`ஏரியா நண்பர்களுடன் ஃபுட்பால்... 100 முறை தண்டால்..!’ - `அட்டகத்தி’ தினேஷ் ஃபிட்னெஸ் சீக்ரெட் | Actor Attakathi Dinesh shares his fitness secret

வெளியிடப்பட்ட நேரம்: 17:27 (06/10/2018)

கடைசி தொடர்பு:17:27 (06/10/2018)

`ஏரியா நண்பர்களுடன் ஃபுட்பால்... 100 முறை தண்டால்..!’ - `அட்டகத்தி’ தினேஷ் ஃபிட்னெஸ் சீக்ரெட்

வேலைநெருக்கடி எவ்வளவு இருந்தாலும், உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பாராம் தினேஷ். 

இயக்குநர் பா.இரஞ்சித்தின் `அட்டக்கத்தி’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் தினேஷ். தொடர்ந்து அவர் நடித்த `குக்கூ’, `ஒரு நாள் கூத்து’, `விசாரணை’, `கபாலி’ போன்ற படங்கள், அவருக்கு வெளிச்சம் தந்தன. தினேஷை, கதாநாயகன் எனச் சொல்வதைவிடவும் கதையின் நாயகன் எனச் சொல்வதே சரியாக இருக்கும். அந்த அளவுக்கு, கதாபாத்திர தேர்வில் கவனமாக இருப்பார் தினேஷ். 

அட்டகத்தி தினேஷ் - ஃபிட்னெஸ்

`அண்ணனுக்கு ஜே!' படத்தைத் தொடர்ந்து, அடுத்தடுத்து மூன்று படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் தினேஷ். வேலைநெருக்கடி எவ்வளவு இருந்தாலும், உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பாராம் தினேஷ். 

``எனக்கு வீட்டுச் சாப்பாடுதான் பிடிக்கும். எப்போதாவதுதான் வெளியில் சாப்பிடுவேன். வீட்டில் சமைக்கும் எந்த உணவையும் ஒதுக்க மாட்டேன். சாப்பாட்டின் அளவில் மட்டும் கவனமாக இருப்பேன். மட்டன் பிரியாணிதான் என் ஃபேவரைட். 

அட்டகத்தி தினேஷின் ஃபிட்னஸ் சீக்ரெட் - கால்பந்து

விளையாட்டைப் பொறுத்தவரை, நேரம் கிடைக்கும்போதெல்லாம் வீட்டுக்கு அருகில் இருக்கும் (சென்னை செவ்வாய்ப்பேட்டைப் பகுதி) நண்பர்களுடன் சேர்ந்து ஃபுட் பால் விளையாடுவேன். தண்டால் எடுப்பதும், ஓடியாடி விளையாடுவதும் எனக்கு நிறைய பிடிக்கும். நேரத்தைப் பொறுத்து 50 முதல் 100 தண்டால்கள் எடுப்பேன். மைதானத்துக்குப் போனால் ஐந்து முறை மெதுவாக மைதானத்தைச் சுற்றி வருவேன். இது என்னோட உடலமைப்புக்கானது. ஒவ்வொருத்தருடைய உடல் அமைப்புக்கும் இது மாறலாம். அவங்களுக்கு ஏத்தமாதிரியான உடற்பயிற்சியைத் தினமும் செய்தாலே உற்சாகமாக இருக்கலாம். உடற்பயிற்சிகளைவிடவும் வாழ்க்கைக்கு அவசியமானது மகிழ்ச்சியும் சந்தோஷமும். அது இருந்தாலே போதும், உடலும் மனசும் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்" என்கிறார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close