வெளியிடப்பட்ட நேரம்: 19:17 (17/10/2018)

கடைசி தொடர்பு:19:41 (17/10/2018)

கொஞ்சம் அன்பு தர முடியுமா? #NeedHelp Sponsored Content

சாரதாவுக்கு வயது 50. காலை 6 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார். தனக்கு கொடுக்கப்படும் டீயை அருந்திவிட்டு, தியானம் செய்வார். பிறகு, பக்கத்தில் இருக்கும் கோயிலுக்குச் செல்வார். திரும்பும்போது, காலை உணவு தயாராகி இருக்கும். உணவுக்குப் பின் கொஞ்ச நேரம் ஓய்வு, பிறகு நண்பர்களுடன் பேச்சு, அதன்பின் மதிய உணவு நடைபெறும். பிறகு கொஞ்ச நேரம் டி.வி., அதன்பின் நண்பர்களுடன் பேச்சு அல்லது கோயில் அல்லது நடைப்பயணம். இரவு 8 மணிக்கு இரவு உணவு, பின் தூக்கம். ஒன்றைச் சொல்லவில்லையே... சாரதாவுக்கு தாய் தந்தை என யாருமில்லை. குழந்தைகள் இல்லை. திருமணம் நடந்திருந்தால்தானே பிள்ளைகள்? சாரதாவுக்கு வலிப்பு நோய். அதனால், அவரை கட்டிக்கொள்ள யாரும் முன்வரவில்லை. தலையில் ஆபரேஷன் முடிந்தபின் தூரத்து சொந்தம் ஒருவர் அவரைக் கண்காணித்துவந்தார். பின் அவராலும் கவனித்துக்கொள்ளமுடியாத சூழ்நிலை. சாரதா ஸ்ரீ பத்மாவதி அம்மா, முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார். இப்போது, இந்த இல்லம்தான் சாரதா அம்மாவின் உறைவிடம். அவருக்கு என இருப்பது அந்த இல்லத்தில் இருக்கும் பிற இல்லத்தினர் மட்டுமே!

இது ஒரு சாரதாவின் கதைதான், ஆனால் இதைப்போல பல சாரதாக்கள் இங்குள்ளனர். தள்ளாடும் முதுமையால் பிள்ளைகளால் கைவிடப்பட்டோர், நோய்வாய்ப் பட்டதால் சரியாக பராமரிக்க இயலாமல் சேர்க்கப்பட்டோர், பெண் பிள்ளைகளுக்குத் திருமணம் ஆகிச் சென்றுவிட்டதால் கவனிக்க ஆள் இல்லாதவர்கள், பல பிள்ளைகள் இருந்தும் யார் வைத்து கவனித்துக்கொள்வது எனும் பிரச்னையால் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டவர்கள், கணவனை இழந்து தனித்து வாழும் பெண்கள், வாழ்க்கைத் துணையின்றி இருக்கும் முதியோர்... இப்படி இங்கு வசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை இருக்கிறது. ஆனால், கதையின் சாராம்சம் எல்லாம் ஒன்றுதான். அன்புக்கு ஏங்கும் ஜீவன்கள் இவர்கள்.

வாழ்வைப் பூரணமாக்குவது அன்பு. துயரமான நேரங்களில் மனதுக்கு ஆறுதலாக ஒருவர் பேசும் வார்த்தைகளும், வாழ்வில் பிடிப்பில்லாமல் மனதே சூன்யமாகிக் கிடக்கும்போது நம் அன்புக்கு உரியவர்கள் தரும் அரவணைப்பும், அதன் முக்கியத்துவமும் அது தரும் தன்னம்பிக்கையும் சொல்லில் எடுத்துக்கூற முடியாதவை. அவை உணர்ந்துகொள்ளப்படவேண்டியவை. விலங்குகள் எதுவும் கடமை பாராட்டி, குட்டி விலங்குகள் வயதான தன் தாய் தந்தையைப் பார்த்துக்கொள்வதில்லை. ஆனால், மனித சமுதாயம் விலங்குகளில் இருந்து அப்பாற்பட்டு நிற்கக் காரணம், அன்பின் வழி கட்டமைக்கப்பட்டிருக்கும் உறவுகள். இடது கண்ணில் தூசி விழுந்தால், வலது கண்ணும் கலங்குவதுபோல, குடும்பத்தில் ஒருவருக்கு ஏற்படும் வேதனை அனைவரையும் பாதிக்கும். ஒருவர் அந்த சோகத்தில் இருந்து மீள, தெரிந்த பந்தங்கள் எல்லாம் கைகொடுக்கும், தூக்கிவிடும். ஆனால், சிலருக்கோ பல காரணங்களால் இதெல்லாம் வாய்க்காமல் போகிறது. விதியின் வழிவந்த வாழ்க்கையில், கணவனோ, மனைவியோ, பிள்ளைகளோ, பிற எந்த சொந்தமோ இல்லாமலேயே தங்களின் இறுதிக்காலத்தை வெறுமையாய்க் கழிக்கும் கையறுநிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

வாழ்க்கை எல்லாம் ஓடித்திரிந்து, ஓய்வுபெறவேண்டிய வயதில் இவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் என்ன? அன்பாய் பரிவாய் அக்கறையாய் இரண்டொரு வார்த்தைகள் பேச ஒரு உள்ளம், அவ்வளவுதான்... தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷங்கள் அல்லது பிறந்தநாள், திருமண நாள் போன்ற தினங்களில் இங்கு வந்து சிலர் இவர்களோடு செலவிடும் நேரத்தை அவர்களால் வாழ்வில்  மறக்கவே முடியாது. 100 அன்னை தந்தையர் வாழ்த்தோடும், ஆசிர்வாதத்தோடும் திரும்பிச் செல்பவர்களுக்கு ஏற்படும் உவகை அளப்பரியது, அன்பு குறித்த நம் வாழ்வின் கண்ணோட்டத்தையே மாற்றிவிடக்கூடியது, இவர்களுடன் நாம் கழிக்கும் சில மணித்துளிகள்...

ஸ்ரீ பத்மாவதி அம்மா முதியோர் இல்லத்தில், தற்போது 80-க்கும் மேற்பட்ட முதியவர்கள் (தாய்மார்கள் அதிகம்) காக்கப்பட்டுவருகின்றனர். உணவு, மருத்துவத் தேவைகள், ஆடைகள், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளுக்கு ஆகும் செலவை சில நல்ல உள்ளங்கள் செய்துவந்தாலும், பற்றாக்குறையை சமாளிக்க அரும்பாடுபட்டுவருகிறது மேலாண்மை. இங்குள்ள முதியவர்களின் நலன்வேண்டி நம்மால் ஆன பண உதவியைச் செய்ய www.padmavathiammaagedhome.com/donate.phpஎனும் வலைதளத்தை நாடவும். மேலும் விவரங்களுக்கு, 92822 34541 / 72000 29170.

வாழ்வில் துணையின்றி வருந்தும் இந்த உள்ளங்களுக்கு உதவுவோம், தர்மம் காப்போம்! கண்கள் இல்லா மனிதருக்கு கால்கள் என நாம் நடந்தால், நம் பூமியில் அநாதை யார்... அநாதை யார்?

பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரை   ஸ்ரீ பத்மாவதி அம்மா முதியோர் இல்லத்தின் விளம்பரதாரர் பகுதி. இதில் கூறப்பட்டுள்ள உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் விகடன் நிர்வாகம் பொறுப்பல்ல. மேலும், வாசகர்கள் இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு, தங்களுடைய தனிப்பட்ட விருப்பம். நன்கொடை செய்வதற்கு முன்னர், வாசகர்கள் உண்மைத்தன்மையை சுயாதீனமாக சரிபார்த்துக்கொள்ளவும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க