தோனி மீது வழக்கு - மருந்து வணிகர் சங்கம் முடிவு! | TN Pharmaceutical traders to file case against cricketer Dhoni

வெளியிடப்பட்ட நேரம்: 16:37 (27/09/2018)

கடைசி தொடர்பு:16:37 (27/09/2018)

தோனி மீது வழக்கு - மருந்து வணிகர் சங்கம் முடிவு!

கிரிக்கெட் வீரர் தோனியின் மீது வழக்கு போடுவதற்கு தயாராகி வருகிறது மருந்து விற்பனையாளர்கள் சங்கம். ஆன்லைனில் ஆடைகள், செல்போன், சாப்பாடு ஆர்டர் செய்து வாங்குவதைப் போன்று, இந்தியாவில் மாத்திரை மருந்துகளுக்கும் ஆன்லைன் விற்பனையைக் கொண்டு வர சில பன்னாட்டு நிறுவனங்கள் முயன்று வருகின்றன. மத்திய அரசும் இரண்டு முறை அதற்கான முயற்சிகளில் இறங்கியது. நாடு முழுவதும் மருந்து வணிகர்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக முயற்சி கைவிடப்பட்டது. தற்போது மீண்டும் ஆன்லைன் விற்பனையை அமல்படுத்துவதற்காக வரைவு அறிக்கையை வெளியிட்டு பொதுமக்கள், மருந்து வணிகர்கள் போன்றவர்களிடம் கருத்து கேட்டுள்ளது. 

தோனி

கொள்கை ரீதியாக மத்திய அரசு அனுமதி அளிக்காத போதிலும், ஒரு சில நிறுவனங்கள் ஆன்லைன் விற்பனையைத் தொடங்கிவிட்டன. வாங்கும் மருந்துகளுக்கு 20 சதவிகிதம் தள்ளுபடி என்பது போன்ற கவர்ச்சிகரமான  வாசகங்களின் மூலம், மக்களை ஈர்த்து வருகின்றன. இதை மேலும் பிரபலப்படுத்த குறிப்பிட்ட ஒரு நிறுவனம், கிரிக்கெட் வீரர் தோனியை வைத்து விளம்பரப்படம் ஒன்றை தயாரித்துள்ளது. இந்தி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் அந்த விளம்பரம் டிவி-க்களில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இதற்கு மருந்து வணிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுதொடர்பாக நம்மிடம் பேசிய தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க நிர்வாகிகள், ``தோனி நடித்துள்ள விளம்பரம் குறித்து அரசுக்குப் புகார் அனுப்பியிருக்கிறோம். தோனி மீது வழக்கு தொடர ஆலோசித்து வருகிறோம். தோனி போன்ற பிரபலங்கள் விளம்பத்தில் நடிப்பதற்கு முன்னால், 'சட்டபூர்வமாக அனுமதி பெறப்பட்ட நிறுவனமா?', 'இதுபோன்ற விஷயங்கள் பொதுமக்களுக்கு சாதகமானதா' என்றெல்லாம் தெரிந்துகொண்டு நடிக்க வேண்டும்" என்றார்கள்.


[X] Close

[X] Close