பாட்டி, தாத்தாக்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் நடந்த முதியோர் தினவிழா! | TN government organises function to embark international day of older persons

வெளியிடப்பட்ட நேரம்: 18:54 (01/10/2018)

கடைசி தொடர்பு:18:54 (01/10/2018)

பாட்டி, தாத்தாக்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் நடந்த முதியோர் தினவிழா!

60 வயதைக்  கடந்த முதியவர்களின் நலனைப் பாதுகாக்கவும் அவர்களின் உரிமைகளை மதிக்கவும் ஐக்கிய நாடுகள் சபை, ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 1-ம் தேதியை சர்வதேச முதியோர் தினமாக அறிவித்தது. அதன்படி, உலகம் முழுவதும் இந்தத் தினம் அனுசரிக்கப்பட்டு ஏராளமான விழாக்கள், விழிப்பு உணர்வு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. 

முதியோர் தின விழா

அந்த வகையில், தமிழ்நாடு அரசு சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் சார்பில் இந்த விழா சென்னை தி.நகர் சர் பிட்டி. தியாகராயர் அரங்கில் இன்று அனுசரிக்கப்பட்டது. அமைச்சர் சரோஜா, சமூக நலத்துறை ஆணையர் அமுதவள்ளி, சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், முதியோர் நல மருத்துவர் நடராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். மருத்துவர் நடராஜன்

முதியவர்களுக்கான நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏராளமான முதியவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் கலந்துகொண்டு, முதியோர் நல மருத்துவர் நடராஜன் பேசியதாவது,

``இரண்டு வருடங்களுக்கு முன்பாக நடைபெற்ற முதியோர் நல விழாவில் அரசு நடத்தும் முதியோர் இல்லங்களில் இருக்கின்ற முதியவர்களுக்கு இலவசமாக நிம்மோனியா தடுப்பூசி போட வேண்டும் என்ற கோரிக்கை வைத்தேன். அதற்கு அரசு இப்போது ஒப்புதல் அளித்து 1.6 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறது. இதன் மூலம் 4,000 முதியவர்கள் பயன்பெறப்போகிறார்கள். முதல்வரின் தலைமையில் தொடக்கவிழா நடக்கவிருக்கிறது. இது முதியோருக்கு ஏற்படும் பாதிப்புகளை வருமுன் காப்பதற்கான ஓர் ஏற்பாடு. அரசின் இந்த முயற்சியைத் தொடர்ந்து தனியார் முதியோர் இல்லங்களிலும் இதைப் பின்பற்றுவார்கள். தமிழ்நாட்டைப் பின் தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் முன்னெடுப்பார்கள். 

முதியோர்

`முதியவர்களுக்குச் சேவை புரியும் பணியாளர்கள் திட்டம்' என்ற ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும். பத்தாம், பன்னிரண்டாம் வகுப்பு படித்த பெண்களுக்கு மூன்று மாதம் பயிற்சி அளித்து முதியோர்களைப் பராமரிப்பதற்கான ஏற்பாடுகளை அரசே செய்யலாம். இதனால் வசதியில்லாத முதியவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். இளம்பெண்களுக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கலாம். இதுகுறித்து அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். அமைச்சர் விரைவாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். இதுபோன்ற திட்டங்கள் வந்தால் முதியவர்களைக் காப்பாற்றுவதில் தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக விளங்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை’’ என்றார் அவர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close