வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (12/10/2018)

கடைசி தொடர்பு:18:10 (12/10/2018)

60 சதவிகிதம் பெண்களைத் தாக்கும் ஆர்த்ரைடிஸ்! World Arthritis Day!

லகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் முடக்குவாதம் பற்றி விழிப்பு உணர்வு ஏற்படுத்தவும், அதைப் பற்றி அறிந்துகொள்ளவும் 1996-ம் ஆண்டிலிருந்து அக்டோபர் 12-ம் தேதியை உலக ஆர்த்ரைடிஸ் தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

ஆர்த்ரைடிஸ் எனப்படும் மூட்டு வலிகளில் பெரும்பாலானவை, ஜீன்களால் மட்டுமே வருகிறது. அதாவது முன்னோர்களின் மரபணு மூலம் நமக்கும் வருகிறது. சில சமயம் கடுமையான விபத்துகளால் காலில் ஏற்படும் காயம் காரணமாகவும், ஆர்த்ரைடிஸ் தாக்குகிறது. ஆர்த்ரைடிஸ் நம்மைத் தாக்கியுள்ளது என்பதை சில எளிய வழிகள் மூலம் தெரிந்துகொள்ளலாம். அதாவது கால் மூட்டில் கடுமையான வலி இருப்பது, காலைக் குறிப்பிட்ட அளவுக்கு மேல் நகர்த்த முடியாமல் இருப்பது, மூட்டுகளில் கடும் எரிச்சல் ஆகியவற்றின் மூலம் அறியலாம். மேலும் மூட்டுகள் விரைப்பு, வீக்கம், சிவந்திருத்தல், எரிச்சலாக இருக்கும் இடத்தில் தசைகள் மிகவும் தளர்வாக இருத்தல் ஆகியவையும் ஆர்த்ரைடிஸ்ஸின்  அறிகுறிகளாகும்.

 ஆர்த்ரைடிஸ்

இவை நேரடியாக மூட்டுகளைத் தாக்காவிட்டாலும், பின்விளைவாக அதைச் செய்கின்றன. இதனால் சிலருக்கு காய்ச்சல், வீக்கங்கள், உடல் எடை இழப்பு, உடல் நலம் இல்லாததுபோலவே இருப்பதுபோன்ற ஒரு நிலை இருத்தல், நுரையீரல், இதயம், சிறுநீரகங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளிலும் சுணக்கம் இருத்தல் ஆகியவற்றின் மூலம் அவர்களுக்கு ஆர்த்ரைடிஸ் தாக்கியிருப்பது கண்டறியப்படுகிறது. ஆர்த்ரைடிஸ் என்பது ஆண், பெண், குழந்தைகள், சிறுவயதினர் என்று எல்லாத் தரப்பினரையுமே தாக்கும். கடந்த 2017-ம் ஆண்டு இந்தியாவில் மட்டும் 18 கோடிக்கும் அதிகமானோர் ஆர்த்ரைடிஸ்ஸால்  பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 65 வயதுக்கு உட்பட்டவர்கள். உலகம் முழுவதும் ஆர்த்ரைடிஸ் தாக்கப்பட்டவர்களில் 60 சதவிகிதம் பேர் பெண்கள்.  இந்தியாவில் 90 சதவிகித கிராமப்புறத்தினர் ஆர்த்ரைடிஸ் பாதிப்புக்கு சிகிச்சை எடுப்பதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ஆர்த்ரைடிஸ்

இந்தப் பாதிப்பிலிருந்து தப்பிக்க என்ன செய்யலாம். பிஸியோதெரபிஸ்ட்டிடம் சென்றால், இதற்கான சிறப்பு உடற்பயிற்சிகளைச் சொல்லிக்கொடுப்பார். உடலில் கை, கால், தசை, மூட்டுகள் என எதாவது ஒரு பகுதிகளில் வலி, வீக்கம் ஒரு மாதத்துக்கு மேல் இருந்தால் அது முடக்கு வாதமாக இருக்கலாம். எனவே, உடனடியாக எலும்பு, தசை, இணைப்புதிசு போன்ற துறையின் மருத்துவர்களை அணுகி ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். மூட்டுவலிக்காகக் கொடுக்கப்படும் மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைத்த நாள்கள் வரை தொடர்ச்சியாக உட்கொள்ள வேண்டும். வலி குணமாகிவிட்டது என தாங்களாகவே மருந்து, மாத்திரைகளை நிறுத்திவிடக் கூடாது. ஆண்களைவிட, அதிகமாகப் பெண்களே பாதிக்கப்படுகிறார்கள். எனவே, பெண்கள் அதிக எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். முடக்கு வாதத்தின் அறிகுறிகளை அலட்சியப்படுத்தக்கூடாது. ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு, நாள்தோறும் உடற்பயிற்சி செய்வதையும் வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க