வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (25/09/2018)

கடைசி தொடர்பு:17:15 (25/09/2018)

இந்தியாவின் முதல் திருநங்கை சப்-இன்ஸ்பெக்டர் பிரித்திகா யாசினியின் 'ஃபிட்னெஸ்' சீக்ரெட்ஸ்

``ன்னோட ஃபேவரிட் நான் வெஜ் மீன்தான். வாரத்துல ஒருநாளாவது மீன் சாப்ட்ருவேன். சுவைக்காக மட்டுமல்ல, நமக்குத் தேவையான ஏராளமான சத்துகள் மீன்'ல இருக்கு. கண்ணுக்கும் ரொம்ப நல்லது’’ என்கிறார் திருநங்கை எஸ்.ஐ-யான பிரித்திகா யாசினி. 

பிரித்திகா யாசினி.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரித்திகா யாஷினி, இந்தியாவிலேயே முதல்முறையாக சப்-இன்ஸ்பெக்டராகத் தேர்வுசெய்யப்பட்ட திருநங்கை ஆவார். இன்று  தனது 28 வது பிறந்தநாளைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் அவரிடம், அவரின் ஃபிட்னெஸ் ரகசியங்கள் குறித்துக் கேட்டோம். 

`` இரவு எத்தனை மணிக்குத் தூங்கச் சென்றாலும் அதிகாலை 5 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவேன். எழுந்ததும் ஓர் அரைமணிநேரம் ஓட்டப்பயிற்சி, அடுத்ததாக உடற்பயிற்சிகளைச் செய்வேன். உடற்பயிற்சிகளைப் பொருத்தவரை ட்ரெயினிங்கில் சொல்லிக் கொடுத்த உடல் வலுவுக்கான அடிப்படை பயிற்சிகளைத்தான் செய்வேன். முடியாத நாள்களில் நடைப்பயிற்சியாவது செய்துவிடுவேன்.
காலை உணவைப் பொறுத்தவரை பழங்கள் மட்டும்தான். ஆப்பிள், மாதுளை, வாழைப்பழம் போன்ற பழங்களுடன் ஒரு கப் பால் சாப்பிடுவேன். மதிய உணவுக்கிடையில் இளநீர், ஜூஸ் போன்ற கூல்-டிரிங்ஸ் ஏதாவது கண்டிப்பாகக் குடிப்பேன். டீ, காபி போன்ற சூடான பானங்கள் எப்போதும் குடிக்க மாட்டேன். 

மதிய உணவாகச் சாதம், காய்கறிகள் சாப்பிடுவேன். பெரும்பாலும் சைவ உணவுகள்தான் விரும்பிச் சாப்பிடுவேன். ஆனாலும், வாரத்தில் ஒருநாள் மீன் கண்டிப்பாக இருக்க வேண்டும். மாலை வேளையில் வேகவைத்த பயறு வகைகளைச் சாப்பிடுவேன். பயறு வகைகளில் ஏராளமான சத்துகள் இருக்கின்றன. அதனால் அதைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன். 

பிரித்திகா

இரவில் சப்பாத்தியைத் தவிர வேறு எந்த உணவுகளையும் சாப்பிடுவதில்லை’’ எனும் பிரித்திகா யாசினியிடம் மிகவும் ஸ்ட்ரெஸ்ஸான நேரங்களை எப்படிச் சமாளிக்கிறீர்கள், என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு,

``கண்ணை மூடி ஐந்து நிமிடம் அமைதியாக உட்கார்ந்தாலே போதும் ஸ்ட்ரெஸ் எல்லாம் பறந்துபோய்டும்’’ எனச் சொல்லிச் சிரிக்கிறார் பிரித்திகா.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க