இனி டி.டி தடுப்பூசியில் கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும்! #TetanusDiphtheria | Tetanus Toxoid replaced by Tetanus Diphtheria vaccine in government hospital

வெளியிடப்பட்ட நேரம்: 16:35 (06/10/2018)

கடைசி தொடர்பு:16:35 (06/10/2018)

இனி டி.டி தடுப்பூசியில் கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும்! #TetanusDiphtheria

''ள்ளிக் குழந்தைகளுக்கும், கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் போடப்படும் டெட்டனஸ் டாக்சாய்டு (Tetanus Toxoid ) தடுப்பு ஊசிக்குப் பதிலாக, இனி டெட்டனஸ்  டிப்தீரியா (Tetanus Diphtheria) ஊசி போடப்படும்'' என பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார். 

தடுப்பூசி

வண்டியில் செல்லும்போது விபத்து ஏற்பட்டு உடலில் லேசான சிராய்ப்பு  ஏற்பட்டாலோ, காலில் முள், ஆணி ஏதாவது குத்தி காயம் ஏற்பட்டாலோ , 'உடனே ஆஸ்பத்திரிக்குப் போய் ஒரு டி.டி போட்ருப்பா' என்பதே அனைவரின் அறிவுரையாக இருக்கும். 'டெட்டனஸ் டாக்சாய்டு' என்னும் இந்த மருந்து, ரணஜன்னி வருவதைத் தடுக்கும் ஒரு தடுப்பு மருந்தாகும்.  இந்தத் தடுப்பு மருந்து ஐந்தாவது, பத்தாவது படிக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கும், கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் அரசு மருத்துவமனைகளில்  இலவசமாகவே போடப்பட்டுவந்தது. இனிமேல்,  தொண்டை அடைப்பான் தடுப்பு மருந்தையும் சேர்த்து 'டெட்டனஸ்  டிப்தீரியா' தடுப்பு ஊசியே போடப்படும் எனத் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை இயக்குநர் குழந்தைசாமியிடம் பேசினோம்,

 `` பள்ளிக் குழந்தைகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் டெட்டனஸ் டாக்சாய்டுக்குப் பதிலாக டெட்டனஸ்  டிப்தீரியா தடுப்பு ஊசி போடப்படும். அதேசமயம், விபத்து, காயம் போன்ற பிரச்னைகளுக்கு ஏற்கெனவே போடப்பட்டுவந்த டெட்டனஸ் டாக்சாய்டு தடுப்பு ஊசியே போடப்படும். தேவைப்பட்டால், அவர்களுக்கும் டெட்டனஸ்  டிப்தீரியா போடப்படும். அதனால், கூடுதல் பாதுகாப்புதான் உண்டாகும்; எந்தப் பாதிப்பும் ஏற்படாது. டிப்தீரியா பாதிப்பால் இந்தியா முழுவதும் ஏராளமான குழந்தைகள் பாதிக்கப்பட்டுவருகிறார்கள். அதைத் தடுப்பதற்காகத்தான் இந்தப் புதிய மருந்து'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close