வெளியிடப்பட்ட நேரம்: 18:17 (01/10/2018)

கடைசி தொடர்பு:18:17 (01/10/2018)

`இம்யுனோதெரபி’ - நோபல் பரிசு பெற்றுத்தந்த புற்றுநோய் சிகிச்சை முறை!

இந்த ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு, புற்றுநோய் சிகிச்சைக்கான புதிய கண்டுபிடிப்புக்குக் கிடைத்திருக்கிறது. 

நோபல் பரிசு

அமெரிக்காவின் ஜேம்ஸ் பி.ஆலீசன், ஜப்பானைச் சேர்ந்த தசுகோ ஹோன்ஜோ ஆகியோருக்கு மருத்துவ நோபல் பரிசு பகிர்ந்து வழங்கப்பட இருக்கிறது. நோய் எதிர்ப்பு மருத்துவ நிபுணர்களான இவர்கள், புற்றுநோயைக் குணப்படுத்தும் மருத்துவக் கண்டுபிடிப்புக்காக இந்த உயரிய விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

புற்றுநோய்க்கு, நவீன மருத்துவத்தில் 'ஹீமோதெரபி' அளிக்கப்பட்டுவருகிறது. இவை, உடலில் உள்ள புற்றுசெல்களை அழித்து, நோயின் பாதிப்பிலிருந்து காப்பாற்றும். ஆனால், புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள இந்த சிகிச்சையில், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டி, புற்றுசெல்களை அழிக்கச்செய்கிறது. இதை 'இம்யுனோதெரபி' என்பார்கள். ஏற்கெனவே உள்ள புற்றுநோய் சிகிச்சையைவிட இதன் வெற்றி விகிதம் (Success Rate) அதிகம் என்பதால், இந்த சிகிச்சைக்கு இந்த உயரிய விருது கிடைத்துள்ளது. 

"ஒவ்வோர் ஆண்டும் புற்றுநோய்க்கு 10 லட்சம் பேர் பலியாகிறார்கள். இந்தப் புதிய தெரபி, மனித குலத்துக்குக் கிடைத்த புதிய அத்தியாயம்" என்று நோபல் கமிட்டி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க