டெங்கு, பன்றிக்காய்ச்சலைத் தடுக்க நடமாடும் கொசு ஒழிப்பு வாகனங்கள்! | Tamilnadu government creating awareness for Dengue fever

வெளியிடப்பட்ட நேரம்: 21:50 (23/10/2018)

கடைசி தொடர்பு:21:50 (23/10/2018)

டெங்கு, பன்றிக்காய்ச்சலைத் தடுக்க நடமாடும் கொசு ஒழிப்பு வாகனங்கள்!

மிழகத்தின் சில இடங்களில் வேகமாகப் பரவிவரும் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலைத் தடுக்க, தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. 

டெங்கு காய்ச்சல் தடுக்க நடவடிக்கை

அதன் ஒருபகுதியாக இன்று, சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில், டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்பு உணர்வுக் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக, நடமாடும் மருத்துவக் குழுக்கள் மற்றும் கொசு ஒழிப்பு விரைவு குழுக்கள் அடங்கிய 82 வாகனங்களை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்  கொடியசைத்துத்  தொடங்கிவைத்தார்.

மேலும், டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்குறித்த விழிப்பு உணர்வு கண்காட்சியையும்  தொடங்கிவைத்துப் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில், துறை சார்ந்த அதிகாரிகளும் மருத்துவர்களும் பங்கேற்றனர். டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்கவும் கட்டுப்படுத்தவும், மாவட்டம்தோறும் கண்காணிப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.