ஸ்டான்லி மருத்துவமனையில் செயல்பட இருக்கிறது ரூ. 6 கோடி மதிப்புள்ள அதிநவீன கதிரியக்க இயந்திரம்! | In Government Stanley Medical Hospital new Pipeline cathlab machine to be installed soon

வெளியிடப்பட்ட நேரம்: 21:50 (12/10/2018)

கடைசி தொடர்பு:21:50 (12/10/2018)

ஸ்டான்லி மருத்துவமனையில் செயல்பட இருக்கிறது ரூ. 6 கோடி மதிப்புள்ள அதிநவீன கதிரியக்க இயந்திரம்!

பைப்லைன் கேத்லேப் (Pipeline cathlab) எனப்படும் அதிநவீன கதிரியக்கக் கருவி விரைவில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் செயல்பட இருக்கிறது. 

ஸ்டான்லி மருத்துவமனை

1,661 படுக்கைகள், 61 மருத்துவர்கள், 332 செவிலியர்களுடன் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது சென்னை ஸ்டான்லி மருத்துவமனை. தினசரி 1,585 உள்நோயாளிகளும் 5,000 வெளிநோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சர்க்கரை நோய், இதய நோய் என ஒவ்வொரு நோய்களுக்கும் தனித்தனி பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றுள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுவரும் ஒரு துறை கதிரியக்கத்துறை (Radiology Department).  

ரேடியோதெரபி' (Radiotherapy), 'மேக்னடிக் ரிசோனான்ஸ் ஆஞ்சியோகிராம்' (Magnetic Resonance Angiogram), 'சி.டி ஸ்கேன்' (CT Scan), டிஜிட்டல் எக்ஸ்ரே, 'காத் லேப்' (Cath lab), 'எக்ஸ்ரே' (X ray), 'அல்ட்ரா சோனோகிராஃபி' (Ultra Sonography),'மேமோகிரஃபி' (Mammography) எனப் பலவகையான சிகிச்சை சாதனங்கள் இருக்கின்றன. இன்னும் சில நாள்களில் கூடுதலாகப் பைப்லைன் கேத்லேப் (Pipeline cathlab) எனப்படும் ஆறு கோடி மதிப்புள்ள அதிநவீன கதிரியக்க இயந்திரமும் செயல்பட இருக்கிறது. இயந்திரம் வாங்கப்பட்டு, அது செயல்படுவதற்குத் தேவையான கட்டுமான வேலைகள் தற்போது நடந்துவருகிறது. விரைவில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சரின் தலைமையில் தொடக்கவிழா நடைபெற இருக்கிறது.

மூளையில் உறையும் ரத்தக்கட்டியைக் கரைக்கவும் ரத்தக்குழாயின் வழியாக மூளைக்குள்ளே அறுவை சிகிச்சை செய்யவும் ரத்தவாந்தி, சளியில் ரத்தம் கலந்து வெளியேறுபவர்களுக்கு ரத்தம் எங்கிருந்து வருகிறது என்பதைக் கண்டறிந்து சரிசெய்யவும், பெண்களுக்கு கர்ப்பப்பையில் உண்டாகும் ரத்தப்போக்கை நிறுத்தவும், கால் அழுகிப் போனவர்களுக்கு ரத்தக் குழாயை விரிவடையச் செய்யவும் இந்த அதிவீன கருவி உதவுகிறது. 

இந்தக் கருவி செயல்பாட்டுக்கு வரும்போது மக்களுக்கு மிகவும் பயனுள்ளாதாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close