வெளியிடப்பட்ட நேரம்: 11:09 (06/10/2018)

கடைசி தொடர்பு:11:09 (06/10/2018)

மோசமான இறைச்சி பிரியாணி என்னென்ன பாதிப்புகளை உண்டாக்கும் தெரியுமா? #Alert

ஏற்கெனவே காக்காப் பிரியாணி, பூனைப் பிரியாணி என்றெல்லாம் வதந்திகள் பரவிவரும் நிலையில், நகரெங்கும் கிளைகள் கொண்ட ஓர் உணவகத்தின் மீது, தரமற்ற இறைச்சியைப் பயன்படுத்தியதாகப் புகார் கிளம்பியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 

மோசமான இறைச்சி பிரியாணி என்னென்ன பாதிப்புகளை உண்டாக்கும் தெரியுமா? #Alert

பிரியாணி இல்லாமல் எந்தக் கொண்டாட்டமும் நிறைவுறாது என்றாகி விட்டது. வீதிக்கு வீதி பிரியாணி உணவகங்கள் முளைத்துவிட்டன. இந்த நிலையில், ஆசிஃப் பிரியாணி உணவகம் மீது கிளம்பியுள்ள புகாரும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளும் பிரியாணிப் பிரியர்களை அதிர வைத்திருக்கிறது. சென்னையில், 18-க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டது ஆசிஃப் பிரியாணி ஹோட்டல். இதன் தலைமை நிறுவனம் கிண்டியில் செயல்பட்டு வருகிறது. அங்கிருந்துதான்  மற்ற அனைத்துக் கிளைகளுக்கும் பிரியாணி தயாரித்து அனுப்பப்படுகிறது. இந்தக் கடையில் உள்ள கிச்சனில் சுகாதாரமற்ற சூழ்நிலை நிலவியதைத் தொடர்ந்து, மாநில உணவுப் பாதுகாப்பு கமிஷனர் அமுதாவின் உத்தரவின் பேரில் கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

பிரியாணி

ஏற்கெனவே காக்காப் பிரியாணி, பூனைப் பிரியாணி என்றெல்லாம் வதந்திகள் பரவிவரும் நிலையில், நகரெங்கும் கிளைகள் கொண்ட ஓர் உணவகத்தின் மீது, தரமற்ற இறைச்சியைப் பயன்படுத்தியதாகப் புகார் கிளம்பியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 

சுகாதாரமற்ற பிரியாணியைச் சாப்பிடுவதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?  உணவியல் நிபுணர் தாரிணி கிருஷ்ணன்

``சுகாதாரமற்ற உணவுகளே உடல்நலனைப் பாதிக்கக்கூடியவைதான். அதிலும் கெட்டுப்போன அசைவ உணவுகள் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை`` என்கிறார் மூத்த உணவியல் நிபுணர் தாரிணி கிருஷ்ணன். 

``தரமற்ற உணவுகளைச் சாப்பிட்டால் வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவைதான்  முதலில் ஏற்படும். அதற்குப் பிரியாணியும் விதிவிலக்கல்ல. ஆனால், பிரியாணி, இறைச்சியுடன் தொடர்புடையதாக இருப்பதால் கூடுதலாக சில உடல்நலப் பாதிப்புகளும் உண்டாகும். சிக்கன் அல்லது மட்டன் பிரியாணியில் போடப்படும் இறைச்சிகள் கெட்டுப் போயிருந்தால், அதிலுள்ள கிருமிகள் அப்படியே பிரியாணியில் சேர்ந்துவிடும். உதாரணமாக இறந்து போன விலங்குகளில் அமீபா போன்ற நுண்ணுயிரிகள் அதிகமாக இருக்கும். அதிகளவு புரதச் சத்து இருப்பதாலும், சீக்கிரமாகவே கெட்டுப் போகக் கூடியதாகவும் இருப்பதாலும் மிக விரைவாக நுண்ணுயிரிகள் உட்புகுந்துவிடும். அந்த இறைச்சியைச் சரியாக வேகவைக்காமல் சாப்பிடும்போது அது நம் உடலிலும் கலந்துவிடும். அந்த நுண்ணுயிரிகள், எவ்வளவு நாள்கள் ஆனாலும் நம் உடலை விட்டுப் போகாது. எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ள நபர்களுக்கு உடனடியாக டயேரியா, மஞ்சள் காமாலை போன்ற பாதிப்புகள் ஏற்படுத்தும். சுகாதாரமற்ற உணவுகளால்தான் அதிகமாக மஞ்சள் காமாலை நோய் உண்டாகிறது`` என்கிறார் அவர்.

உணவு

``முன்பெல்லாம் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் செரிமானக் கோளாறு, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகள் இரைப்பை மற்றும் குடலியல் மருத்துவர் மகாதேவன்ஏற்பட்டது. தற்போது 10, 15 வயதுக் குழந்தைகளுக்கே அது உண்டாகிறது. தரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவுகளைச் சாப்பிடுவதே அதற்குக் காரணம்" என்கிறார் இரைப்பை மற்றும் குடலியல் மருத்துவர் மகாதேவன். 

"பிரியாணியைப் பொறுத்தவரை, தரமற்ற எண்ணெய், சுவையூட்டிகள், நிறத்துக்காகப் பயன்படுத்தப்படும் நிறமூட்டிகள் ஆகியவற்றால் அதிகமான உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும். முதலில் வயிறு மந்தமாகி செரிமானக் கோளாறு ஏற்படும். ஏப்பம், நெஞ்செரிச்சல் போன்ற பாதிப்புகளும் உண்டாகும். அதோடு, உணவில் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்ணுயிரிகள் இருந்தால் வாந்தி, பேதி, வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு போன்ற பாதிப்புகளும் ஏற்படும். சிலருக்குக் குடல் கெட்டுப் போய், குடல் புற்றுநோய் ஏற்படக்கூட வாய்ப்பிருக்கிறது. இதுபோன்ற உணவுகளை ஹோட்டல்களில் சாப்பிடுவதை விட வீட்டிலேயே தயாரித்துச் சாப்பிடுவதுதான் நல்லது..." என்கிறார் அவர். 

சுவைக்காகவும், கொண்டாட்டத்துக்காகவும் மட்டுமல்ல, நம் உடலின் ஆரோக்கியத்துக்காகவும்தான் நாம் சாப்பிடுகிறோம் என்பதைப் புரிந்துகொண்டாலே போதும், உணவு சுகாதாரம் குறித்த அக்கறை அனைவருக்கும் வந்துவிடும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்