வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (28/09/2018)

கடைசி தொடர்பு:19:15 (28/09/2018)

கால்பந்து, நாட்டுக் கோழி முட்டை, காய்கறிகள் - 'ராக் ஸ்டார்' ரன்பீரின் ஃபிட்னெஸ் சீக்ரெட்!

மாஷா, பர்ஃபி, ஏ தில் கே முஷ்கில்... இப்போது சஞ்சு, அடுத்து பிரமாஸ்த்ரா... ரன்பீரின் சிறந்த படங்களுக்கான லிஸ்ட் இன்னும் நீளமானது. எல்லாப் படங்களுமே ஒவ்வொரு ரகத்தில், ஒவ்வொரு பரிமாணத்தில் இருக்கும். தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்துக்காக, தன்னை முழுமையாக மாற்றிக்கொள்ளும் இந்த சாக்லேட் பாய், இன்று 36வது வயதுக்குள் அடியெடுத்து வைக்கிறார். இப்போதும் அதே துறுதுறு ஸ்மைலும், சிக்ஸ்-பேக் உடலமைப்பும் என ராக்ஸ்டாராக இருக்கிறார் மனிதர். அவரின் ஃபிட்னெஸ் ரகசியம் என்ன என்பதை, பயிற்சியாளர் குனால் சமீபத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார். 

ரன்பீர்

ரன்பீரின் அந்த 'ஃபிட்னெஸ் ரகசியம்' இங்கே...

* உணவை, சிறிது சிறிதாக பிரித்துச் சாப்பிட்டால் உடலின் ஆற்றல் அதிகரிக்கும், மெட்டபாலிஸமும் வலுப்பெறும். அதனால், ஒரு நாளில் ஐந்து முறை சாப்பிடுவார் ரன்பீர். நாட்டுக்கோழி முட்டைகள், இறைச்சி, நட்ஸ் தான் ரன்பீரின் உணவுப்பட்டியலில் இருக்கும்.

* பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளை முற்றிலும் தவிர்த்துவிடுவார். காய்கறிகள், பழங்களுக்கு முன்னுரிமை அளிப்பார். குறிப்பாக, உடற்பயிற்சி செய்து முடித்தவுடன் நிறைய பழத்துண்டுகள் சாப்பிடுவார். 

* உணவைப் பொறுத்தவரை, அதில் சேர்க்கப்படும் பொருள்கள் அனைத்தும் ஹெல்த்தியானதாக இருக்க வேண்டும் என்பது ரன்பீரின் எண்ணம். மிகக்குறிப்பாக எண்ணெய் தேர்வில் அதிக கவனத்தோடு இருப்பார். 'ரீஃபைண்ட் ஆயில்' தான் உடல் எடை அதிகரிப்பு, கொலஸ்ட்ரால் பிரச்னைகள், இதயப் பிரச்னைகள் போன்றவற்றுக்கு அடிப்படை என்பதால், அவை சேர்க்கப்பட்ட உணவுகளை அப்படியே ஒதுக்கிவிடுவார் மனிதர்.

ரன்பீர்

* உடலில் நீர்ச்சத்து அதிகம் இருக்க வேண்டும் என்பதற்காக, நிறைய தண்ணீர் குடிப்பார் ரன்பீர். 

* 'ஸ்போர்ட்ஸ்' காதலர் ரன்பீர். கால்பந்து மிகவும் பிடித்த விளையாட்டு. ஜிம் செல்வதை விடவும், ஃபுட்பால் விளையாடுவதில் தான் அதிகம் ஆர்வம் காட்டுவார்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க