80 நிமிடங்கள் ஆடாமல், அசையாமல் இருந்து மாணவர்கள் சாதனை! | Awareness Program on Organ Donation

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/10/2018)

கடைசி தொடர்பு:06:00 (26/10/2018)

80 நிமிடங்கள் ஆடாமல், அசையாமல் இருந்து மாணவர்கள் சாதனை!

சென்னை, சோழிங்கநல்லூர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் உடலுறுப்பு தானம் குறித்து விழிப்பு உணர்வுத்  திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. 

மாணவர்கள் சாதனை

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் 4000-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டனர். 80 நிமிடங்கள் நடைபெற்ற நிகழ்ச்சியில் அனைத்து மாணவ, மாணவிகளும் ஆடாமல் அசையாமல் அமர்ந்திருந்தனர். இது ஒரு சாதனை முயற்சி எனக் கூறப்படுகிறது.    

இதில் கலந்துகொண்ட மருத்துவர் மீனாட்சி சுந்தரி உடலுறுப்பு தானம் குறித்து பேசுகையில்,  ``ஒருவர் நுரையீரல், கல்லீரல், கணையம், சிறுநீரகம், குடல், தசைநார்கள், தசை நாண்கள், எலும்பு, நரம்பு, தோல், இதயம், கண் ஆகிய பகுதிகளை தானம் செய்ய முடியும். உடலுறுப்பு தானம் செய்ய முன்வருவோர் தங்கள் விவரங்களை ஆன்லைன்  மூலமாக பதிவு செய்யலாம். ஒருவர் இறந்தபிறகு அவரின் இதயம் 4 முதல் 6 மணிநேரம் வரை செயல்பாட்டில் இருக்கும். அதற்குள் `ஆர்கன் ப்ரொக்யுர்மண்ட் ' (organ procurement) என்னும் அமைப்புக்குத் தகவல் தெரிவித்து, அவர்கள் மூலம் உடலில் இருந்து இதயத்தை அகற்றி, பராமரித்துத் தேவையான நபருக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்த வேண்டும். 

அமைச்சர் விஜயபாஸ்கர்

கடந்த 2017-ம் ஆண்டில் இந்தியாவில்  34,770 பேருக்கு உடலுறுப்புகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. சராசரியாக ஒரு நாளைக்கு 18 முதல் 20 பேர் உடல்  உறுப்புகள்  கிடைக்காமல் இறக்கின்றனர். ஒவ்வொரு 10 நிமிடத்துக்கும் ஒருவருக்கு உடலுறுப்பு தேவைப்படுகிறது.  இந்தியாவில்  உடலுறுப்பு தானம் செய்வதில் தொடர்ந்து மூன்றாவது முறையாக தமிழகம் முதல் இடத்தைப் பெற்று வருகிறது" என்றார்.