`கல்வி மருத்துவச் செயல்பாடுகளுக்கான தரவரிசை!’ - உலக அளவில் இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா? | India ranks 158th in the world for education and health care

வெளியிடப்பட்ட நேரம்: 21:55 (22/10/2018)

கடைசி தொடர்பு:22:17 (22/10/2018)

`கல்வி மருத்துவச் செயல்பாடுகளுக்கான தரவரிசை!’ - உலக அளவில் இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?

வாஷிங்டனில் உள்ள `உடல்நலம் மதிப்பீடு செய்யும் நிறுவனம்' (Institute for Health Metrics and Evaluation) உலகளவில் கல்வி மற்றும் மருத்துவச் செயற்பாடுகளில் முன்னிலை வகிக்கும் நாடுகள் குறித்து ஓர் ஆய்வை மேற்கொண்டது. அதன்முடிவில் தரவரிசைப் பட்டியல் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. 

கல்வி பயிலும் மாணவர்கள்

ஒவ்வொரு நாடும், கல்வி, மருத்துவத்துக்கு எவ்வளவு தொகையை முதலீடு செய்துள்ளது என்பதையும், ஜி.டி.பி (GDP) மற்றும் ஹியூமன் கேபிடல் (Human Capital) போன்றவற்றையும் அடிப்படையாக வைத்து இந்தப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. 

195 நாடுகளை உள்ளடக்கி நடத்தப்பட்ட இந்த ஆய்வில், இந்தியாவுக்கு 158 வது இடம் கிடைத்துள்ளது. 1990-ம் ஆண்டு இந்த அமைப்பு நடத்திய ஆய்வில் இந்தியா 162வது இடத்தில் இருந்தது. எனவே, இது குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் பட்டியலில் முதலிடத்தை பின்லாந்து நாடு பிடித்துள்ளது. 42 வது இடத்தில் அமெரிக்கா, 44 வது இடத்தில் ஜப்பான், 49வது இடத்தில் ரஷ்யா, 164வது இடத்தில் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன.  

மருத்துவ மதிப்பீட்டுக்கான சுகாதாரச் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு, ரத்தச்சோகை, காதுகேளாமை, பார்வைக் குறைபாடு, அறிவாற்றல் பிரச்னைகள், ஹெச்.ஐ.வி, மலேரியா, காசநோய் போன்ற பிரச்னைகள் யாவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க