வெளியிடப்பட்ட நேரம்: 15:55 (27/09/2018)

கடைசி தொடர்பு:15:55 (27/09/2018)

`` தேவையான மருந்துகளை இன்றே வாங்கிவைத்துக்கொள்ளுங்கள்`` - நாளை ஸ்டிரைக்

``க்கள், வழக்கமாகப் பயன்படுத்தும் தங்களுக்குத் தேவையான மருந்துகளை இன்றே வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். `` என தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

ஸ்டிரைக்

ஆன்-லைன் மருந்து வணிகத்துக்கு அனுமதியளிக்கவுள்ள மத்திய அரசின் முடிவை எதிர்த்து தமிழகம் மற்றும் அகில இந்திய அளவில் நாளை ஒருநாள் முழு கடையடைப்பு நடத்த அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள 30,000 மருந்துக்கடைகளுடன், இந்தியா முழுவதிலுமுள்ள 8 லட்சம் மருந்துக்கடைகளும் நாளை அடைக்கப்பட்டிருக்கும். இந்த ஸ்டிரைக் இன்று நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வருகிறது. 

இதுகுறித்து தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் செல்வனிடம் பேசினோம்,

`` ஆன் லைன் மருந்து விற்பனையை அனுமதிப்பதற்கான ஒரு வரைவறிக்கையை கடந்த 28-ம் தேதி மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. ஏற்கெனவே இதுபோன்ற முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டபோது நாங்கள் நடத்திய போராட்டங்களின் காரணமாக அதைக் கைவிட்டார்கள். தற்போது பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் அழுத்தத்தின் காரணமாக மீண்டும் அந்த முயற்சியில் ஈடுபடுகிறார்கள். இதனால் நாடு முழுவதுமுள்ள லட்சக்கணக்கான சிறு-குறு வியாபாரிகள் முழுமையாகப் பாதிக்கப்படுவோம். அதனால்தான் இந்த ஒருநாள் ஸ்டிரைக் அறிவித்திருக்கிறோம். தமிழ்நாடு முழுவதுமுள்ள 35,000 மருந்துக்கடைகளில், மருத்துவமனைகளுடன் கூடிய 5,000 மருந்தகங்களைத் தவிர மற்ற 30,000 கடைகளும் நாளை அடைக்கப்பட்டிருக்கும்.   

அறிக்கை

ஆன் லைன் மருந்து விற்பனை  பொதுமக்களின் ஆரோக்கியத்துக்கு ஏற்றத்தக்கது அல்ல. மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மக்கள் நேரடியாக மருந்துகள் வாங்குவார்கள். இதனால் தேவையில்லாத பிரச்னைகள்தான் உருவாகும். ஆன் லைன் மருந்து வர்த்தகம் அதிகரித்தால் கிராமப்புற மற்றும் சிறிய நகரங்களில் உயிர் காக்கும் மருந்துகள் கிடைப்பது அரிதாகிவிடும். மக்கள் நலனுக்காகவே இந்த ஸ்டிரைக் இருந்தாலும் நாளை ஒருநாள் மக்களுக்கு ஏற்படும் இடையூறுகளுக்காக வருந்துகிறோம் `` என்கிறார் செல்வன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க