வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (03/10/2018)

கடைசி தொடர்பு:13:50 (03/10/2018)

``வசதியானவங்க வாங்கிடுவாங்க; ஏழைகள் ரேஷன்லதானே வாங்கணும்''- நடிகை கெளதமி

சில தினங்களுக்கு முன்பு, 'புற்றுநோய் வருவதற்குக் காரணமான சர்க்கரையையும் உப்பையும் ரேஷன் கடைகளில் விற்கக் கூடாது' என நடிகையும் சமூக ஆர்வலருமான கெளதமி, தமிழக அரசிடம் வலியுறுத்துகிற செய்திகள் வெளியாகி இருந்தன. புற்றுநோய் விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதற்காகப் பல ஊர்களுக்கும் பயணம் செய்துகொண்டிருக்கும் அவரிடம், இன்று காலைதான் இது தொடர்பாக பேசமுடிந்தது.

நடிகை கெளதமி

``சர்க்கரையையும் உப்பையும் ரேஷன் கடைகளில் விற்கக்கூடாதுன்னு நான் சொல்லலை. இனிப்பும் உப்பும் சாப்பிடாம யாரால வாழ முடியும். இது ரெண்டும் இல்லாம என்னாலேயே வாழவே முடியாது. சர்க்கரைக்குப் பதிலா நாட்டுச்சர்க்கரை மற்றும் கருப்பட்டியையும், தூள் உப்புக்குப் பதிலா கடல் கல் உப்பையும் தரச்சொல்லி அரசுக்கு வேண்டுகோள் வெச்சிருந்தேன். அதைத்தான், 'விற்கவே கூடாது'னு சொன்னதா செய்தியா வந்துடுச்சு. நீங்க அதைச் சரியாக பிரசன்ட் பண்ணீட்டிங்கன்னா, ரொம்ப சந்தோஷப்படுவேன். ஆரோக்கியம் ஒவ்வொரு மனிதரின் பிறப்புரிமை. அது வசதியானவங்களுக்கு சுலபமா கிடைச்சுடுது. ஒரு கிலோ கருப்பட்டி எவ்வளவு விலைன்னாலும் அவங்க வாங்கிடுவாங்க. ஆனால், பொருளாதாரத்தில் பின்தங்கினவங்க ரேஷன் கடையின் சர்க்கரையைத்தானே நம்பி இருக்காங்க. அங்கேயே குறைஞ்ச விலைக்கு கருப்பட்டித் தரலாமே. கருப்பட்டிதானே நம் பாரம்பர்ய இனிப்பு. உப்பிலும், கடல் உப்புதான் தைராய்டு வராமல் நம்மைப் பாதுகாக்கும். மறுபடியும் சொல்றேன், ஆரோக்கியமாக இருக்கிறது மக்களின் பிறப்புரிமை. குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டியது அரசாங்கந்தின் கடமை. கேன்சரிலிருந்து மீண்டுவந்த எனக்கு நம் மண்ணின் பாரம்பர்ய உணவுகளின் மதிப்பு நல்லாவே தெரியும்'' என அழுத்தமான குரலில் சொல்கிறார் கெளதமி.