பக்கவாதம் வந்தவர்களை நடக்கவைக்கும் இம்ப்ளேன்ட் கருவி! #Electricalimplants | Spinal Electrical Implant makes Paralysis patients to walk

வெளியிடப்பட்ட நேரம்: 18:57 (25/09/2018)

கடைசி தொடர்பு:18:57 (25/09/2018)

பக்கவாதம் வந்தவர்களை நடக்கவைக்கும் இம்ப்ளேன்ட் கருவி! #Electricalimplants

எலெக்ட்ரிக்கல் இம்ப்ளேன்ட் (Electrical Implant) எனப்படும் இந்த சிகிச்சை முறை மூலம், ஸ்பெஷல் வாக்கர் (Walker) ஒன்றின் உதவியோடு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் நடக்கின்றனர். 

பக்கவாதம் வந்தவர்களை நடக்கவைக்கும் சோதனை முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு. எலெக்ட்ரிக்கல் இம்ப்ளேன்ட் (Electrical Implant) எனப்படும் இந்த சிகிச்சை முறை மூலம், ஸ்பெஷல் வாக்கர் (Walker) ஒன்றின் உதவியோடு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு நடக்கமுடியாமல் முடங்கிய நோயாளிகள் நடக்கின்றனர். கடந்த ஐந்து வருடங்களாகப் பக்கவாதத்தில் இருந்த மூன்று பேருக்கு மட்டும் செய்யப்பட்ட சோதனை முயற்சியில், மூவருமே மீண்டும் நடக்கத் தொடங்கியுள்ளனர்.

எலெக்ட்ரிக்கல் இம்ப்ளேண்ட்

விபத்து காரணமாக செயலிழந்த முதுகுத்தண்டுவடத்தின் மீது, அறுவைசிகிச்சை மூலம் ஸ்டிமுலேட்டர் (Stimulator) பொறுத்தப்படும். வயர்லெஸ் ஸ்டிமுலேட்டரான இது, மின்சாரம் (electrical current) மூலம் இயக்கப்படும். கருவியில் உள்ள எலெக்ட்ரிக்கல் இம்ப்ளேன்ட், தண்டுவடத்தை மீண்டும் செயல்படத் தூண்டும். அளவில் மிகவும் சிறியதாக இருக்கும் இது, விபத்தின்போது மூளையிலிருந்து தொடர்பற்றுப்போன நரம்புகளை எல்லாம் மீண்டும் செயல்படத் தூண்டிவிடும்.

பக்கவாதம் வந்தவர்களுக்கு எலெக்ட்ரிக் இம்ப்ளேண்ட்

PhotoCredits: University of Louisville

சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் அனைவரும், கடந்த ஐந்து ஆண்டுகளாக நடக்காமலேயே இருந்ததால், ஸ்டிமுலேட்டர் பொறுத்தப்பட்டு சில வாரங்கள் கழித்தே நடக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அந்த சில வாரங்களிலும் பிசியோதெரபி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்துள்ளது. மேலும், இப்படியாக நரம்புகளைத் தூண்டிவிட்டு அவற்றை செயலாற்ற தூண்டினாலும், அவை மூளையோடு தொடர்பில்லாமல், பாதிக்கப்பட்ட நிலையிலேயே இருந்துள்ளது. அதன் காரணமாக மூளையிலிருந்து கிடைக்கும் உணர்ச்சிகள் எதுவும் கிடைக்காமல் இருந்துள்ளது. சம்பந்தப்பட்ட நோயாளியால் 'தான் நடக்கிறோம்' என்ற உணர்வையே பெறமுடியவில்லை. சுயசிந்தனை மூலமாக, தோராயமாகக் கால்களை முன்னோக்கி வைத்துள்ளனர்.

பக்கவாதம் நோயாளி நடைப்பயிற்சி மேற்கொண்டபோது...

PhotoCredits: University of Louisville

எனவே, கொடுக்கப்பட்டுள்ள ஸ்பெஷல் வாக்கரில், முழங்கால் மூட்டு உயரத்துக்கு கண்ணாடி ஒன்றை பொருத்தியுள்ளனர். கண்ணாடிப் பார்த்தபடியே, நோயாளி தன் கால்களை முன்னெடுத்து வைப்பார் என்ற அடிப்படையில் இது செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை இந்த இம்ப்ளேன்ட் கருவி ஆராய்ச்சி நிலையிலேயே உள்ளது. அனைவருக்குமானதாக இதை மேம்படுத்திய பிறகு, மருத்துவ சந்தைக்கு வரும் என இதைக் கண்டுபிடித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close