உயரமானவர்களுக்கு அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு! | Why tall people run a greater risk of getting cancer

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (26/10/2018)

கடைசி தொடர்பு:17:40 (26/10/2018)

உயரமானவர்களுக்கு அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு!

உயரமாக இருப்பவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான கூடுதல் வாய்ப்புகள் உண்டு!

குள்ளமானவர்களைவிட உயரமானவர்களுக்குப் புற்றுநோய் வரலாம் " என்று அதிர்ச்சி அளிக்கிறார்கள் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். 

உயரமானவர்களுக்கு புற்றுவாய்ப்பு அதிகம் - ஆய்வு முடிவு

புற்றுநோயாளிகளிடம் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஓர் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வு முடிவில் புற்றுநோய் ஏற்படக்கூடிய ஆபத்து உயரமாக உள்ளவர்களுக்குக் கணிசமான அளவு அதிகம் என்று தெரியவந்துள்ளது. `சராசரி உயரத்தைவிட ஒவ்வொரு 10 செ.மீ  வளர்ச்சிக்கும் தலா 10 சதவிகிதம் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்" என்று அந்த ஆய்வில் கண்டறிந்திருக்கிறார்கள்.

புற்றுநோய் ஏற்படுத்தும் புற்று செல்கள்

இங்கிலாந்து, அமெரிக்கா, தென்கொரியா, ஆஸ்திரியா, நார்வே, ஸ்வீடன், நாட்டிலும் இதுபோன்ற ஆய்வுகள் நடத்தப்பட்டன. ஆண்கள், பெண்கள் என சுமார் 10,000 புற்றுநோயாளிகள் ஒவ்வோர் ஆய்விலும் உட்படுத்தப்பட்டனர். அதில் வாய், இரைப்பை, வயிறு போன்ற உறுப்புகளில் ஏற்படும் 18 வகையான புற்றுநோய் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் தற்போது கலிபோர்னியா பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகளுடன் இணைந்து போகின்றன.

உயரமானவர்களின் உடலில் அதிக அளவு செல்கள் இருப்பதால், அவை அசாதாரணமாக வளர்ந்து புற்றுச்செல்களாக மாறுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறது அந்த ஆய்வு. உடலின் உயரத்துக்குக் காரணமான உயிரியல் செயல்பாடுகள் புற்றுநோய் வளர்ச்சியையும் தூண்டலாம் என்றும், அதனால் வளர்ச்சியுடன் தொடர்புடைய உயிரியல் செயல்பாடுகளே புற்றுநோய் ஏற்படக் காரணமாக இருக்கின்றன என்றும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க