிஞ்சுக்கிட்டவங்க ஒருசிலர்தான் இருக்காங்க. இதை கத்துக்கிட்டோம்னா உடம்பும் மனசும் உறுதியாயிடும். இந்தக் கலையை தெரிஞ்ச வீரமணி மாஸ்டர் இப்போ கோடம்பாக்கத்துல இருக்காங்க. அவருக்கிட்டதான் பயிற்சி எடுத்துக்கிட்டு வர்றேன். ஃபிட்னெஸுக்காக ஜிம்முக்கெல்லாம் போற பழக்கமில்ல” என்கிறார் முனிஸ்காந்த்.