வெளியிடப்பட்ட நேரம்: 20:29 (03/10/2018)

கடைசி தொடர்பு:20:29 (03/10/2018)

`அங்கீகாரமற்ற மருத்துவம் படித்துவிட்டு சிகிச்சை அளித்தால் நடவடிக்கை' - எச்சரிக்கும் மருத்துவ கவுன்சில்

"மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரமற்ற மருத்துவ பட்டமேற்படிப்பு படித்துவிட்டு, அந்த துறையைச் சேர்ந்த நிபுணர் என்று குறிப்பிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்"  என மருத்துவ  கவுன்சில் மாநிலத் தலைவர் செந்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

போலி மருத்துவ படிப்பு

 சமீபத்தில், தமிழ்நாட்டில் மருத்துவ கவுன்சிலின் அங்கீகரம் பெறாத படிப்புகளைப் படித்துவிட்டு, சிகிச்சை மேற்கொள்வதாகப் புகார் வந்தது. செந்தில் அதோடு, அந்த சிலர் போலி சான்றிதழ், அங்கீகரம் பெறாத படிப்புகளைப் படித்துவிட்டு மருத்துவ கவுன்சிலிலும் பதிவுசெய்துள்ளனர். இது குறித்தும் மருத்துவ கவுன்சிலுக்கு புகார் வந்ததையடுத்து, பதிவு செய்தவர்களின் உயர் படிப்புச் சான்றிதழ்கள் ஆய்வு செய்யப்பட்டுவருகிறது. 

இதுகுறித்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் செந்திலிடம் பேசினோம். "எம்.டி பிரிவில் 'எமர்ஜென்சி மெடிசன்' படித்தாக 59 பேர் பதிவு செய்தவர்களில் 48 பேர் அங்கீகாரமற்ற படிப்பைப் படித்திருக்கிறார். குறிப்பாக, இரண்டு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 'எமர்ஜென்சி மெடிசன்' படிப்புக்கு 2012-ம் ஆண்டில்தான் அனுமதி வாங்கியிருக்கிறார்கள். ஆனால், அந்தப் படிப்பை 2009-ம் ஆண்டிலேயே மேற்கண்ட கல்லூரிகளில் படித்தாக சான்றிதழ்களுடன் மருத்துவ கவுன்சிலில் பதிவுசெய்திருக்கிறார்கள். எனவே, இதுகுறித்து அவர்களின் சான்றிதழ்களைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுவருகிறோம். சரிபார்க்காமல் பதிவுசெய்த கவுன்சில் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறோம். இவர்கள்மீது எடுக்கப்படும் நடவடிக்கைகுறித்து மருத்துவ ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டு,  வரும் 10-ம் தேதி முடிவு அறிவிக்கப்படும். இதுபோன்ற அங்கீகாரமற்ற படிப்புகளைப் படித்துவிட்டு, க்ளினிக் அறிவிப்புப் பலகையிலும் மற்ற வகையிலும் அறுவைசிகிச்சை நிபுணர் என்று குறிப்பிடவோ, அதுபோன்ற சிகிச்சை அளிக்கவோ கூடாது.  மேலும், உரிய படிப்பு படிக்காமல், போலி சான்றிதழ்கள் பெற்று சிகிச்சை அளிப்பதாகத் தெரியவந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்கிறார் செந்தில்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க