இந்தியாவில் அதிகரித்துவரும் சர்க்கரை நோயாளிகள்! - எச்சரிக்கும் மருத்துவர்கள் | India is the capital for sugar patients in the world - doctors Warned

வெளியிடப்பட்ட நேரம்: 17:55 (24/09/2018)

கடைசி தொடர்பு:17:55 (24/09/2018)

இந்தியாவில் அதிகரித்துவரும் சர்க்கரை நோயாளிகள்! - எச்சரிக்கும் மருத்துவர்கள்

லகம் முழுவதும் பரவியிருக்கும் ஒரு நோயாக சர்க்கரை நோய் இருக்கிறது. அதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. குறிப்பிட்ட வயதுக்கு மேலானவர்களுக்குத்தான் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படும் என்கிற காலம் போய், சிறு வயதினரையும் தாக்கி வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் 2017-ம் ஆண்டு புள்ளிவிவரத்தின்படி, 8.8 சதவிகிதம் இளம் வயதினருக்கு இன்சுலின் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

சர்க்கரை நோய்

2000-ம் ஆண்டில் 17 கோடியே பத்து லட்சம் பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தது. இது 2040-ம் ஆண்டில் சுமார் 64 கோடி மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

சர்க்கரை நோய் பாதிப்பு சாதாரணமானது அல்ல. உச்சி முதல் பாதம் வரை, வாய் முதல் ஆசன வாய் வரை பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. 

வாய் : காளான் தொற்று – Candida  தொற்று நோய் மற்றும் பல் வியாதி.

உணவுக்குழாய்: முழுங்க கஷ்டம் மற்றும் நெஞ்சு எரிச்சல் (அதிக சர்க்கரை அளவுள்ள நபர்களுக்கு மற்றும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு கேன்சர் வரவும் வாய்ப்பிருக்கிறது)

குடல்: வாந்தி வருகின்ற உணர்வு, உணவு எளிதில் கீழே செல்ல இயலாத நிலை. இதன் காரணமாக ஜீரண சக்தி குறைந்து அதன் காரணமாக சத்துக்குறைபாடு ஏற்பட வாய்ப்ப்புள்ளது.

சிறுகுடல் : சிலருக்கு பேதி ஆக வாய்ப்பு. வியாதி காரணமாகவும், சர்க்கரை நோய்க்கு எடுத்துக்கொள்ளும் மாத்திரை காரணமாகவும் வரலாம்.

விழிப்பு உணர்வு முகாம்

பெருங்குடல்: புற்று நோய் வருவதற்கு சர்க்கரை நோய் துணை புரியும்.

கல்லீரல் தாக்கம்: வெகு விரைவில் கல்லீரல் தாக்கம் ஏற்படுத்தும் வியாதிகளில் சர்க்கரை நோய் முதன்மையானது. கல்லீரல் புற்று நோய் ஏற்படும் ஆபத்து உள்ளது.

குடல் புற்று நோய் மற்றும் சர்க்கரை வியாதி: டைப்  2 சர்க்கரை வியாதி காரணமாக கல்லீரல், கணையம், உணவுக் குழாய் மற்றும் பெருங்குடல் புற்று நோய் வரும் ஆபத்து.

இப்படி எண்ணற்ற உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது என்கிறார்கள் மருத்துவர்கள். இதுகுறித்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று விழிப்பு உணர்வு முகாம் நடத்தப்பட்டது. ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close