வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (09/10/2018)

கடைசி தொடர்பு:13:30 (09/10/2018)

நுரையீரல் புற்றுநோயைக் குணப்படுத்துமா திராட்சை!

வ்வொரு பழத்துக்கும் ஒரு மருத்துவ குணம் உள்ளது. இதில், திராட்சை ஒரு  அற்புதமான பழம். இதிலிருக்கும் டார்டாரிக் அமிலத்துக்கு பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. இயற்கையிலேயே  புளிப்பும் , இனிப்பும் இணைந்த சுவை கொண்டது. இப்போது, திராட்சையை வைத்து பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தப்படுகிறது. சமீபத்தில், ஜெனீவா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய  ஒரு ஆய்வில், திராட்சையின் தோல், விதைகள் மற்றும் ரெட் ஒயின் ஆகியவற்றில், 'ரெஸ்வெரட்ரால்' (resveratrol) என்ற  மூலக்கூறு இருப்பது தெரியவந்துள்ளது. இதைச் சாப்பிடுவதால், நுரையீரல் புற்றுநோயைக் குணப்படுத்தும் ஆற்றல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

திராட்சை

 

 

ஜெனீவா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், எலியை வைத்து ஓர் ஆய்வு நடத்தினர். "ஓர் எலிக்கு இந்த மருந்தைச் செலுத்தியதால் புற்றுநோய்க் கட்டிகள் 45 சதவிகிதம் குறைந்திருப்பது தெரியவந்தது" என்கிறார், இந்தப் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் மியூரியல் (Muriel). இவர் தலைமையிலான குழுவினர்,  26 வாரங்கள் இந்த ஆய்வை நடத்தியதில் இது தெரியவந்தது. திராட்சையில் இரும்புச்சத்து, தாமிரச்சத்து போன்றவை நிறைந்துள்ளன. அத்துடன்  ஏ, பி6, சி, கே வைட்டமின்கள் இருக்கின்றன.  இது, குடல் புற்று நோய், புராஸ்டேட் புற்றுநோயைத் தடுக்கும் என்று ஏற்கெனவே மருத்துவ ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது .