லட்சத்தில் ஒருவருக்கு வரும் நோயிலிருந்து மீண்ட சிறுமி தசபந்தி! | Orissa Child gets a new life because of chennai stanley hospital doctors

வெளியிடப்பட்ட நேரம்: 17:22 (10/10/2018)

கடைசி தொடர்பு:17:22 (10/10/2018)

லட்சத்தில் ஒருவருக்கு வரும் நோயிலிருந்து மீண்ட சிறுமி தசபந்தி!

லட்சத்தில் ஒருவர் பாதிக்கப்படும் Arteriovenous malformation என்ற ரத்தநாள நோயால் பாதிக்கப்பட்டிருந்த  ஒடிசாவைச் சேர்ந்த டீ கடைத் தொழிலாளியின் 12 வயது மகளுக்குச் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களின் மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் தசபந்தி என்ற சிறுமி. 

சிறுமி தசபந்தி - ஸ்டான்லி மருத்துவமனை

அவருக்குப் பிறந்தது முதலே மூக்கின் கீழ்ப்பகுதியிலும் உதட்டின் மேல்பக்கமும் கட்டி இருந்துள்ளது. நாளாக நாளாக, கட்டியின் அளவு பெரிதானது. மேலும் ஈறுகளிலிருந்தும் ரத்தக்கசிவு ஏற்படத்தொடங்கியுள்ளது. அதனால், பள்ளிக்குச் செல்ல முடியாமல் அவர் தவித்தார். பிறவி ரத்தநாளக் குறைபாடு என்பதால் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுத்துள்ளனர். இத்தகையச் சூழலில், சென்னை ஸ்டான்லி மருத்துவர்கள் தற்போது அச்சிறுமிக்கு ரத்தநாளப் பிரச்னையிலிருந்து நிரந்தரத் தீர்வை தந்துள்ளனர். 

சிறுமி தசபந்தி

சிறுமியின் ரத்த நாள சிறுதுளை (Endo vascular) மூலம் ரத்தத்தை உறைய வைக்கும் வேதியியல் பொருள்களை இந்தக் கட்டிகளின் உள்ளே செலுத்தி, அதனுள்ளே இருக்கும் ரத்த ஓட்டத்தை நிறுத்தியுள்ளனர். 48 மணி நேரம் கழித்து (கட்டியின் ரத்த ஓட்டம் முழுமையாக நின்ற பிறகு) கட்டி அகற்றப்பட்டு, முக சீரமைப்புக்கான அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது சிறுமி தசபந்தி, பாதிப்பிலிருந்து முழுமையாகக் குணமாகி நலமுடன் இருக்கிறாள்.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close