குழந்தைகள் ஒரு நாளில் எவ்வளவு நேரம் டிஜிட்டல் திரைகளைப் பார்க்கலாம்? #Research | Children should be allowed for only two hours

வெளியிடப்பட்ட நேரம்: 20:23 (04/10/2018)

கடைசி தொடர்பு:20:23 (04/10/2018)

குழந்தைகள் ஒரு நாளில் எவ்வளவு நேரம் டிஜிட்டல் திரைகளைப் பார்க்கலாம்? #Research

ந்தியாவின் டிஜிட்டல் சந்தையைக் குறி வைத்து பல்வேறு தயாரிப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. `மக்களின் நலன்கருதி...' என்று வழிமுறைகளை எளிமைப்படுத்துகிறோம் என்று சொல்லி நம் அனைவரையும் டிஜிட்டல் பக்கம் இழுக்கிறார்கள். வயது வித்தியாசமின்றி எல்லோரும் அதில் முடங்கிக்கிடக்கிறார்கள். அதில் குழந்தைகள் மட்டும் விதிவிலக்கா என்ன!

குழந்தைகள் டிஜிட்டல் திரை

பொதுவாக, டிஜிட்டல் திரைகளுக்கு அதிகம் உட்படுத்தப்படாத குழந்தைகள், ஆற்றல் திறன் மிக்கவர்களாகவும் சுறுசுறுப்பானவர்களாகவும் வளர்வார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த தகவல்தான். ஆனால், 'ஒருநாளில் எவ்வளவு நேரம் குழந்தைகளை டிஜிட்டல் திரைகளைப் பார்க்க அனுமதிக்கலாம்' என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. அதற்கான பதில் சமீபத்திய ஆய்வின் முடிவில் கிடைத்துள்ளது.

குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினருக்கான ஆரோக்கியம் தொடர்பாக லேன்செட் (Lancet Child and Adolescent Health) நிறுவனம் நடத்திய இந்த ஆய்வில் எட்டு முதல் பதினொரு வயதுக்குட்பட்ட 4,500 குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்டனர். அதில், 37 சதவிகித குழந்தைகள் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக டிஜிட்டல் திரைகளைப் பயன்படுத்தியுள்ளனர். 51 சதவிகிதம் பேர் தினமும் 9 முதல் 11 மணிநேரம் தூங்கியுள்ளனர், 18 சதவிகிதம் பேர் தினமும் ஒரு மணி நேரம் நன்றாக விளையாடியுள்ளனர். ஐந்து சதவிகித பேர் இவை மூன்றையும் ஒருசேரச் செய்துள்ளனர். 71 சதவிகிதம் பேர் மூன்றில் ஏதாவது ஒன்றை மட்டும் பின்பற்றியுள்ளனர். 

டிஜிட்டல் திரை

அந்த ஆய்வின் முடிவில், மூன்றையும் பின்பற்றிய குழந்தைகள் மட்டுமே நல்ல ஆரோக்கியத்துடனும் சுறுசுறுப்புடனும் ஞாபகசக்தியோடும் இருப்பது தெரியவந்துள்ளது. டிஜிட்டல் திரைகளை அதிகம் பார்க்கும் குழந்தைகள் சரியாகத் தூங்குவதில்லை, விளையாடுவதில்லை என்பதும் தெரியவந்துள்ளது. எனவே, 'ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்துக்குமேல் டிஜிட்டல் திரைகளைப் பார்க்கக் கூடாது' என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதன்மூலம், மூளையின் செயல்திறனை அதிகப்படுத்தலாம். தூக்கம் மற்றும் உடலுழைப்பு பிரச்னைகளையும் சரிசெய்யலாம் என்பது அவர்களின் கருத்து.

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close