வெளியிடப்பட்ட நேரம்: 17:43 (10/10/2018)

கடைசி தொடர்பு:19:55 (10/10/2018)

பிரியாணி கெட்டுப்போன இறைச்சியில் செய்யப்பட்டதா? கண்டுபிடிப்பது ஈஸி! #Video

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் துர்நாற்றம் வீசிய நிலையில் இருந்த 2000 கிலோ இறைச்சி கண்டறியப்பட்டது.

பிரியாணி கெட்டுப்போன இறைச்சியில் செய்யப்பட்டதா? கண்டுபிடிப்பது ஈஸி! #Video

டந்த ஒருவாரகாலமாக சென்னையில் நடக்கும் ரெய்டுகள் பிரியாணி பிரியர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியைத் தந்துகொண்டிருக்கிறது. சுகாதாரமற்ற முறையில் பிரியாணி தயாரித்தற்காக, சென்னையின் பிரபலமான ஆசிஃப் பிரியாணி கடைக்குக் கடந்த 4-ம் தேதி சீல் வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பிரியாணி உணவகங்களுக்கு இறைச்சி எங்கிருந்து வருகிறது என்கிற ரீதியில் சென்னையின் பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

பிரியாணி 

அந்தச் சோதனையில், அண்ணாசாலை பாடிகாட் முனீஸ்வரர் கோயில் அருகே 500 கிலோ கெட்டுப்போன இறைச்சி பிடிபட்டது. அதற்கு அடுத்தநாளே, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் துர்நாற்றம் வீசிய நிலையில் இருந்த 2000 கிலோ இறைச்சி கண்டறியப்பட்டது. அதில் மாடு, பன்றியின் இறைச்சியும் கலந்திருந்தன. அதுதவிர சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஜெய்ப்பூரிலிருந்து வந்த ரயிலிலிருந்து 1700 கிலோ கெட்டுப் போன இறைச்சியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இன்று தெருவுக்குத் தெரு ஏராளமான பிரியாணி கடைகள் பெருகிவிட்டன. ஆனால், அங்கெல்லாம் தயாரிக்கப்படும் பிரியாணி சுகாதாரமான முறையில்தான் இருக்கிறதா?

பிரியாணியில் போடப்படும் இறைச்சி தரமானதுதானா என்பதை எப்படிக் கண்டறிவது?சங்கீதா நடராஜன் 

``பிரியாணியில் போடப்பட்டிருக்கும் இறைச்சியின் வாசனையைவிட, மசாலாவின் வாசனை அதிகமாக இருந்தால் அந்த இறைச்சி கெட்டுப் போயிருக்கிறது என்று அர்த்தம். ஏனெனில், நல்ல இறைச்சியில் செய்யப்பட்ட பிரியாணியில் அதில் போடப்பட்டிருக்கும் இறைச்சியின் வாசனைதான் தூக்கலாக இருக்கும்.  

மட்டன் பிரியாணியில் இறைச்சி கெட்டுப் போயிருந்தால், அதைத் தொட்டுப் பார்க்கும்போது மிகவும் மெலிதாக, அதேசமயம் சாப்பிடும்போது மெல்ல முடியாமல் மிகவும் கடினமாகவும் இருக்கும். சிக்கன் பிரியாணியில் இறைச்சி கெட்டுப் போயிருந்தால் தொட்டுப்பார்க்கும் போதும் சரி, சாப்பிடும்போதும் சரி இறைச்சி கடினமாகத்தான் இருக்கும். மற்ற பாகங்கள் மட்டுமல்லாமல் கொழுப்பும் கூட மிகவும் கடினமாக இருக்கும். ஆடோ, கோழியோ, கடல் உணவுகளோ கெட்டுப் போயிருந்தால் அதன் இயல்பான சுவையில் இருக்காது. அதை வைத்தே நாம் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்" என்கிறார் உணவியல் நிபுணர் சங்கீதா நடராஜன்.

இறைச்சி

சென்னை முழுவதும் பல இடங்களில் கெட்டுப் போன இறைச்சி விற்பனை ஜோராக நடந்துவருகிறது. தற்போது ரெய்டில் சிக்கியுள்ள அழுகிய இறைச்சிகள் கடைகளுக்கு மட்டுமல்ல. நேரடியாக மக்களுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. கடை என்றில்லை, அழுகிய மீனாட்சி பஜாஜ்இறைச்சியை வாங்கி வீட்டில் சமைத்துச் சாப்பிட்டாலும் அது கடுமையான உடல்நலப் பாதிப்பை உண்டாக்கும். அதனால், மக்கள் இறைச்சி வாங்கும்போது அது கெட்டுப்போகாத, தரமான இறைச்சிதானா என்பதைக் கண்டறிந்து வாங்கவேண்டும்.

எப்படிக் கண்டறிவது என்பதை விளக்குகிறார் டயட்டீஷியன் மீனாட்சி பஜாஜ்,

"கெட்டுப்போன இறைச்சியைத் தொட்டுப் பார்க்கும்போது அது வளவளவென்று இருக்கும். இறைச்சியின் மேற்பகுதியில் நூல் நூலாகக் காட்சியளிக்கும். இறைச்சியிலிருந்து ஒரு புளித்தவாசனை வரும். பொதுவாக, நல்ல இறைச்சி என்பது சிவப்பு நிறத்தில்தான் இருக்கும். அதுவே சிவப்பு கலந்த பிரவுன் நிறத்தில் காணப்பட்டால் அது கெட்டுபோன இறைச்சி. அதுதவிர வெள்ளை, கறுப்பு, பச்சை என ஏதாவதொரு நிறத்தில் புள்ளிகள் காணப்படும். சரியான வெப்பநிலையில், சரியான இடத்தில் பராமரிக்கப்படாத இறைச்சிகள் சீக்கிரமாகவே கெட்டுப் போகும். வாங்கும்போது அப்போது கண் முன்னே உரித்து வாங்குவதே நல்லது. வாங்கிய சிலமணி நேரங்களிலேயே சமைத்துவிடவேண்டும். வெகுநேரம் ஃபிரிட்ஜில் வைத்திருக்கக்கூடாது" என்கிறார் டயட்டீஷியன் மீனாட்சி பஜாஜ். 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்