வெளியிடப்பட்ட நேரம்: 12:24 (25/09/2018)

கடைசி தொடர்பு:20:12 (25/09/2018)

`ஆயுஷ்மான்' காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்ததால் தமிழகத்துக்கு என்ன பயன்? 

மத்திய அரசின் `ஆயுஷ்மான்' காப்பீட்டுத் திட்டத்தில் யாரெல்லாம் பயன் பெறலாம்?

`ஆயுஷ்மான்' காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்ததால் தமிழகத்துக்கு என்ன பயன்? 

த்திய அரசின், `ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டம்' இந்தியாவில் அதிகாரபூர்வமாகத் தொடங்குகிறது. தமிழக அரசும் இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறது. இந்தியா முழுவதுமுள்ள 10.74 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவச் செலவை இந்தப் புதிய காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பெறமுடியும்.  

மோடி

`ஆயுஷ்மான் பாரத்' திட்டம் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். `உலகளவில் மாபெரும் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டமாக இது இருக்கும்' என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்

`முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்', ஏற்கெனவே தமிழ்நாட்டில் அமலில் இருக்கிறது. அதோடு மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டமும் சேர்த்து செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஒப்பந்தம்

புதிதாக அமல்படுத்தப்பட உள்ள, `ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கின்றன? அத்திட்டத்தை இணைத்துச் செயல்படுத்துவதால் தமிழகத்துக்கு என்னென்ன பலன்கள் கூடுதலாகக் கிடைக்கப் போகிறது? 

தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரியிடம் கேட்டோம்.

``தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்தான், மத்திய அரசின்  காப்பீட்டுத்  திட்டத்தின் முன்னோடி. ஏற்கெனவே, தமிழ்நாட்டில் அமலில் இருக்கும் ரொக்கம் செலுத்தாமை, குடும்பத்தின் அளவு, வயதுக்கு விலக்கு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அப்படியே  `ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. `நம் மாநில திட்டத்தை அடிப்படையாக வைத்துத்தான் இந்தக் காப்பீட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டது' என ஒப்பந்தம் கையெழுத்தான நாளில் தேசிய சுகாதார நிறுவன முதன்மைச் செயல் அலுவலர் டாக்டர் இந்து பூஷன் குறிப்பிட்டிருந்தார். எனவே, இந்தத் திட்டம் தமிழக மக்களுக்குப் புதிய திட்டமல்ல. ஆனால், மத்திய அரசின் காப்பீட்டுடன் இணைந்ததால், கூடுதல் பலன்கள் கிடைக்கப்போகின்றன. 

தமிழக காப்பீட்டுத் திட்டத்தில், ஒரு குடும்பம்  ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் முதல் ஒன்றரை லட்சம் வரை,  நான்காண்டுகளுக்கு அதிகபட்சம் ரூ.4 லட்சம் வரை சிகிச்சை பெறலாம். ஆனால், மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு குடும்பம் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவப் பலன்களைப் பெறமுடியும்.  

ஆயுஷ்மான் பாரத்

மத்திய காப்பீட்டுத் திட்டத்தின்படி, தமிழகத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ள 77 லட்சம் ஏழைக் குடும்பங்களோடு ஏற்கெனவே மாநில மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்துள்ள 1 கோடியே 57 லட்சம் குடும்பங்களையும் இணைத்து புதிய பயனாளர் பட்டியல் உருவாக்கப்படுகிறது. தற்போது மத்திய அரசு கொடுத்திருக்கும் பயனாளிகள் பட்டியலில் இருப்பவர்கள் அனைவரும் ஏற்கெனவே மாநில காப்பீட்டுத் திட்டத்தின் பயனாளிகளாகவே இருக்கலாம் என்பதால்,  அதற்கான இறுதிப் பட்டியல் தயார் செய்யும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது. பணிகள் முடிந்தபிறகு பயனாளிகளின் முழுவிவரம் வெளியிடப்படும். அனைத்துப் பயனாளிகளுக்கும் காப்பீட்டு அட்டை வழங்கப்படும்.  

இத்திட்டத்தில், மத்திய அரசு தேர்ந்தெடுத்த 77 லட்சம் குடும்பங்களுக்கு மட்டும் 60 சதவிகிதத்தை மத்திய அரசு வழங்கும். மீதமுள்ள 40 சதவிகித நிதியுடன் எஞ்சிய பயனாளிகளுக்கான 100 சதவிகித பிரீமியத்தை மாநில அரசே செலுத்தும். பயனாளிகள் எந்தப் பணமும் செலுத்தத் தேவையில்லை.

இதுவரை மாநில காப்பீட்டுத் திட்டத்தில் 1027 மருத்துவப் பலன்களை பெறமுடிந்தது. பரிசோதனைகள், மருந்துகள், பராமரிப்பு சிகிச்சைகள், அறுவைசிகிச்சை, உயர் அறுவைசிகிச்சை ஆகியவையும் இதில் அடங்கும். தற்போது மத்திய அரசின் காப்பீட்டுடன் இணைத்துச் செயல்படுத்துவதால், மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டத்திலிருந்து மாநில காப்பீட்டுத்  திட்டத்தில் இல்லாத 423 சிகிச்சைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒட்டுமொத்தமாகப் பயனாளியால் 1500 மருத்துவப் பலன்களைப் பெறமுடியும். 

காப்பீடு

இது தவிர ஏற்கெனவே மாநில காப்பீட்டுத் திட்டத்தில் அமலில் இருக்கும்  உயர்நிலை சிகிச்சைகளான காது நுண் எலும்புக் கருவி பொருத்தும் சிகிச்சை, செவிப்புல மூளைத் தண்டு உள் வைப்பு அறுவை சிகிச்சை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு மஜ்ஜை மற்றும் ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை, நுரையீரல் மற்றும் இதய மாற்று அறுவை சிகிச்சை ஆகியவற்றுக்கு ரூ.25 லட்சம் வரையிலும் தமிழ்நாடு அரசின் மைய நிதியிலிருந்து வழங்கப்பட்டு வருவது தொடர்ந்து வழங்கப்படும்.  

பயனாளிகள், நாடு முழுவதுமுள்ள அங்கீகரிக்கப்பட்ட எந்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற இயலும். அங்கு அரசு  நிர்ணயித்தத் தொகையின் கீழ் சிகிச்சைகள் வழங்கப்படும். குடும்பத்தின் அளவு, வயது என்ற எந்த வரம்பும் இந்தத் திட்டத்தில் ஜீவானந்தம்கிடையாது. மருத்துவ ஆலோசனை கட்டணம், மருந்துகள், ரத்தப் பரிசோதனை, நோயாளிகளுக்கான உணவு, பயணச் செலவு, சிகிச்சை முடிந்தபின் ஏற்படும் செலவு உள்ளிட்டவையும் அடங்கும்" என்கிறார் உமா மகேஸ்வரி.

``இது வரவேற்கக் கூடிய திட்டமாகும். சமூகப்  பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு பலன் அளிக்கக் கூடிய திட்டம். மாநில அரசுக்கு மத்திய அரசிடமிருந்து 77 லட்சம் குடும்பங்களுக்கு மட்டும் 60 சதவிகித நிதி புதிதாகக் கிடைக்கப்போகிறது. காப்பீட்டுத் திட்டத்தில் ஒவ்வொரு சிகிச்சைக்கும் உரிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், தனியார் மருத்துவமனைகள் தன்னிச்சையாகக் கட்டணம் வசூலிக்கமுடியாது என்பது முக்கியமான அம்சம். அதோடு பணப் பரிவர்த்தனை இல்லாததால் முறைகேடுகள் குறையும். இருந்தாலும், ஏற்கெனவே முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் தனியார் மருத்துவமனைகளை இணைப்பதற்கு ஆண்டுக்கு இவ்வளவு என ஆளுங்கட்சியினர் கமிஷன் வாங்குவதாகப் புகார்கள் உள்ளன. இதுபோன்ற பிரச்னைகளை களைய வேண்டும். 

ஏற்கெனவே காப்பீட்டில் நோய்க்கான பரிசோதனை, சிகிச்சை, அறுவைசிகிச்சை உள்ளடக்கிய மருத்துவப்பலன்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் தமிழகத்தில் குடிநோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் அடித்தட்டு மக்கள்தாம் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, காப்பீட்டுத் திட்டத்தில் குடிநோய்களுக்கு மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெறும் வகையில் இணைத்தால் இது முழுமையான பலனளிக்கும்." என்கிறார் மருத்துவச் செயற்பாட்டாளரும் மருத்துவருமான ஜீவானந்தம்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்